பெண்களின் எந்தெந்த எதார்த்தமான நடவடிக்கைகளை பக்குவப்பட்ட ஆண்கள் கூட தவறாக எண்ணுகின்றனர்?

பெண்களின் எந்தெந்த எதார்த்தமான நடவடிக்கைகளை பக்குவப்பட்ட ஆண்கள் கூட தவறாக எண்ணுகின்றனர்?

பெண்களின் எந்தெந்த எதார்த்தமான நடவடிக்கைகளை பக்குவப்பட்ட ஆண்கள் கூட தவறாக எண்ணுகின்றனர்?

முன்பு போல் இந்த கேள்விக்கும் நாம் நமது பாலோவர்ஸ்களிடம் கேட்டபோது ஒவ்வொரு விதமான பதிலை கொடுத்தார்கள் அதில் சிறந்த பதில்களை உங்களுக்காக இங்கே நான் எடுத்து வந்திருக்கிறேன் படித்து பாருங்கள்...

வாருங்கள் பதில் என்னதான் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்...

பக்குவப்பட்ட என்னும் வார்த்தையை கேள்வியில் பயன்படுத்தியுள்ள போதே அவன் தவறாக எண்ணுவான் என்பதற்கு இடமில்லாமல் செய்துவிட்டீர்கள். இருப்பினும் தவறு செய்வது மனிதனின் இயல்பு. பக்குவப்பட்டவன் கூட ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்வான் என்னும் அடிப்படையில் இக்கேள்விக்கு நான் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

பொதுவாக அனைவர் மீதும் அன்பும் அக்கறையும் காட்டுவது பெண்களின் இயல்பு. அந்த யதார்த்தமான அன்பை தன் மீதான காதல் என்று தவறாக அர்த்தம் செய்து கொள்வது.

சற்று வெளிப்படையாக பேசிவிட்டால் அவரைப் பற்றி தவறாக எண்ணுவது.

அவர்களுக்கான அந்த மூன்று தினங்களில் அவர்களின் குணாதிசயங்களில் சில மாறுதல்கள் இருக்கும். அதைப் புரிந்து கொள்ளாமல் தவறாக எண்ணுவது.

திருமணத்திற்கு பின்பும் தனது நட்பு வட்டத்திற்கு முக்கியத்துவம் தருவதை வேறு விதங்களில் எண்ணுவது.

திருமணமான உடனேயே தன் பெற்றோரை மறந்து தன் மாமனார் மாமியாரை தன் பெற்றோராக நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று எண்ணுவது. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை கவனிக்கும் விதத்திலும் , தனது மாமனார் மாமியாரை கவனிக்கும் விதத்திலும் சிறிது மாறுதல்கள் இருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர்கள் அவளை பெற்றவர்கள். சிறிது அன்பு கூடத்தான் இருக்கும்.

பெண்களின் உலகம் தனி. அவர்களின் உலகில் அனைவருமே நல்லவர்கள் தான்.. ஆகையால் அவர்களின் பெரும்பாலான செயல்பாடுகள் இந்தக் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். சில சமயங்களில் பக்குவப்பட்ட ஆண்கள் கூட நான் மேற்கூறிய விஷயங்களில் பெண்களை தவறாக எண்ணத்தான் செய்கின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

கேள்வி கேட்டமைக்கு நன்றி.

முதல் டைப் சார் ஆனது முடிவுக்கு வந்தது இனிமேல் நான் பார்க்கப் போவது இரண்டாவது டைப்...

பெண்களின் எந்தெந்த எதார்த்தமான நடவடிக்கைகளை பக்குவப்பட்ட ஆண்கள் கூட தவறாக எண்ணுகின்றனர்? டைப் 2 

பெண்கள் பணிபுரியும் இடத்தில், சக ஊழியர்களுடன சகஜமாக சிறிது சிரித்து பேசிவிட்டால், தொட்டு தாலி காட்டிய கணவனும் பக்குவம் இன்றி சந்தேக பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், என்னிடம் ஏன் அப்படி இருப்பதில்லை என்று கேட்டால் எங்கு முகம் சுழித்து விடுவாளோ என்று தயங்குகிறது மனம்.

தான் அன்பு கொண்ட ஒருவர் தன்னுடன் மட்டும் பேச வேண்டும், தன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை கொண்ட நெஞ்சம் பக்குவத்தையும் தாண்டி கொஞ்சம் பயபடவே செய்கிறது. அது அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி என வேறுபாடு இன்றி அவர்களின் அன்பு பிறருக்கு கிடைக்கும் போது, அது எனக்கு மட்டும் கிடைக்க வேண்டும், எனக்கு மட்டும் உரித்தானது என்று ஏங்குகிறது.

