ஆண்களுக்குப் பிடிக்கும் என்று பெண்கள் செய்யும் எந்த செயல், மிகவும் சிரிப்பூட்டும் வகையில் இருக்கும்?

ஆண்களுக்குப் பிடிக்கும் என்று பெண்கள் செய்யும் எந்த செயல், மிகவும் சிரிப்பூட்டும் வகையில் இருக்கும்?

ஆண்களுக்குப் பிடிக்கும் என்று பெண்கள் செய்யும் எந்த செயல், மிகவும் சிரிப்பூட்டும் வகையில் இருக்கும்?

காலேஜ் படிக்கும் பொழுது காலையில் எப்பொழுதும் லேட்டாக தான் எழுந்திருப்போம். அதனால் கிளேஸ்க்கு சீக்கிரம் போக வேண்டும் என்று மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட் வழியாக புகுந்து அவசரமாக போவோம். சாதாரணமான நேரங்களில் சைட் அடிக்க வாய்ப்புகள் இருக்கும். ஆனால் காலையில் நாங்களே அட்டனென்ஸ்காக உயிர குடுத்து ஓடிக்கிட்டிருப்போம். அப்போ சைட்டாவது மண்ணாவதுன்னு இருக்கும்.


மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது என்னுடைய ரூம் மெட்டாக ஒரு பெண் இருந்தார். அவர் எப்பொழுதும் பசங்களுக்கு இப்படி இருந்தால் தான் பிடிக்கும். இந்த விஷயங்களெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது. குத்துவிளக்கு மாதிரி இருக்கும் பெண்களை தான் திருமணம் செஞ்சிப்பாங்க. மார்டனாக இருக்கும் பெண்களை டேட் மட்டும் தான் செய்வார்கள் போன்ற கதைகளை சொல்வார். நாங்களும் அதையெல்லாம் கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் விட்டுவிடுவோம்.


ஒரு முறை அந்த பெண்ணும் எங்களுடன் மெக்கானிக்கல் டிப்ர்ட்மென்ட் வழியாக கிளேஸூக்கு போயிக்கொண்டிருந்தார். அதுவரை வேகமாக நடந்து வந்தவர். மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட் வாசலை மிதித்ததும் அன்ன நடை நடக்க ஆம்பித்து விட்டார். முடியை முன்னே தூக்கி போட்டு கொள்வது, புத்தகத்தை மார்ப்போடு அணைத்து கொண்டு குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் நடப்பது. யோசிச்சி பாருங்க எப்படியிருக்கும்.


எங்களுக்கு ஒரே அதிர்ச்சி என்னடா இப்படி மாறிட்டார் என்று. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது அடக்கமாவது மண்ணாவது அட்னென்ஸ் தான் முக்கியம்ன்னு காலிலே சக்கரத்தை கட்டி கொண்டு ஓடிவிட்டோம்.


இப்போ இந்த கேள்வியை பார்த்த உடன் நியாபகம் வந்தது. சில பெண்கள் க்யூட்டாக இருக்கும் என்று நினைத்து குழந்தை மாதிரி பேசுவது. ஜெனிலியா மாதிரி பேக்காட்டம் நடந்து கொள்வது. ஆண்களை பார்க்கும் போது மட்டும் சத்தமாக சிரிப்பது/ பேசுவது. இதெல்லாம் ஆண்களுக்கு பிடிக்கும்னு நினைச்சி பண்ணுவாங்க. அது ஆண்களுக்கு பிடிக்குமான்னு எனக்கு தெரியாது. 

ஆனால் இதையெல்லாம் பாக்குற உங்க கூட இருக்குற எந்த பொண்ணுக்கும் பிடிக்காது. எரிச்சலாக இருக்கும். உடனே பொறாமை படுறாங்கன்னு நினைக்காதீங்க. இப்படியெல்லாம் பண்ணுறது ரொம்ப க்ரிஞ்சாக இருக்கும். பார்ப்பதற்க்கும் சகிக்காது என்பதை புரிஞ்சிக்கிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.

Previous Post Next Post

نموذج الاتصال