பெண்ணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது..?

பெண்ணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது..?

பெண்ணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது..?


கேள்வி கேட்டது ஆணா பெண்ணா தெரியவில்லை

ஆண் என்றால் தன் துணைவியாருக்காகவும் பெண் என்றால் தனக்காகவும் கேட்டு இருக்க வாய்ப்பு உள்ளது

எனவே இதைக் கேவலமாக அருவருப்பாக கேட்கக் கூடாத கேள்வி என்ற ரேஞ்சுக்கு பதில் கூற தேவை இல்லை

உண்மையிலேயே பல பாலியல் விழிப்புணர்வுக் குழுக்களில் பெண்களாலேயே இந்தக் கேள்வி கேட்கப் படுகிறது

காரணம் ஆண் துணை அந்த இடத்தில் ஒரு வித வாடை வருகிறது ஆகையால் ஓரல் செக்ஸ் என்ற வாய் வழிப் புணர்ச்சியைத் தவிர்க்கிறார்கள் என்று கவலைப் படுகிறார்கள்

அப்படிப் பட்டவர்களுக்கான உண்மையான தேவை உள்ளவர்களுக்கான பதில் இது

வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் நேரம் தவிர்த்து வீட்டில் இருக்கும்போது உள்ளாடை என்ற ஜட்டி அணியக் கூடாது

தனிமையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் தினமும் கொஞ்ச நேரமாவது அந்த இடத்தை திறந்து காற்றுப் படும்படி வைக்க வேண்டும்

வெள்ளை படுகிறதா என்று பார்த்து அப்படி இருந்தால் அதற்கான மருத்துவரைப் பார்த்து மருந்து சாப்பிட்டு வெள்ளை படுதலைக் குணமாக்கிக் கொள்ள வேண்டும்

இடுப்புக்கு கீழ குறிப்பாக அந்தப் பகுதி முழுவதும் முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்னர்

நாட்டு மருந்துக் கடைகளில் காதிபவன்களில் கிடைக்கும் சித்த ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஸ்நானப் பொடி அல்லது நலங்கு மாவு அல்லது மூலிகைக் குளியல்பொடி

ஏதாவது ஒன்றை வாங்கி சீகைக்காய் தூளைக் குழைப்பது போல தண்ணீர் சேர்த்துக் குழைத்து இடுப்புக்கீழே பிறப்பு உறுப்பு தொடை இடுக்கு ஆசனவாய் பகுதி போன்ற பகுதிகளில் பூசி தேய்த்துக் கழுவி விட வேண்டும்

அதன் பின் சோப்பு போடக் கூடாது

பல மணி நேரம் அந்தப் பகுதி நறு மனத்துடன் இருக்கும்.

பதில் 2 


கேள்வி கேட்டவரை பாராட்டுகிறேன்.

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி தெரியாததால் பூஞ்சைத்தொற்று, யூரினரி டிராக் இன்பெக்‌ஷன், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளால் நிறைய பெண்கள் அவதிப்படுகின்றனர்.

பருவமடைந்த அனைத்து பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான தகவல் இது..

தூங்கும்போது உள்ளடை அணிவதை தவிர்த்தல் நல்லது.

இயற்கையாக நெய்யப்பட்ட நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணிவதை தவிருங்கள்.

குளிக்கும் போது பெண்ணுறுப்பில் நன்றாக தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். மேலிருந்து கீழாக கழுவ வேண்டும். அதாவது பெண்ணுருப்பிலிருந்து ஆசன வாய்நோக்கி கழுவ வேண்டும்.

பெண்ணுறுப்பின் மேல் மிதமாக சோப் போடலாம். ஆனால் உள்ளே போடக்கூடாது.

கெமிக்கல் நிறைந்த கழிவுப் பொருட்களைக் கொண்டு பிறப்புறுப்பு பகுதியை கழுவாதீர்கள்.

சிறுநீர் கழித்த பின்பு நீரால் நன்றாக கழுவவேண்டும்.

ஜட்டியை ஈரமாக அணியக்கூடாது.

குளித்தவுடன் பெண்ணுறுப்பில் ஈரமில்லாமல் மென்மையான துணயால் துடைக்க வேண்டும்.

பெண்ணுறுப்பின் மேலுள்ள முடியை மாதத்தில் இருமுறை ட்ரிம் செய்யலாம்.

முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த்தொற்றையும் குறைக்கும்.

மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு இருக்கிறதோ இல்லையோ மூண்று மணி நேரத்திற்க்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.

பெண்ணுறுப்பை இறுக்காத மென்மையான ஜட்டியை அணியுங்கள்.

உடலுறவு முடித்தபின்பும் சுயஇன்பம் செய்தபின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்.

தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال