தனக்கு பிடித்த ஆண்களை பார்க்க வரும் முன் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

தனக்கு பிடித்த ஆண்களை பார்க்க வரும் முன் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

தனக்கு பிடித்த ஆண்களை பார்க்க வரும் முன் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?


பெரும்பாலான பெண்கள் முதலில் தலைக்கு குளித்துவிடுவார்கள். எண்ணெய் தலை முகத்தை பொலிவாக காட்டதல்லவா..!

தனக்கு பிடித்த ஆணுக்கு பிடித்த நிறத்தில் உடை அணிந்து, அதற்கு பொருத்தமான கம்மல், வளையல், கழுத்தணி அணிந்துகொள்வர். ஒருமுறைக்கு இருமுறை எல்லாம் சரிபார்த்து கொள்வர். பொட்டு கூட உடைக்கு பொருத்தமாக வைக்கவே மெனெக்கிடுவர். முகத்திற்கு அளவான மேக்கப் செய்து கொள்வர். மறக்காமல் கண்ணுக்கு அஞ்சனம் இட்டுக்கொள்வர்.

முகத்திற்கு பொருந்தும் சிகை அலங்காரம் செய்து, இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றி ஒருவழியாக சிகை வேலை முடிந்ததும், தலையில் நிறைய பூ வைத்து கொள்வர். பொதுவாக பூ வைக்க பிடிக்காத பெண்கள்கூட தனக்கு பிடித்த ஆணை பார்க்க செல்லும்போது கொஞ்சமாவது பூ வைத்துக்கொள்வர். பொதுவாக free hair விடுவர்.

தன்னவருக்கு பிடித்த உணவோ, மிட்டாயோ மறக்காமல் எடுத்துக்கொள்வர். அவருக்கு கொடுப்பதற்காக கடை கடையாக ஏறி பரிசுப்பொருளும் வாங்கி பத்திரமாக வைத்திருப்பர். நல்ல அழகான காலணி அணிந்து கொண்டு, தன்னை ஒரு தேவதையாக நினைத்துக்கொண்டு ஒயிலாக நடந்து செல்வர். அவர்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு Style இருக்கும். செல்லும் வழியில் எங்கெல்லாம் முகம் பிரதிபலிக்கிறதோ, அங்கெல்லாம் தன் அழகை ரசித்து, சிகை கலைந்திருந்தால் சரிசெய்து கொள்வர். அடிக்கடி வெட்கப்பட்டு, தனக்குள் பேசி சிரித்துகொள்வர்.

தன் நாயகனுடனான சந்திப்பை கற்பனையில் மிதந்துகொண்டிருப்பர். தன் நாயகனை கண்டதும் ரெக்கை முளைத்து வானில் பறப்பது போல மெய்மறந்து நின்றுவிடுவர்.

இந்த கேள்வியை என்னிடம் கேட்ட கர்ணன் நிவாஸ் அவர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்த சிலவற்றை சொன்னேன். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொருமாதிரி. இன்னும் நிறைய இருக்கலாம்.

இது ஒரு டைப்...☝️


இது இன்னொரு டைப்...👇


ஒப்பனை மிக அழகாக செய்து கொள்வார்கள்

தன்னை மிகவும் வசீகரமாக காட்டும் ஆடையை அணிந்து கொள்வார்கள்

அந்த ஆண் காதலர் என்றால் தன் தலை முடி, துப்பட்டா இதை அடிக்கடி சரி செய்து கொள்வார்கள் அந்த மனிதர் அதிகம் பார்ப்பதற்காக

புதுசா ஏதாவது வாங்கினா - சின்ன காதணி, மோதிரம் ஏதாவது எவென் (even) புத்தகம் அதை காட்டி பேசி கொண்டிருப்பார்கள்

மேட்ச் மேட்ச் டிரஸ் பண்ணுவார்கள் - காதலருக்கு என்ன கலர் பிடிக்குமோ அந்த வண்ணத்தில்

எம்பிராய்டரி , லேஸ் வெச்ச துப்பட்டா அழகா காட்டும், soft ட்ரஸ் அழகா காட்டும் உடம்போடு நேர்த்தியாக படிந்தால் அதை அணிவார்கள்

அவர்களை காண்பதற்கு முன்னாடி பார்லர் போயிட்டு வருவாங்க

கண்ணால் பேசுவார்கள், ஹை ஹீல்ஸ் அணிவார்கள்! இதனை சொல்லும்போது இன்னொரு விடை நினைவுக்கு வந்துவிட்டது :)

கண்ணு மை மற்றும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மற்றும் நைல்க்கு போலிஷ் எல்லாம் போட்டு வசீகரமாக செல்வார்கள்.

காதலருக்கோ தனக்கோ பிடித்த பேரப்பியுமே ( perfume) அதனை மறக்காமல் போட்டு கொள்வார்கள்..! உதாரணம் எட்டர்னிட்டி, ஆப்ஸஸின், பொய்ச்சொன்! (eternity , obsession , poison) இந்த பேரப்பியுமே (perfume) தூக்கலா இருக்கும்

அந்த ஆடவற்கு கொண்டை பிடித்தல் அப்படி வரலாம் , குதிரை வால் னா அப்படி இல்லே நெற்றி மேல் முடி விழுந்த பிடிக்கும் ன அந்த சிகை அகங்காரம் பண்ணுவாங்க
Previous Post Next Post

نموذج الاتصال