சில ஆண்களிடம் ஏற்பட்ட தவறான அனுபவத்தால் ஒட்டுமொத்த ஆண்களையும் மோசம் என்று சொல்லும் பெண்களை என்ன சொல்வது?

சில ஆண்களிடம் ஏற்பட்ட தவறான அனுபவத்தால் ஒட்டுமொத்த ஆண்களையும் மோசம் என்று சொல்லும் பெண்களை என்ன சொல்வது?

சில ஆண்களிடம் ஏற்பட்ட தவறான அனுபவத்தால் ஒட்டுமொத்த ஆண்களையும் மோசம் என்று சொல்லும் பெண்களை என்ன சொல்வது?


சில ஆண்கள் என்ன.. ஒரு ஆணுடைய செயலால் தான் உலகை பார்க்கும் விதத்தையே பெண்கள் மாற்றிக் கொள்வார்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில், எண்ணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒருவரின் வாழ்க்கையில் அதிகபட்சம் ஐந்து ஆண்கள் இருக்கலாம். அந்த ஐந்தில் மூன்று தப்பு பண்ணினால் என்ன நினைப்பாங்க.

எளிய உளவியல் இது.

ஒரு இடத்திற்கு முதன்முதலில் போகும்போது ஆட்டோ எடுக்கிறீங்க. 3 கிமீ ஆட்டோகாரர் 300 ரூபாய் ஏமாத்தி வாங்கிட்டு விடுறாங்க. இதே மாதிரி இரண்டாம் முறை நடக்குது. யாராவது கேட்டா என்ன சொல்லுவோம் அந்த ஊரில் ஆட்டோகாரர் அத்தனை பேரும் fraud னு தானே. ஆட்டோ பதிவு எண், டிரைவர் அடையாளம் எல்லாம் சொல்லி அவங்க மட்டும் தான் ஏமாத்துகாரங்க னு சொல்லுவீங்களா ?

நம்ம மூளை நல்லது / உதவி கிடைக்கும் போது செய்த நபரை மட்டும் நியாபகம் வைக்கும். கெட்டது நடந்தால் generalize பண்ணி வெச்சுக்கிட்டு அடுத்த முறை எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கும்.

உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஒரு பெண் பேருந்தில் பயணம் செய்யும் போது சன்னல் இருக்கையில் அமர்ந்து இருந்தபோது பின்னால் இருந்த ஆள் கையை சன்னல் சந்தில் விட்டு அந்த பெண்ணை தொட முயற்சிக்க அந்த பெண் தொடுவதற்கு முன்பே பிடித்து இறக்கி விட வைத்துவிட்டார். 

ஆனால் அதன் பிறகு எப்போது பேருந்தில் போனாலும் பின்னால் இருக்கும் இருக்கையில் பெண்கள் இருக்குமாறு தான் உட்கார்ந்து இருப்பார் / எச்சரிக்கையாக தான் இருப்பார். அதாவது எல்லா ஆண்கள் மேலும் சந்தேகம் தான். இதில் அவர் செய்வதில் என்ன தவறு ?

ஒருமுறை ஓரிடத்தில் ஆபத்து நேர்ந்தால் அடுத்த முறை கவனமாக இருப்பது survival instinct.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவருடைய தந்தை / சகோதரன் மற்றும் வாழ்க்கை துணையை வைத்து தான் 90% ஆண்களைப் பற்றிய அபிமானம் அமையும். வேலைக்கு செல்லாத பெண்கள் என்றால் 99% அவர்கள் செய்வதை வைத்து தான் நினைப்பாங்க.

ஆண்கள் மட்டும் அப்படி பண்ணுவதில்லையா என்ன..? "இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புருஞ்சு போச்சுடா" னு ஒரு பொண்ணு பண்ணுனதை வைத்து பாட்டு பாடவேண்டியது.. ஆனால் பெண்களை மட்டும் குறை சொல்ல வேண்டியது..

சில ஆண்களிடம் ஏற்பட்ட தவறான அனுபவத்தால் ஒட்டுமொத்த ஆண்களையும் மோசம் என்று சொல்லும் பெண்களை என்ன சொல்வது?

ஒன்றும் சொல்ல வேண்டாம். முடிந்தால் தான் அப்படிப்பட்ட மோசமான ஆண் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்யலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال