கணவன் மற்றும் காதலனை தவிர பிற ஆண்கள் தங்களை 'டி' போட்டு கூப்பிடுவதை பெண்கள் ஏன் விரும்புவதில்லை?

கணவன் மற்றும் காதலனை தவிர பிற ஆண்கள் தங்களை 'டி' போட்டு கூப்பிடுவதை ஏன் பெண்கள் விரும்புவதில்லை?

கணவன் மற்றும் காதலனை தவிர பிற ஆண்கள் தங்களை 'டி' போட்டு கூப்பிடுவதை ஏன் பெண்கள் விரும்புவதில்லை?


70, 80 களில் பெண்களை டி போட்டு அழைப்பது நார்மல்..!

ஆனால் 80, 90 பிறகு தற்சமயம் 100ல் 70% பெண்கள் ஆண்கள் போல் இன்ஜினியரிங் படிப்பது, வேலைக்கு போவது என்று பிசியாக ஓடிகொண்டிருக்கிறார்கள், இதனால் அவர்களிடையே புதிய சிந்தனை மேலும் பல மாற்றங்கள் நம் தமிழ் பெண்களிடம் தோன்ற ஆரம்பித்தது.

90 க்கு பிறகு, சில படித்த வேலை பார்க்கும் பெண்கள் " எங்களை "டி " போட்டு அழைக்க, யாருக்கும் உரிமை இல்லை, கட்டிய கணவன் கூட மரியாதை கொடுக்க வேண்டும் "என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இதெல்லாம் கேட்க வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மையும்கூட... என்ன காரணம் என்றால் 

பெண்களை எப்படியாவது கல்யாணம், காதல் செய்ய வேண்டும் என்று நினைத்த நம்மில் சில ஆண்கள், " டி போடமாட்டேன்!" என்று கொள்கை முடிவு எடுத்தார்கள்.

ஆனால் எனக்கு அப்போது அதில் உடன்பாடு இல்லை. மரியாதை கேட்டு வாங்கும் விஷயம் இல்லை, என்று நினைப்பவன் நான்!

நான் மரியாதை தேவை இல்லை, என்று சொன்னதை " ஜாதி " கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் சிலர்.

நீங்க ஐயருங்க, எல்லாரையும் நீ வா போ என்று பேசுகிறீர்கள், தெற்கு பக்கம் நாடார், பிள்ளை போன்றவர்கள் சின்ன குழந்தைகளைக் கூட "நீங்க , வாங்க போங்க "என்று சொல்வார்கள். பிராமணர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று என் நண்பன் சொன்னான்.

இதை நான் ஏன் சொன்னேன் என்றால் கீழே வரும் உதாரணத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

அப்போது கிரிக்கெட் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் " இம்ரான் கான் பந்து போட்டான்", கபில் அடித்து நொறுக்கினான் " " சுனில் சுனில் கவாஸ்கர் என்னை முறைத்துப் பார்த்தான் " என்று எல்லாம் பேசினார்!

கணவன் மற்றும் காதலனை தவிர பிற ஆண்கள் தங்களை 'டி' போட்டு கூப்பிடுவதை ஏன் பெண்கள் விரும்புவதில்லை?


1990 களில் அதற்கு நேர் எதிராக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சூரியன் டிவி (sun) யில், Earnest மாலா என்ற பெண்மணி , சின்ன சின்ன குட்டி கைக்குழந்தைகளை, " வாங்க, இன்னிக்கு என்ன rhymes சொல்ல போறீங்க, சொல்லுங்க!!" என்று பேசி மரியாதையை உச்சகட்ட level லில் கொண்டு போனார்!

நாங்கள், எல்லா கிரிக்கெட் பிளேயர்கள், சினிமா நடிகர்கள் எல்லோரையும் அவன் இவன் என்று தான் பேசுவோம்!

கமல் வந்தான், ரஜினி போனான், நம்பியார் சுட்டான், ஸ்ரீதேவி நடிக்கிறாள் என்று சென்னையில் பேசுவதை போல பேசிய வார்த்தை உச்சரிப்பை கண்ட திருநெல்வேலி மதுரை (தெற்கு மாவட்டம் அனைத்தும்) போன்ற ஊரில் இருந்து வந்த பசங்கள் வித்தியாசமாக பார்த்தார்கள்.

