முதலிரவில் என்ன செய்ய வேண்டும்...?
எல்லாத்தையும் தியரியாவே படித்த என் மாணவர்களை திடீரென்று ஆய்வு கூடத்தில் விட்டுட்டு, அதான் வகுப்பறையில் சொல்லி குடுத்தேனே கவனிக்கல? அப்படினு கேட்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
அதே தான். முதல் இரவு முடித்து வெளியே வரும் புதுமண தம்பதிகளிடம் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதாப்பானு?" கேட்பது.
உடல் பாகங்கள் பற்றி நம் கல்வி முறை பெரிதா ஏதும் சொல்லிதரல. படத்திலும் இலை மறைவு காய் மறைவாகவே காண்பித்து விட்டு கல்லாவில் காசு கட்டினால் போதும் கடமை முடிந்ததென்று கைவிரித்து விட்டார்கள்.
பெற்றோர் இதைப் பற்றி பேசுவதே இல்லை, கல்வி முறையும் உடல் பாகங்கள் மற்றும் அதன் தேவைகளை கற்று தர வெட்கப்பட்டதன் விளைவு, இந்த பாடத்தை கற்க எம் தலைமுறையினர் சன்னி லியோன் மற்றும் சகிலா அக்காவின் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதாயிற்று.
ஒரு விசயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் என்பதும் ஒரு பாடம் தான். அதை ஏன் வெளிப்படையாக யாரும் அடுத்த தலைமுறைக்கு கற்று தருவதில்லை என்பது நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுள் ஒன்று தான்.
இதை கற்றுதர மறுத்துவிட்டு, உலகில் அதிகம் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் நாடுகளில் என் நாடும் என் நாட்டு மக்களும் முதலிடம் பிடித்தார்கள் என்று வேதனைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
இதை யாரோ ஒருவர் கற்றுக் கொடுத்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்றால் அந்த கற்றுக்கொடுக்கும் பணியை முதலில் கையில் எடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
முதல் இரவில் என்ன செய்ய வேண்டும்?
இது முழுவதும் ஒரு practical question.
இளைய தலைமுறையினர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த முதல் இரவு என்னும் practical தேர்வில் முதல் முறை தேர்ச்சி பெறுபவன் உண்மையில் முதல் முறை முயன்றவனாக இருக்க முடியாது.
இந்த கேள்விக்கு எதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும். கேள்விக்கான விடை கிடைத்துவிடும்.
இந்த கேள்விக்கான பதில் திருமணம் ஆகாதவர்களுக்கு தான் தேவை என்பதால் இளைய தலைமுறையினரை கருத்தில் கொண்டே அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க விழைகிறேன்.
பெண்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கும். அவற்றில் சில,
என் மார்பு அவ்வளவு அழகாக இருக்காதே இது என் கணவருக்கு பிடிக்குமா?
என் உடல் பாகங்களில் சில தழும்புகள் எல்லாம் இருக்குமே, அவருக்கு அதெல்லாம் பிடிக்காமல் போய்விடுமோ?
முதல் இரவிலே அவர் பல எதிர்பார்ப்புகளை முன் வைத்தால் என்ன செய்து?
எனக்கு இப்படி இருக்குதே, என்னை இப்படியே ஏற்றுக் கொள்வாரா?
என்ன இப்படி இருக்கனு சொல்லிடுவாரா?
அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால்?
இதே போன்ற எண்ணற்ற பயங்களுடன் தான் ஒவ்வொரு பெண்ணும் முதல் இரவை நோக்கி பயணிக்கிறாள்.
ஒரு பெண்ணிற்கு இது போன்ற பயங்கள் என்றால் ஆண்மகனிற்கு சொல்லவே வேண்டாம்.
இதை சரிவர செய்யவில்லை என்றால் என்னவள் என்னை ஒன்றுக்கும் லாக்கி இல்லாதவன் இதை கூட சரிவர செய்ய தெரியல நீ எல்லாம்.... என்று நினைத்துவிடுவாளோ?
சொதப்பிட்டோம்னா?
எல்லாம் சரியா வருமா?
தோற்றுவிட்டோம்னா அசிங்கமா பார்ப்பாலோ?
இன்னைக்குனு பார்த்து எதுவும் சரியா நடக்கவில்லை என்றால்?
இன்னும் பல....
அவன் வேண்டாத தெய்வம் இருக்காது.
பரிட்சைக்கு கூட அவன் அப்படி பயந்துருக்க மாட்டான்.
முதல் இரவு இருவருக்குமே பயம் கலந்த இரவு தான்.
அந்த பயத்தை எதிர்கொள்ளுவது எப்படி என்பதை பற்றிய ஒரு பாடத்தை கையில் எடுத்து பதில் எழுவதில் மகிழ்ச்சியே எனக்கு.
எதிர்பார்ப்பை ஓரம் கட்டுங்கள்
நீங்கள் படத்தில் பார்த்த கதா நாயகிகள், கதா நாயன்கள் போன்று உங்கள் துணை இருக்க மாட்டார்கள்.
தொப்பையுடனும், தொடைகள் கருத்தும் உடலின் பல பகுதிகளில் ரோமங்கள் கொண்டும் தான் இருப்பார்கள். இது தான் இயற்கை.
தொலைக்காட்சியும், யூடிப்பும் உங்கள் கண்களுக்கு விருந்து படைத்து உங்களை இயற்கையிலிருந்து இழுத்துச் சென்றுவிட்டது வெகு தூரம்.
