ஒரு பெண்ணாக இங்குள்ள ஆண்களிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

ஒரு பெண்ணாக இங்குள்ள ஆண்களிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

ஒரு பெண்ணாக இங்குள்ள ஆண்களிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?


உண்மையில் நாங்கள் மென்மையானவர்கள். Handle with care.

பொய் பேசாதே. தயவு செய்து பொய் பேசாதே. நம்ப வைத்து ஏமாற்றாதே. அது சின்ன நோட்டு புஸ்தக மேட்டரானாலும் சரி, முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லித்தொலை. சரின்னு மண்டைய மண்டைய ஆட்டிட்டு மறந்துட்டேன்னு இளிக்காதே.

பெண் குழந்தை அப்பாவிடம் எதிர்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் தான். நாங்கள் ஒன்றும் பிறக்கும்போதே அடங்காப்பிடரிகளாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு பிறப்பதில்லை. எங்களிடம் பாசமாக நல்லது கெட்டது பேசினால் கேட்காமல் இருக்கப் போவதில்லை. கட்டளை இடுவது, மிரட்டுவது, திட்டுவது எல்லாம் தேவையற்ற வேலை. மரியாதை கொடுத்து மரியாதையை பன்மடங்கு பெறலாம்.

எங்கள் முன் எங்கள் அம்மாவை காயப்படுத்துவது உங்கள் ஆண் இனத்தையே அவமானப்படுத்தும் செயல். நான் பார்க்கும் ஒரே ஆம்பளை நீங்கதான், நல்ல முன்மாதிரியா இருங்க. நாளைக்கு புருஷன் இப்படித்தான் பேசுவனோ என்ற பயம் வரும். அட்லீஸ்ட், கண்ணு முன்னால வந்து போகும்.

நான் எவ்வளவு பெரியவளானாலும் நீங்கள் தொடுவது குற்றமில்லை. ஆனால் நீங்கள் தொடும் விதம் எனக்குப் புரிந்து விடும். மகள் விலகிப் போகிறாள் என்றால் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஒருமுறை விலகினால் ஆயுசுக்கும் ஒட்டாது. இது எனக்கு அப்பாற்பட்டது. கண்ணியம் காக்கவும். வார்த்தையில், நடத்தையில், செய்கையில். என் அப்பாவை நினைத்து வெட்கப்படும்படி தலை குனியும்படி செய்யாதீர்கள்.

அண்ணனா? வா. உன்னை என் நண்பனாக நினைக்க விரும்புகிறேன். உன் ஆளும் ஆசையை என்னிடம் காட்டாதே. அதை உன் ஆபீசில் மேனேஜராக காட்டு. தோழனாக இரேண்டா? தம்பி? மற்ற ஆண்கள் மேலே எனக்கு உரிமை இல்லைடா. மற்ற ஆண்கள் என் இஷ்டப்படி நடக்க மாட்டார்கள். அதனால் உன்னை என் இஷ்டப்படி இருக்கவேண்டும் என்று சிலசமயம் சொல்வேன், கண்டிப்பேன். அது அதீத உரிமையில் வந்த செயல். நானும் குழந்தைதான். பெருசானதும் புரியும் உனக்கு. நீ என்றுமே என் வயிற்றில் பிறக்காத முதல் மகன். அதை நீ உணர்ந்தாலும் சரி, உணராட்டாலும் சரி. எவ்வளவு பெருசானாலும் என் கையைப் பிடித்து இழுத்து பேசும் உரிமை உனக்கு மட்டும் தான் உண்டு. அப்பாவுக்கில்லை, அண்ணனுக்கில்லை. தம்பிக்கு மட்டும் உண்டு. அப்பாவுக்கு அப்புறம் நீயும் என் தகப்பனே. அதற்கேற்றாற்போல் பொறுப்போடு நடந்துகொள்.