என்னிடம் அன்போடு பேசும் பெண்ணவள், எனக்காக பிறந்தவளோ என்று எண்ணுகையில் பக்குவப்பட்ட மனுமும், பாவம் பதை பதைக்கவே செய்கிறது. எங்கு நமக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்று.

இது போன்ற ஆசைகள்‌ ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களான உங்களுக்கும் அப்படி தானே? ஏனென்றால் அன்பு கொண்ட ஒருவரது நெஞ்சமாது நமக்கு பிடிதவர்களிடமே அதை கேட்டு ஏங்குகிறது…அது கிடைக்காத பொழுது கோவம் கொள்கிறது…

அது ஏனோ,

கோவம் கொண்ட இடத்தில் தான் பாசம் வைக்கிறோம், ஆனால்… பாசம் வைத்தவருக்கோ கோபம் மட்டும் தான் தெரிகிறது, அதில் நாம் கொண்ட பாசம் புரிவதில்லை…

நன்றி…

இதுவரை இரண்டாவது டைப் பதில்களை படித்தீர்கள் இதற்கு மேல் மூன்றாவது டைப் பதில்களையும் பார்த்து விடுவோம்...

பெண்களின் எந்தெந்த எதார்த்தமான நடவடிக்கைகளை பக்குவப்பட்ட ஆண்கள் கூட தவறாக எண்ணுகின்றனர்? டைப் 3


பெண்களின் யதார்த்தமான நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தவறாக எண்ணப் படுவது இல்லை.

சூழ்நிலை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை பற்றிய பழமையான கண்ணோட்டம் பெண்களை பற்றி தவறாக உணரப்படுகிறது.

உதாரணமாக ஒரு நிகழ்வை பற்றி கூற விரும்புகிறேன்.

1988 ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் நடை பெற்றது.

அந்த சமயத்தில் ஒரு வியாழக்கிழமை அன்று சுகாதார செவிலியர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பு ஊசி முகாம் நடத்த மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றனர்.

அந்த சமயத்தில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அரசு வாகனத்தில் பணி புரிய சென்றனர்.

அப்போது வேலை முடிந்து கிளம்பும் நேரத்தில் அவ்வூர் ஆண்கள் சிலர் வண்டியை எடுக்கக்கூடாது என வண்டியை சிறை பிடித்தனர்

ஓட்டுநர் மற்றும் செவிலியர்கள் என்ன செய்வது என தெரியாமல் தடுமாற்றம் கொண்டனர்.

மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. மருத்துவருக்கு தகவல் வந்தது.அந்த ஊர் 8 கி.மீ தொலைவில் இருந்தது.

உடனே மருத்துவர் கூட ஒரு பணியாளரை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்

அம் மருத்துவர் அங்கே நீண்ட காலமாக பணி புரிந்துள்ளார்.எனவே அவரை அம்மக்கள் நன்கு அறிவர்

அவர் சென்று விசாரித்தபோது அவ்வூர் மக்கள் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.

தடுப்பு ஊசி போட சென்ற இடத்தில் செவிலியர்கள் சிலர் மற்றவர்கள் வரும் வரை காத்திருக்க நேர்ந்தது.

அப்போது அவர்கள் சற்று இளைப்பாறும் பொருட்டு அருகில் இருந்த கயிற்று கட்டிலை போட்டு அமர்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இது அங்கிருந்த ஆண்கள் சிலர் மறியலில் போது வண்டியில் வந்தது மட்டும் அல்லாமல் இவர்கள் ஆண்களை மதிக்காமல் கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். மரியாதை கிடையாது என்ற கோபத்தில் வண்டியை எடுக்க வழி மறைத்தனர்.

மருத்துவர் அவர்களை சமாதானம் செய்து வண்டியை எடுக்க சொல்லி செவிலியர்களை அழைத்து வந்தார்.

இன்றும் சில கிராமத்தில் பெண்கள், ஆண்கள் முன் கட்டிலை நிமிர்த்தி போட்டு உட்கார்ந்தால் அது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறது.

கோவில்களில் குட்டையான மேல் சட்டை அணிந்து லெக்கின்ஸ் அணிந்து வரும் போது.

சில துறையில் இருக்கும் சில பெண்கள் புகை பிடிப்பதை பார்க்கும்போது.

சுதந்திரம் என்ற பெயரில் இரவில் ஆண் நண்பர்களுடன் மது அருந்துதல்.

அவ்வளவுதான் நண்பர்களே இந்த மூன்று பதில்களையும் படித்திருந்தீர்கள் எனில் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் மீண்டும் ஒரு அடுத்த கேள்வி பதில்களுடன் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்
Previous Post Next Post

نموذج الاتصال