ஏன் பெண்களின் உடைபற்றி ஆண்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள்?
ஏனெனில் ஒர் ஆணின் பார்வை எப்படி இருக்குமென்பதை மற்றொர் ஆண் நன்றாகவே அறிவான். அதனால் தான் தனக்கு வேண்டப்பட்ட பெண்களிடம் ஆடை விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.
என்னத்தான் it's just a piece of cloth என்று சொன்னாலும் ஆண்கள் காட்சியால் உந்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. சில கயவர்களின் பார்வைக்கு தம் வீட்டு பெண்கள் இரையாகி விடக்கூடாது என்ற அக்கறை தான் வேறென்ன!.
முறையான பாலியல் சார்ந்த விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிக குறைவாக இருக்கிறது. இது வெறும் ரத்தமும் எலும்பும் சதையும் கலந்த உடல்தான் அதற்குப்பின் அழகான மனம் இருக்கிறது என்று புரிவதற்கு நமக்கு ஒரு யுகமே தேவைப்படுகிறது.
ஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்கிறதாம், அது என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விஷயங்களை விரும்புவார்கள். ஓர் ஆணிடம் நான் விரும்பும் விஷயங்கள் இவைகள்தான்.
- பெண்களை மதிப்பது.
- கெட்ட வார்த்தைகளை பேசாதது.
- வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது.
- குடும்பத்தை முதன்மையாக நினைப்பது.
- என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு.
- குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது.
- கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது. இதை நிச்சயம் நான் விரும்புகிறேன். நான் சற்று இளகிய மனம் கொண்டவள். அதனால் இந்த குணம் கொண்டவர்கள் எனக்கு பிடிக்கும். இவர்களுடைய தைரியம் எனக்கு புது தெம்பை தரும்.
- ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும்.
Tags
சுவாரசியமான தகவல்கள்