பயந்த சுபாவம் உடைய ஆண்களை பெண்கள் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்வீர்களா?

பயந்த சுபாவம் உடைய ஆண்களை பெண்கள் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்வீர்களா?

பயந்த சுபாவம் உடைய ஆண்களை பெண்கள் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்வீர்களா?


"மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன்"

பெரும்பாலான ஆண்கள் இதை உண்மைனே நம்பிட்டு இருக்காங்க பாருங்க, அது தான் வேதனையே. அது அந்த பாடலின் தேவைக்காகவும், கதையை மையமாக வைத்தும், சுவைக்காகவும் எழுதப்பட்டதே ஒழிய அது உண்மையில்ல.

ஊருக்குள்ள அடி தடி சண்ட, கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு எபனுக்கு பிடிச்ச rx 100 ல், வெள்ளை வேட்டி சட்டையுடன் உலா வரும் MBA படித்த பையன் ஒருவன் இருக்கான். ரைஸ் மில் இருக்கு எப்படியும் மாச வருமானம் ஒரு ஒரு லட்சம் தேறும். 

இன்னொரு பையன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல், கொஞ்சம் அமைதியா இருப்பான், பயந்த சுபாவம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறான். இதில் யாரை தேர்ந்தெடுப்பார்கள் பெரும்பாலான பெண்கள் என்றால் கண்டிப்பாக அந்த இரண்டாவது பையனை தான்.

அந்த ரவுடி பையன எல்லாம் சைட் அடிக்க வேணா செய்யலாம். குடும்பம்னு யோசிக்கும் போது எப்படி ஏற்றுக் கொள்வது? கோவம் நிறைய வரும்னு தினம் எங்கையாச்சும் வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்தால் வாழ்க்கை நிம்மதியாவா வாழ முடியும்?

தெளிவா சொல்றேன் பாருங்க. ரவுடித்தனமா இருக்குற பசங்க, கல்லூரி ஸ்போர்ட் டீமில் இருக்கும் பசங்கள் மேல் எல்லாம் 18-22 வயதில் ஈர்ப்பு வரும். அந்த வயதில் பயந்த சுபாவம் கொண்ட பசங்கள் மீது ஈர்ப்பு வராது உண்மை. 

ஆனால் 25 வயதிற்கு மேல் இது அப்படியே தலைகீழா மாறிவிடும். எங்கே 25 வயதான ஒரு பெண்ணை முரடான ஊருக்குள்ள கட்ட பஞ்சாயத்து பண்ற பையன கல்யாணம் பண்ண சொல்லுங்க பார்ப்போம்.

மெட்ராஸ் படத்தில் வரும் அன்பு கதாப்பாத்திரத்தை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் தான் அதுக்கு காரணம் அவன் அரசியலில் இருக்கான் அடி தடி பண்ணிட்டு கொஞ்சம் தெனாவெட்டா இருக்கான் என்பதற்காக அல்ல. அவன் அன்பானவனா இருக்கான், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதற்காக தான்.

நிறைய ஆண்களுக்கு இந்த பயம் இருக்கு. 

  • கொஞ்சம் முரட்டுத்தனமா இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமோ?
  • கொஞ்சம் தெனாவெட்டா இருந்தால் தான் பிடிக்குமோ?
  • கொஞ்சம் தாடி இருந்தால் தான் பிடிக்குமோ?
  • கருப்பா இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமாமே?

இப்படி எக்கச்சக்கமா கேள்விகள்.

ஆனால் இதெல்லாம் ரசிக்க மட்டும் தான் தேவை. ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க இதெல்லாம் தேவை இல்லை. நம்மை ரசிப்பவர்களுடன் வாழ்வதை விட, நேசிப்பவர்களுடன் வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பெண் எந்த ஒரு ஆணிடம் பாதுகாப்பையும் நேசத்தையும் உணர்கிறாளோ அவனிடம் தன்னை ஒப்படைக்க விரும்புவாள் என்பது உண்மை. ஆனால் பாதுகாப்பிற்கும் பயந்த சுபாவத்திற்கும் சம்மந்தமே இல்லை.

ஆண்கள் எல்லாரும் என்ன கட்டதுரையா ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க?

பாதுகாப்பு என்பது அடி தடி பஞ்சாயத்து சம்மந்தப்பட்ட ஒன்றல்ல. அது ஒரு கடமை, அது ஒரு பொறுப்பு அது ஒரு அரவணைப்பு.

பயந்த சுபாவம் கொண்ட ஆண்மகனால் இதை எல்லாம் அளித்திட முடியாது என்பதல்ல.

கடமையை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு, அரவணைத்து, அனுசரித்து, அன்பு செலுத்தி மனைவியை கண்ணியத்துடன் நடத்த தெரிந்தால் போதும். அதுக்கும் பயந்த சுபாவத்திற்கும் ஒரு தொடர்பும் இருப்பதாக தெரிவதில்லை.

அடி தடி பண்ணும் கட்டதுரையை நேசிக்கும் அளவிற்கு அபியும் நானும் ஜோகிந்தர் சிங்கை நேசிக்கும் பெண்களும் இருக்கிறார்கள் இந்த மண்ணில். பயம் வேண்டாம்.
Previous Post Next Post

نموذج الاتصال