இன்றைய காலகட்டத்தில் அதிகம் பெண்கள் அல்லது ஆண்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களா? அதற்கு என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில் அதிகம் பெண்கள் அல்லது ஆண்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களா? அதற்கு என்ன காரணம்?


இன்றைய காலகட்டத்தில் அதிகம் பெண்கள் அல்லது ஆண்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களா? அதற்கு என்ன காரணம்?


இந்த கேள்விக்கான பதிலை சிறுகதையோடு உண்மை கலந்த விஷயத்தில் கூறுகிறேன். பொறுமையாக படித்து பாருங்கள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்களது கருத்தை பதிவிடுங்கள் பிடிக்கவில்லை என்றாலும் என்ன காரணம் என்று கூறுங்கள் மேலும் மற்றவர்களுக்கு ஷேர் செய்து அவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.

சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்...

அறுபது வருடம் முன் என் பாட்டியிடம் அவர் அப்பா கூறியது கோவில் அருகில் தூரத்து உறவினரான மாப்பிள்ளை சிறிய உணவகம் வைத்துள்ளார். சிறிது வறுமை இருந்தாலும் நன்றாக பார்த்துக்கொள்வார் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. அடுத்த மாதம் உனக்கு திருமணம்

பாட்டி: சரி அப்பா.

முப்பத்து இரண்டு வருடங்களுக்கு முன் என் அப்பா உறவினரான தாத்தாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறேன்

தாத்தா அம்மாவிடம் மாப்பிளை கோவில் அருகில் பெரிய உணவகம் வைத்துள்ளார் அவரை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருப்பாய். மாப்பிளை சகோதரிகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஆகும்வரை உனக்கு உதவுவார்கள்.

அம்மா சரி அப்பா.

இந்த வருடம் என் சகோதரிக்கு திருமணத்திற்கு மாப்பிளை தேடும் படலம் கடந்த எட்டு மாதங்களில் உறவினர் யாரும் இல்லை அதனால் மாட்ரிமோணியில் பதிவு செய்து பின் எட்டாயிரம் பணம் கட்டினால் திருமணம் ஆகும்வரை அவர்கள் தகவலை பார்த்து கொள்ளலாம் என கூற பதிவு செய்த இரு நாளில் 68 விருப்பங்கள் வர அதில் அம்மா அப்பாவிற்கு பிடித்த ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.

நான்: அம்மா இவர் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறார் கணினி பொறியாளர் என் நண்பன் இவர் ஊர் தான் புகை பழக்கம் , குடிப்பழக்கம் இல்லாதவர் விசாரித்து விட்டேன்.

அம்மா: உன் சகோதரி மருத்துவர் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாள். அவளுக்கு மருத்துவ வரனே பார்க்க வேண்டியதுதானே.

இன்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது நல்ல குணம் இருக்கும் ஆண் அதிகம் சம்பாதிக்கவும் வேண்டும் அவர்கள் செய்யும் வேலையின் மதிப்பை பொருத்தும் அளவிடப்படுகிறது.

முப்பது வருடம் முன் வறுமை சேர்த்து வைத்த உறவுகளை எல்லாம் செழுமை இன்று சின்னாபின்னமாக்கியுள்ளது

இன்று வாழும் காலதிற்கான செலவு முப்பது வருடம் முன்பு இருந்ததை விட மிக அதிகம். அதனால் பெண்கள் ஆண்கள் இருவரும் சிறிது செட்டில் ஆகிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணுகின்றனர். 

முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் திருமணம் செய்துகொள்வதை விட தன் தகுதிக்கு சற்றும் குறைவில்லாத எதிர்பார்ப்பு தான் பிரச்னையாய் உள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال