ஒரு ஆண் எப்படி இருந்தால் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடும்?

ஒரு ஆண் எப்படி இருந்தால் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடும்?

நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

காலையில எழுந்து குளிச்சி. தலைக்கு எண்ணை வைச்சி வாரி. கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கும் ஒருவன்.

ஒரு ஆண் எப்படி இருந்தால் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடும்?


ஸ்கூல் பிரேயரில் ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ன்னு சின்ன வயசில் சொன்னதை மறக்காமல் இன்னும் ப்பாலோ பண்ணும் ஒருவன். பெண்ணை ஏறெடுத்து பார்க்காமல் கண்ணியமாக வாழும் ஒருவன்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் பிரெண்ட்ஸ் சரக்கடிக்கும் பொழுது கூட மிக்ஸர் சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒருவன்.

இப்படி நல்ல பையனாக இருக்கும் பையனை பெண்கள் வேண்டாம்னு சொல்லுவாங்களா? ஆமாம். இப்படி இருக்கும் பசங்களை பெண்கள் பிரெண்ட் ஸோனில் வைத்திருப்பார்கள்.

அப்ப எப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்னு கேட்கறீங்களா?

காதல் யானை வருகிற ரெமோ.
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ.
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ.
ரேம்போ ரெமோ.

  • பைக்கில் வீலிங் செய்து தாறுமாறாக வண்டியை ஓட்ட வேண்டும்.
  • கலர் கலராக தலையில் பெயின்ட் டப்பாவை கவுத்துக்க வேண்டும்.
  • ஜிம்முக்கு போய் ஆம்ஸ் காட்ட வேண்டும்.
  • பியர்ட் வளர்த்து ரப் அண்ட் டப்பாக இருக்க வேண்டும்.
  • காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டது என்று அந்த கதையை சொல்லி பீல் பண்ண வேண்டும்.
  • வாரத்துக்கு ஒரு தடவையாவது சரக்கடிக்க வேண்டும்.
அது என்ன மாயமோ தெரியாது. பெண்களுக்கு அம்பி மாதிரி இருக்கும் நல்ல பசங்களை விட ரெமோ மாதிரி இருக்கும் பசங்களையே பிடிக்கிறது.

அதுவும் தன்னை வேண்டாம்னு ஒரு பையன் சொல்லிட்டான்னா போதும். அவனை எப்படியாவது தன்னை காதலிக்க வைச்சிடணும்ங்குற ஈகோ வந்துடும். அதுவே தன் பின்னாடி வந்து காதல் சொன்னால் சுத்த விடுவாங்க.

இதையெல்லாம் தாண்டி மெச்சூர்டான பெண்களை இதையெல்லாம் வைச்சி கவர முடியாது. அவர்களை குணத்தை வைத்தே கவர முடியும். அவர்களிடம் மேலே சொன்ன டிரிக்ஸ்லாம் பலிக்காது.

இது ஒரு டைப்...☝️


இது இன்னோரு டைப்...👇


முதல்ல இந்த ராமராஜ் கலர் சட்டை, பஞ்சு மிட்டாய் கலர் சட்டையை எல்லாம் அணியாமல் இருந்தால்…

அப்புறம் பேசுகையில் நம்ம பெயரை உச்சரித்தால்…

எந்த விசயம் நடந்தாலும் அதை மறைக்காமல் நம்மகிட்ட பகிர்ந்து கொண்டால், (எல்லாருக்கும் பொருந்தாது)

ஷீ லேசையும், ஸ்லீவையும் சரியா கட்டி நேர்த்தியா மடிச்சி விட்டு இருந்தால்

பெரியவர்களை பார்த்ததும் மடிச்சி கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டால்,

சோம்பேறித்தனம் இல்லாமல் இருந்தால்,

சும்மா சும்மா தண்ணியை கொண்டுவா, டிவியை ஆன் பண்ணு, போற போக்குல ஃபேனை போட்டுட்டு போனு வேலை ஏவிகிட்டே இருக்காமல் தன் வேலையையாவது தானே செய்து கொண்டால்,

