மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர் நடிகைகள் யார்?

மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர் நடிகைகள் யார்?

மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர் நடிகைகள் யார்?


மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர்கள் பலர் தமிழ் திரையுலகில் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 56 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை "நல்லெண்ணெய்" சித்ராவை பற்றிய பதிவிது.

"நல்லெண்ணெய்" சித்ரா

கேரளாவில் உள்ள கொச்சியை சேர்ந்தவர் சித்ரா.இவர் சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார்.

இதனை அடுத்து அவர் தனது 10வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு அவர் பல மலையாள திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தார்.

தவறான நபர்களின் வழிகாட்டுதலால் இவரின் இளம் வயதில் 18+ திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.

மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர் நடிகைகள் யார்?


இந்த நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் அறிமுகமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினியின் கடிதத்தை ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கும் சிறுமியாக நடித்திருந்தார்.

அதன்பின் "ரசிகன் ஒரு ரசிகை" என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்த காட்சிகளில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த நிலையில் தான் அவர் "நல்லெண்ணெய்" விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு "நல்லெண்ணெய்" சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது.

இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
குறிப்பாக "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் உடன் சித்ரா நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த நகைச்சுவை நடிகரான மனோபாலா இயக்கியிருந்தார்.

மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர் நடிகைகள் யார்?


அதே போல் பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’, ராம்கி நடித்த ’வெள்ளைய தேவன்’ ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் ‘சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்.

கூடுதல் தகவல்:

நடிகை சித்ரா கடந்த 1990-ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
எதிர்பாராதவிதமாக கடந்த 2021-ஆம் ஆண்டு சித்ரா மாரடைப்பால் காலமானார்.
Previous Post Next Post

نموذج الاتصال