கூச்ச சுபாவம் உள்ள ஆணை பெண்ணுக்கு பிடிக்குமா..?
ரொம்ப பிடிக்கும். Introvert, Reserved ஆண்கள் அவர்களுக்கென்று இருக்கும் பிரத்யேக காதல் உணர்வுகள், அன்பு செலுத்துவது, வெட்கப்படுவது, மனதில் உள்ள உணர்வுகளை கொட்டுவது, அழுவது, மனம் விட்டு சிரிப்பது என்ற உணர்வுகளை எல்லாம் தன் bestie கிட்டயோ, தன் மனதுக்கு நெருக்கமான பெண்ணிடம் மட்டுமே பகிர்வார்.
இந்த பிரத்யேக சுபாவஙகள் அந்த பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பறைசாற்றும். அது, அந்த பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். இவன் என்னவன், என்னிடம் மட்டுமே எந்த விஷயத்தை வேண்டுமானாலும் பகிர்வான், நான் அவன் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிரேன் என்பது அவளுக்கு அவன் மேல் உள்ள அன்பை பல மடங்கு அதிகரிக்கும்.
அதுவும், introvert ஆண்களுக்கு extrovert பெண்கள் அமைந்தால், அது ஒரு நல்ல வெற்றியுள்ள காம்பினேஷன் ஆக அமையும் என்பது என் கருத்து. ஒரு extrovert பெண்ணுக்கு இந்த introvert ஆணின் குணங்கள் ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த குணநலன் கொண்ட ஆணை அந்த பெண் அன்பாலும், செய்கையாலும் ஆளுமை செலுத்துவாள். ஆனால், அந்த ஆளுமை ஒரு introvert ஆணுக்கு மிகவும் பிடித்தவையாய் இருக்கும். தன்னை ஆதிக்கம் செலுத்த அவன் முழுதாக தன்னை தந்து விடுவான். அவள் அவனை ஆட்சி செலுத்துவாள். ஆனால், அவனுக்கு ஒன்று என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வாள்.
தனக்கு மட்டுமே ஒரு ஆணின் அனைத்தும் வேண்டும் என்று நினைக்க கூடிய பெண்களுக்கு கண்டிப்பாக வெளியே மற்றவரிடம் பேசவோ, socialise பண்ணவோ தயங்க கூடிய ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
இதுவரை பார்த்தது ஒரு பெண்ணின் பதிலை இதற்கு மேல் பார்க்க போவது ஒரு ஆணின் பதிலை வாருங்கள் அவரது மனக்குமுறலை பார்ப்போம்...👇
ஆணின் மனக்குமுறல்
பிடிக்குமா என்றால் சில Extrovert பெண்களுக்கு பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் அது அதிக பட்சம் நட்பாக தொடரும் தவிர காதலாகவோ அல்லது திருமணம் வரையிலோ செல்லாது. நானும் ஒரு Introver சுபாவம் கொண்டவன்தான்.
கூச்ச சுபாவம் கொண்ட ஆண்களை மிக நல்லவனாக நினைத்து அவன் காதலிக்க கூட மாட்டான் என்று பெண்கள் முடிவு செய்து விடுகிறார்கள். நீங்கள் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும் உங்களின் உண்மையான அன்பை வெளிப்படுத்தவில்லையெனில் நட்பு காதலாக மாறாது. அன்பை வெளிபடுத்துவதும் கடினம்தான்.
நான் படித்து புரிந்து கொண்டதில் ஆண்கள் முதலில் ஈர்க்கப்படுவது பெண்ணின் அழகால் தான். அது முகமாக இருக்கலாம், கண், அல்லது உடலமைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதாவது ஆண் தன் கண்களின் வழியாக காதலிக்கிறான். ஆனால் பெண்கள் தன் காதின் வழியாக காதல் கொள்கிறார்கள். அதாவது நீங்கள் பெண்களிடம் பேசியே உங்கள் காதலை உணர்த்த வேண்டும்.
Tags
சுவாரசியமான தகவல்கள்