சமைக்கத் தெரிந்து இருந்தால்,

எக்கோ அடிக்குது கொஞ்சம் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணிட்டு பேசுறியா என்று நாம கோபப்படுகையில், சரி நான் பாத்திரம் கழுவிட்டு இருக்குறேன் முடிச்சிட்டு கூப்டுறேன் என்று தன் கடமைக்கே முன்னுரிமை கொடுத்தால் (கடமைனு சொல்றதைவிட பாத்திரம் விளக்க தெரிந்திருந்தால் என்பது தான் கிரின் உண்மை)

நிதானமா செயல்பட தெரிந்து இருந்தால்,

என்ன தான் கோவத்தில் இருந்தாலும் எடுத்தெரிஞ்சி பேசாமல் கோபத்திற்கான நியாயமான காரணத்துடன் கோபத்தை வெளிகாட்ட தெரிந்து இருந்தால்,

உம்மணா மூஞ்சா இல்லாமல் இருந்தால், 

நாம ஏதாவது கேட்கையில் பக்கம் பக்கமா தான் பேச வேண்டாம் ஆனால் பத்து வார்த்தையாவது பேசனும்ல? சில ஆண்கள் எல்லாம் இருக்காங்க…. பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்குற சங்கத்தை சேர்ந்தவங்கடானு செத்து போன டயலாக்கை சொல்லிகிட்டு. ஏதாவது கேட்டால் அவங்க வேலையை பார்த்துகிட்டே பதிலை மட்டும் சொல்லுவாங்க. செம கடுப்பாகும் அப்படியே அந்த சேரை தூக்கி…. (தலைவர் விஜயகாந்த் மாதிரி கொதித்து எழ வேண்டாம்) அதாவது நான் என்ன சொல்ல வர்றேனா, கொஞ்சமாவது ரெஸ்பான்ஸ் பண்ணினால் கண்டிப்பாக அந்த ரக ஆண்களை பிடிக்கும்.

மனசுல நினைக்கிறதை ஒழிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டால்,

18+ ஜோக்ஸ் மற்றும் டபுள் மீனிங் ஜோக்ஸ் அடிக்காமல் இருந்தால் (அனைவருக்கும் பொருந்தாது சில பெண்களுக்கு பிடிக்கும்)

உதவி பண்ணினால்,

கொஞ்சம் தள்ளி நின்னா, ஒரு அடி தள்ளியே நின்னு பேசினால் பிடிக்க தான் செய்கிறது.

அட ஏன்க்கா நீ வேற என்று உரிமை கொண்டாட தெரிந்து இருந்தால்,

ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலை கேட்டு ஆண்கள் சங்கத்திலிருந்து டெல்லி வரை போர் கொடி ஏற்றாமல், சும்மா ரண்டக்க ரண்டக்கனு டேன்ஸ் ஆடுனோமா அந்த ஹஸ்கி வாய்ஸ ரசித்தோமானு போயிட்டே இருந்தால்….

தெரிந்த நண்பர்கள் சிலரிடம் ஏண்டா உங்களுக்கு யாருக்கும் கோவம் வரலையா என்று கேட்கவும், அட நம்மள கழுவி கழுவி ஊத்துறதா எபனு மேட்டரு? 

அண்ட்ரியாவோட அந்த ஹஸ்கி வாய்ஸ்ல இன்னும் நாலு பக்கெட் சேர்த்து கழுவி ஊத்துனா கூட சந்தோசப்பட்டு இருப்போம்னு சொன்னாங்க. 

இந்த மாதிரி போடா போடா ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதில்லைனு அசால்ட்டா இருக்குற ஆண்களையும் என்னமோ பிடிக்க தான் செய்கிறது.

போதும் போதும் ஆண்களை புகழ்ந்து புகழ்ந்து கோரா அவையில் பாடல்கள் நிறையவே அரங்கேற்றம் பண்ணியாச்சு. இங்க நாம வீசுற பந்தை மடல் பக்கம் வந்து நமக்கே திருப்பி போடுறாங்க. அதனால நிப்பாட்டிப்போம்.

அதாவது மொத்தத்துல நான் என்ன சொல்ல வர்றேன்னா…...

இந்த ரகத்தில் உங்களுக்கு எந்த ரகம் பிடிக்கும் என்று நீங்கள் தான் கூற வேண்டும்....🤣
Previous Post Next Post

نموذج الاتصال