உங்கள் துணையின் உடல் உறுப்புகள் பற்றிய எதிர்ப்பார்ப்பை குறைத்துக் கொண்டு முதல் இரவிற்கு செல்லுங்கள். உண்மையில் அந்த இரவு உங்களை மகிழ்விக்கும்.
ஏற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் துணை எப்படி இருந்தாலும் அவரை ஏற்றுக் கொண்டு அரவணைத்துக் கொள்ளுங்கள். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சொல்லி நம்பிக்கைக் கொடுங்கள். அது சிறந்த ஒன்றை உங்கள் துணை உங்களுக்கு பரிசளிக்க உதவும். உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்கும் நம்பிக்கை தான் அந்த இரவை ஒரு வெற்றியுள்ள இரவாக்கும்.
தெரிந்து வைத்திருக்கும் அத்தனை வித்தையையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதல் இரவு என்பது ஒரு ரேஸ் இல்லை. அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறுங்கள்.
முதல் இரவிலே எல்லாம் என்பது சரியில்லை.
உங்கள் துணை சொளகரியமாக இருக்கும் ஒரு உணர்வை பரிசளித்திடுங்கள். அதற்கு அதிகம் பேசுங்கள். Communication தான் முதலிரவின் மூலத்தனமே.
எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுங்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? ஆசை கனவுகள் என்ன? அந்த இடம் மற்றும் சூழல் அவர்களுக்கு நல்ல மன நிலையை கொடுத்திருக்கிறதா? அவர்கள் பேச ஏதேனும் நினைத்திருக்கிறார்களா? என்பதை கேளுங்கள்.
இனி எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் விட்டு பேசுங்கள். உங்கள் ஆசைகள் எதிர்ப்பார்ப்புகள் அத்தனையையும் சொல்லுங்கள். அதை உங்கள் துணை செய்திட கால அவகாசம் கொடுங்கள்.
நான் உன் கூட தான் இருக்குறேன் எப்பவும் இருப்பேன். பயப்படாத. இன்னைக்கு தோற்றால் நாளைக்கு ஜெயிக்கலாம். நீ வெற்றி பெரும்வரை நானும் உனக்கு உதவுவேன் என்னும் வார்த்தைகள் போதும்.
இந்த கேள்வியை நான் கையில் எடுத்ததே இதற்காக தான்.
இந்த ஒன்றை பதிவு செய்வதற்காக தான்.
மனைவியிடம் முதல் இரவில் தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்த கலையை கற்றுக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய தலைமுறையினர் செய்யும் தவறே இது தான்.
முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் இரவில் இல்லை உண்மையில்.
முதல் இரவின் வெற்றி உங்கள் முதல் குழந்தையை கையில் ஏந்துவீர்கள் பாருங்க அது தான்.
சில விசயங்கள் நான் வேதத்தின் மூலம் கற்றுக் கொண்டது. அதை பகிர்ந்து கொள்கிறேன் விருப்பம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள்.
புருஷர்களே உங்கள் மனைவியினிடத்தில் அன்பு கூறுங்கள். அவர்களை கசந்து கொள்ளாதீர்கள். ஆங்கிலத்தில், do not be harsh with them.
வேசித்தனம் மற்றும் விபச்சாரம் எல்லாம் தவறென்பது அனைவரும் அறிந்ததே. அதை முற்றிலும் அளிக்கக் கூடிய வல்லமை பெற்ற ஒன்று விவாக மஞ்சம். அத்தகைய அசுத்தம் இல்லாமல் போக வேண்டும் என்றால் விவாக மஞ்சம் அசுசிப்படாததாக இருக்கட்டும்.
மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
சிம்பிளா சொல்லனும்னா இது தான் முதல் இரவின் அடிப்படை விதி, என் பார்வையில். இன்னும் அதிகம் எழுத வேண்டுமானால் 1 கொரிந்தியர் 7 அதிகாரம் முழுவதையும் எழுத வேண்டும். ஆனால் அதற்கு நேரமில்லை. விட்டுவிடுகிறேன்.
எனக்கு பிடித்த ஒன்றை இருவரிகளில் இணைத்துவிட்டு செல்கிறேன்.
"உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே (மார்பகங்கள்)/உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக...."
முதல் இரவை பயமும், எதிர்ப்பார்ப்பும் இன்றி எதிர் கொள்ளுங்கள். இனி எல்லாம் சுப(க)மே.....
இது ஒரு ப்ராக்டிகல் question. Dinavidiyal.in ல் இருக்கும் பெரியவர்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்தால் எங்களை போன்ற இளைய தலைமுறையினர் சரியான அறிவும் புரிதலும் பெருவோம். யூடியூப் சென்று சன்னி லியோனின் தரிசனத்திற்காக காத்திருக்க மாட்டாங்க நம்ம பசங்க.
இதைப்பற்றி அறிந்திட அவர்களுக்கு உதவுங்கள். இது ஒரு பாடம். வீடியோ மூலம் கற்றுக் கொள்வதை விட வாசிப்பின் மூலம் கற்று தருதல் இதை பற்றிய நல்ல கண்ணோட்டத்தை தரும் என்பதால் இங்குள்ள பெரியவர்கள் இக்கேள்விக்கு பதில் அளித்து வருங்கால சந்ததிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Tags
சுவாரசியமான தகவல்கள்