ஆண் உறுப்பு மிகவும் சிறிதாக உள்ளது. வளர்ச்சி அடைய சித்த மருத்துவத்தில் வழியுள்ளதா?

ஆண் உறுப்பு மிகவும் சிறிதாக உள்ளது. வளர்ச்சி அடைய சித்த மருத்துவத்தில் வழியுள்ளதா?


ஆண் உறுப்பு மிகவும் சிறிதாக உள்ளது. வளர்ச்சி அடைய சித்த மருத்துவத்தில் வழியுள்ளதா?


இந்த கட்டுரையில் கூறப்பட்டது முழுக்க முழுக்க எச்சரிக்கையை ஏற்படுத்துவதன் நோக்கமாகும், மருத்துவ ரீதியாக எது வேண்டுமானாலும் செய்யலாம். 

ஆனால் விளம்பரங்களை பார்த்துவிட்டு கண்டதையும் வாங்கி போட்டு உபயோகிக்காதீர்கள் அது உங்களுக்கு உள்ளதையும் பறிக்க வாய்ப்பு இருக்கிறது.

சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்...

ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:

பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.

உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி விறைப்பில்லாத நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.

வளரும் வகை (Growers):


இந்த வகை ஆண்குறி சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறி கொண்டவர்களே.

காட்டும் வகை (Showers):


இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறி கொண்டவர்கள்.
முதலில் மற்றவரின் ஆணுறுப்போடு உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும்.

ஒவ்வொருவரின் உயரம் வேறு படுவது போலவே அவர்களின் ஆணுறுப்பின் அளவும் வேறுபடும்.

உயரம் குறைவானவர்கள் ஒன்றும் தாழ்வானவர்கள் அல்ல அதே போலத்தான் ஆணுறுப்பு சிறிதானவர்களும் ஆண்மை குறைந்தவர்கள் அல்ல.

நீங்கள் செக்ஸ் படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம். அவை மற்றவர்களை கவர்வதற்காக கவர்ச்சியாவனவர்களை வைத்து எடுக்கப்படும் செயற்கையான படங்கள். அவற்றோடு நிஜத்தை ஒப்பிட வேண்டாம்.

ஆண்மை தங்கியுள்ளது ஆணுறுப்பின் அளவில் அல்ல.

ஆண்மைக்கு முக்கிய ஆணித்தரமே மன உறுதிதான் . தேவை இல்லாத யோசனைகளை மூலம் உங்கள் மன உறுதியைத் தொலைத்து உங்கள் ஆண்மையை வீணாக்கி விடாதீர்கள்.

விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.

விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது, சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும்.

ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்பம் கிடைப்பது ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல செயல்பாட்டை பொருத்தே பெண்ணை திருப்தி படுத்த முடியும்.

உங்கள் குறி சிறியதாக உள்ளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது Small Penis Syndrome என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.

No Oil or Medicines or Creams available to enlarge your penis size in any system of medicines

Dont spoil your Health & Money to increasing your penis size.
Previous Post Next Post

نموذج الاتصال