பெண்கள் மற்ற பெண்களிடமோ அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது அந்தரங்க உறுப்புகளை எப்படி குறிப்பிடுவர்?

பெண்கள் மற்ற பெண்களிடமோ அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது அந்தரங்க உறுப்புகளை எப்படி குறிப்பிடுவர்?

பெண்கள் மற்ற பெண்களிடமோ அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது அந்தரங்க உறுப்புகளை எப்படி குறிப்பிடுவர்?


பெண்கள் மற்ற பெண்களிடமோ அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது அந்தரங்க உறுப்புகளை எப்படி குறிப்பிடுவர்? 

இந்த சந்தேகம் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பல பெண்களிடையே நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்... அதற்கான ஒரு தீர்வாக நான் எழுதியிருக்கும் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்... நான் தீர்வளித்திருக்கும் இந்த கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும். கருத்துக்கள் அனைத்தையும் வரவேற்கப்படுகின்றது...

சரி வாருங்கள் நாம் பதிலை பார்ப்போம்...

காலேஜ் மூனாவது வருசம் படிக்கும் போது ஏதோ ஒரு முக்கியமாக கிளாஸ் நடந்துட்டு இருந்துச்சு.. இன்னமும் 10 நிமிஷத்துல பிரேக். அதுக்குள்ள ஆரம்பிச்ச ஒரு கணக்க சீக்கிரமா முடிக்கணுமேன்னு அந்த மேடம் வேக வேகமாக புரியவைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து பொண்ணுங்கள எல்லாம் டைமெண்ட் ஜூப்ளீ ஹால்க்கு வர சொன்னாங்கன்னு சொல்றாரு.. அந்த மேடம் நடத்தி முடிச்சிட்டு தான் விட்டாங்க.. பிரேக் விட்டு 2 நிமிஷம் முடிஞ்சுருச்சு.

நாங்க பிரேக் முடிஞ்சு அந்த ஹால் க்கு போலாமா இல்ல இப்போவே போலாமான்னு யோசிச்சு பெரிய பேச்சுவார்த்தையெல்லாம் நடத்திட்டு பிரேக்க முடிச்சுட்டு தான் உள்ள போனோம்.. அதோட விளைவு எங்களுக்கு முதல் வரிசையில கெடச்ச எடம்..

வேற வழி இல்லாம உக்காந்தோம்..கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு அழகான மேடம் உள்ள வந்தாங்க.. இன்ட்ரோ பண்ணிட்டு நேர விசயத்துக்கு வந்தாங்க..அங்கிட்டு இங்கிட்டும் திரும்பாம கவனிக்க வேண்டியதா இருந்துச்சு.. மார்பக புற்றுநோய், மாதவிடாய் பிரச்சனைகள் , இதெல்லாம் வராம இருக்க என்ன செய்யணும், என்ன சாப்பாடு சாப்பிடணும் இத பத்தி லாம் பேசுனாங்க. 2 மணிநேரம்..

எல்லாம் முடிச்சுட்டு ஒரு PG அக்காவ எழுப்பிவிட்டு ஒரு கேள்வி கேட்டாங்க.. அந்த அக்கா க்கு சொல்ல வாய் வரவே இல்ல. அவ்வளவு கூச்சம்.

அந்த மேடம், " என்னம்மா இவ்வளவு கூச்சப்படுறீங்க? அது ஒரு உடல் உறுப்பு தான? பொண்ணுங்களா தான இருக்கோம். இதுக்கே இவ்வளவு கூச்சப்படுறீங்க? பின்ன எப்டி நான் சொன்னத லாம் வீட்ல போய் சொல்லுவிங்க? உங்களுக்கே ஏதாச்சும் பிரச்னைன்னு வந்தா எப்டி டாக்டர்கிட்ட சொல்லுவீங்க? ன்னு கேள்வி கேட்க, அந்த அக்கா திரு திருன்னு முழிச்சாங்க.

எனக்கு இன்னும் இதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு..

இத ஏன் சொல்றேன்னா, எனக்கு தெரிஞ்சு யாரும் அப்படி பேசிக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். என்கிட்ட பேசுனது இல்ல. நானும் யார்கிட்டயும் அத பத்திலாம் பேசுனது இல்ல. என் அம்மாகிட்ட கூட.. அப்படி ஒரு சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தா, பிரைவேட் ஏரியான்னு சொன்னாலே போதும்... இல்லையெனில் வேஜினா அல்லது எனது உறுப்பு என்றும் சொல்லலாம்... 

பல ஆண்கள் கொச்சையாக பேசிவருகிறார்கள் நாமும் அவ்வாறெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை... 

ஆனால் உங்களுக்கு அந்த இடங்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தைரியமாக நீங்கள் அம்மாவிடம் பேசலாம்... கொச்சையாக அல்ல... நார்மலாகவே அதுவும் கூச்சமின்றி பேசினால் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்...

இதென்ன அவ்வளவு curious ஆன விசயமா?

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும்..

மறக்காமல் உங்களது தோழிகளுக்கு ஷேர் செய்து அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...

மீண்டும் ஒரு சுவாரசியமான கேள்வி பதில்களுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்...
Previous Post Next Post

نموذج الاتصال