அடேய் அண்ணன் தம்பிகளா, உங்கள் பொண்டாட்டிகளோடு எங்களுக்கு எந்த பகையும் இல்லை. ஆனாலும் எங்கள் spaceக்குள் அவளை அனுமதிக்க நேரமாவும். உன்னோடு விரும்பிக் கலக்கும் அவள் எங்களிடம் கூடி குலாவ மாட்டாள். அவளிடம் எங்களுக்காக வக்காலத்து வாங்க போகாதே. அவளுக்காக இங்கே வராதே. திருவாயை மூடிக்கொண்டு இருப்பது நலம். நீ நல்லா இருந்தா போதும். ஆனா எனக்கு செய்யறத நீ செய்யணும், செஞ்சே ஆகணும்.
வாத்தியாரா? உங்களை என் அப்பாவாக பார்க்கிறேன். என்னை மகளாக பாருங்கள்.

தோழனா? நீ என்னோடு விளையாடி வளர்ந்துவிட்டாய். நாளை காலேஜுக்கு போனாலும் புது புது பெண்களை பார்த்ததும் என்னை மறந்து விட மாட்டாயே? 😁 நீ டையில் மூக்கு சிந்தியதையும ஸ்கூல் பஸ்ஸில் டவுசரில் மூச்சா போனதையும் உன் பொண்டாட்டியிடம் சொல்லமாட்டேன்.

யாரது? கணவரா? 😊 🙈 என்னால் உங்களுக்கு தீங்கில்லை. என்னையே தந்தபின், வேறென்ன இருக்கிறது கொடுக்க? உங்கள் வீட்டார் யாரையும் எனக்கு தெரியாது. நான் இந்த வீட்டுக்கு வந்தது உங்களுக்காக. நீங்கள் எனக்காக அவர்களிடம் பரிந்து பேசக்கூட வேண்டாம். ஒரு 10 நிமிஷம், "என்னடி, சாப்பிட்டாயா? நல்லாருக்கியா? அம்மா ஏதாச்சும் சொன்னங்களா? உங்க வீட்டுக்கு பேசுனியா? ஏன் முகம் கருத்து இருக்கு? பாவம் நின்னு நின்னு வேலை செஞ்சியா, கால் வலிக்கறதா?" என்று பேசலாமே? என்னை மற்றவர்கள் புரிஞ்சுக்கறதை பற்றி எனக்கு கவலையில்லை. நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள் என்ற உணர்வே போதும். உங்கள் இயலமையைக் கூட என்னிடம் சொல்லலாம். I won't judge you. நான் உங்களுக்காக வந்தவள். அட்லீஸ்ட், என் இருப்பை அங்கீகரியுங்கள். நன்றி சொல்லவேண்டாம், ஒரு புன்னகை போதும். கரிசனம் போதும். I'll walk on broken glass barefoot for you.

முடிந்தால் படுக்கையில் என்னையும் சந்தோஷமாக வையுங்கள். 😉

என் படுக்கை ஆசைகளை உங்களிடம் வெளிப்படையாக சொல்வதால் நான் தப்பானவள் அல்ல. உங்களைத்தவிர யாரிடமும் சொன்னால் தான் நான் பாவி.

பிள்ளையா? உனக்கு தெரியுமா? நான் உன்னை தனி உயிராகவே பாக்கலை…. என்னில் ஒரு பாகமாகவே பார்க்கிறேன்….. அதனால்தான் உன்னை கண்ட்ரோல் செய்வதாக உனக்கு தோன்றும். நான் ஆணாக வாழாத வாழ்க்கையை உன்மூலம் வாழ்கிறேன். நீ நல்வழியில் பெரிய ஆளாக வேண்டும், கெட்ட பெயர் வாங்கி என்னை அசிங்கப் படுத்திடாதே. என் கடைசிகாலத்தில் நீயும் உன் அப்பாவும் என்னோடு இருக்க வேண்டும். உங்கள் முகம் பார்த்து நான் சாக வேண்டும்.
Previous Post Next Post

نموذج الاتصال