நான் கஷ்டப்பட்டு, சிவாஜி வந்தார், ராமராஜன் போனார் என்று பேச ஆரம்பித்தேன்!

ஆண்கள் ஒரு கட்டத்தில், முழுமையாக மரியாதையாக பேச ஆரம்பித்தார்கள்!

பெண்கள் பெற்ற முழுமையான வெற்றி, ஆண்கள் தங்களை "டி " போட்டு பேசக்கூடாது என்று மாற்றியது!

சென்னையில் "டி " போடும் வழக்கம் ஓரளவுக்கு வழக்கொழிந்து போனது என்றே சொல்லலாம்.

ஆனால் அத்தோடு பெண்கள் நின்றால் பரவாயில்லை!! அங்கே தான் பிரச்சினை!

சமீபத்தில் ஒரு "இன்ஜினியரிங் படித்த " பெண்ணை, கூட படித்த ஆண் மாணவர்கள் எனக்கு அறிமுகம் செய்தார்கள்.

Gold Medal வாங்கினவங்க சார். அவங்களுக்கு நீங்க class எடுக்கணும்! ரொம்ப talented! எல்லாப் பையன்களும் சொன்னார்கள்.

அடுத்த நாள் அந்த பெண் வந்தார். ஒரு வாட்ட சாட்டமான மாணவன், அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

" இவங்க என் கிளாஸ் mate! " பெயர் priya!!

" டேய், சும்மா இருடா! நானே பேசறேன்!, என்றார் gold medal வாங்கிய priya!

போன் ஒலித்தது.

சார், என் Would be பேசறான், அமெரிக்கா போக போறோம், ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாமா? " என்று அனுமதி கேட்டாள்!

தாராளமா பேசு, பிரியா! என்றேன் நான்!

" டேய், உங்கம்மா லூசு பேச்சை கேட்டு, இன்னிக்கு சாயந்திரம் வராம இருந்திராத!

நீ வரலைன்னா, உன்னை அடிச்சுடுவேண்டா, ராஸ்கல், I love you டா!

என்றாள்! ஸ்பீக்கர் போன் வேறு!

பதிலுக்கு அவள் வருங்கால கணவன், " "வருவேண்டி" என்று சொல்ல தைரியம் இல்லை, பாவம் .

ஸ்டைலாக " வரேண்டா டார்லிங்!" என்றான், தன் வருங்கால மனைவியிடம்!

பெண்கள், ஆண்களை "டா " போட்டு பேசினால், பதிலுக்கு நீங்களும் "டா " என்று வேண்டுமானால் சொல்லி மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால், தப்பி தவறி கூட ஆண்கள் பதிலுக்கு பெண்களை " டி " போட்டு பேச முடியாது.

எனக்கு ஒன்று புரிந்து விட்டது. 2000 ஆண்டுக்கு பிறகு பெண்கள் ஆண்களை மரியாதை கொடுத்து அழைப்பதில்லை.

குறிப்பாக கணவனை, அவன் பெற்றோர்கள் முன் வாடா, போடா என்று அழைப்பது, இந்த கால மனைவிகள், ஒரு சாதனை போல், style, மாடர்ன் என்று நினைத்துக் கொள்வது தான் வேதனை!

ஆண்களை மரியாதை குறைவாக டா போட்டு பெண்கள் அழைத்தால், அது நாகரீகம், Modern, Trend!

ஆனால் பெண்களை ஆண்கள் "டி " போட்டு அழைத்தால், அவன் படிக்காதவன், நாகரீகம் தெரியாதவன், மரியாதை தெரியாதவன் என்று ஆகி விட்டது!

ஆண்கள் இப்போது டீ போடுவது இல்லை, அதற்கு பதிலாக பெண்கள் இரண்டு மடங்கு "டா " போடுகிறார்கள், என்பதுதான் உண்மை!

அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன், பிரியா நல்லவேளை, என்னை "டா " போட்டு கூப்பிடவில்லை! தப்பித்தேன்!!

Previous Post Next Post

نموذج الاتصال