வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!

வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!


வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!


இரவில் வெந்தயம் ஊற வைத்து காலையில் அப்படியே முழுங்கலாமா இல்லை மென்று முழுங்க வேண்டுமா? எது நல்லது?

எங்கள் வீட்டில் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை நான் மென்று விழுங்குவதும், கணவர் அப்படியே விழுங்குவதும் வழக்கம். எப்படியோ வெந்தயம் தினமும் எடுத்துக் கொள்கிறோம் என்பது நல்ல விஷயமே.

"மூலிகைகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வெந்தயம் ஊற வைத்த நீரை அருந்தி வருவதால்

► உடலில் அமிலத்தன்மைகளை சரி செய்ய உதவுகிறது.

► நெஞ்செரிச்சல் சரி ஆகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.

► நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

► உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.

► மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை குணமாக்குகிறது.

► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

► பக்கவாதம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.

► பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.

► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. "

வெந்தயம் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறையத் தொடங்கும். *அதிகமாக வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். *சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சைனஸ் பிரச்சினையால் சளி இருமல் அதிகமாகும்.

ஆனால் என் அனுபவத்தில் சளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலை வெறும் வயிற்றில் இரவே ஊறவைத்த வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி+ சீரகம் இரண்டு சிட்டிகை மென்று சாப்பிட்டு அந்த நீரையும் பருகுவது என் வழக்கம். சளி பிடிப்பது இல்லை. ஏற்கெனவே இருந்த சைனஸ் பிரச்னைகள் கடந்த இரு வருடங்களாக சீரகம் சேர்க்க ஆரம்பித்த பிறகு வருவதே நின்று விட்டது! அவரவர் உடல் வாகுக்கு எது சரியாக வருகிறதோ அதை பின்பற்றலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال