பெண்களை ஆண்கள் குறு குறுவென பார்க்கும்போது பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்?

பெண்களை ஆண்கள் குறு குறுவென பார்க்கும்போது பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்?


பெண்களை ஆண்கள் குறு குறுவென பார்க்கும்போது பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்?  குறு குறு பார்வை பார்க்கும் ஆண்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.  அழகான ஆண்கள். சுமாரான ஆண்கள். அழகான ஆண்களிடமிருந்து அந்த குறு குறு பார்வை வந்தால், என்ன ஏன் இவ்வளவு அழகா படைச்ச ஆண்டவா!! சரி பாத்துட்டு போகட்டும்னு விட்ருவாங்க.  இதுவே அந்த குறு குறு பார்வை சுமாரான ஆண்களிடமிருந்து வந்தால், சே! எப்படி பாக்குறான் பாரு. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையான்னு கோவப்படுவாங்க.  தைரியமான பொண்ணுனா எதுக்கு இப்படி பாக்குறீங்கன்னு கேட்டு விடுவாங்க. பயந்த சுபாவம் உள்ள பொண்ணுனா அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவாங்க.  அந்த குறு குறு பார்வை பகலிலே வந்தால் பெண்கள் சமாளிச்சிடுவாங்க. நான் யாரோ பத்து பேரை அடிச்சி டானாகல. நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்ங்குற ரேஞ்சிக்கு பில்டப் குடுப்பாங்க.  அதுவே இரவிலோ இல்லை கூட்டம் இல்லாத இடத்துல யாராவது குறுகுறுன்னு பாத்தா அவ்வளவு தான். மைன்ட்ல நியூஸ் பேப்பர்ல படிச்சதெல்லாம் ஞாபகத்துல வரும். பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் ஆயிடும். கடவுளே! என்னை எப்படியாவது வீட்டுல கொண்டு போயி சேத்துட்டனா எங்க அம்மாக்கு மொட்டை போடுறேன்னு வேண்டிக்குவாங்க.  சாதாரணமாவே ஆண்கள் குறு குறுன்னு பார்த்தால் பெண்கள் முதலில் பண்ணுறது டிரஸை சரி செய்வது.

இதைப் பற்றி நாங்கள் மொத்தம் மூன்று விதமான பெண்களிடம் கேட்டோம் மூன்று விதமான பெண்களும் ஓரளவுக்கு ஒத்துப் போகும் அளவுக்கு பதிலை கூறினார்கள், அவர்கள் கூறிய மூன்று டைப் பதில்களையும் இந்த பதிவில் இணைத்து இருக்கிறேன் படித்து பயன் பெறுங்கள்...

அதில் இது முதல் டைப்...👇

சரி வாங்க அவங்க என்னதான் சொன்னாங்கன்னு டீடைலா போய் பார்ப்போம்....

குறு குறு பார்வை பார்க்கும் ஆண்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
  • அழகான ஆண்கள்.
  • சுமாரான ஆண்கள்.
அழகான ஆண்களிடமிருந்து அந்த குறு குறு பார்வை வந்தால், என்ன ஏன் இவ்வளவு அழகா படைச்ச ஆண்டவா!! சரி பாத்துட்டு போகட்டும்னு விட்ருவாங்க.

இதுவே அந்த குறு குறு பார்வை சுமாரான ஆண்களிடமிருந்து வந்தால், சே! எப்படி பாக்குறான் பாரு. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையான்னு கோவப்படுவாங்க.

தைரியமான பொண்ணுனா எதுக்கு இப்படி பாக்குறீங்கன்னு கேட்டு விடுவாங்க. பயந்த சுபாவம் உள்ள பொண்ணுனா அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவாங்க.

அந்த குறு குறு பார்வை பகலிலே வந்தால் பெண்கள் சமாளிச்சிடுவாங்க. நான் யாரோ பத்து பேரை அடிச்சி டானாகல. நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்ங்குற ரேஞ்சிக்கு பில்டப் குடுப்பாங்க.

அதுவே இரவிலோ இல்லை கூட்டம் இல்லாத இடத்துல யாராவது குறுகுறுன்னு பாத்தா அவ்வளவு தான். மைன்ட்ல நியூஸ் பேப்பர்ல படிச்சதெல்லாம் ஞாபகத்துல வரும். பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் ஆயிடும். கடவுளே! என்னை எப்படியாவது வீட்டுல கொண்டு போயி சேத்துட்டனா எங்க அம்மாக்கு மொட்டை போடுறேன்னு வேண்டிக்குவாங்க.

சாதாரணமாவே ஆண்கள் குறு குறுன்னு பார்த்தால் பெண்கள் முதலில் பண்ணுறது டிரஸை சரி செய்வது.

இது ஒரு டைப்...☝️

இது மற்றொரு டைப்...👇


பெண்களை ஆண்கள் குறு குறுவென பார்க்கும்போது பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? டைப் 2

அப்படி எதுடா அக்காவை ஹெவியா லைக் பண்ண வச்சிச்சு? இது தான் முதல் எண்ண ஓட்டமா இருக்கும் எனக்கு.

அப்புறம் யோசிக்காம பர்ஸ் போன் எல்லாம் பத்திரமா இருக்கானு பார்த்துடு பின்னால் தொங்கும் தோள்பையை எடுத்து முன்னாடி போட்டுப்பேன்ல. போறதுக்கு ரெண்டு ஐம்பது வர்றதுக்கு ரெண்டு ஐம்பது, சாப்பிட மீன் குழம்பு மீன் பொரியல், ஒரு ஆதார் கார்டு, ஒரு ஏடிஎம் கார்டு, ஒரே ஒரு குடும்ப புகைப்படம், இதுக்கு மேல அந்த பைக்குள்ள ஒன்னும் இருக்காதுனு தெரியும். இருந்தாலும் குறு குறுனு பார்க்குறவங்களுக்கு தெரியவா போகுது இந்த பையை சுட்டா ஒன்னும் தேறாதுனு?

சாப்டுட்டு இருக்கும்போது குறுகுறுனு பார்த்தால் லெக் பீசை எடுத்து ஒழிச்சி வச்சிடுவேன்ல. பின்ன என்ன? பல்லு போனவங்க தான் குஸ்கா சாப்டுவாங்களாமாம். நமக்கு பீஸ் இல்லா பிரியாணி கொஞ்சம் இறங்காது. நம்ம குரூப்கிட்ட இருந்து லெக் பீசை காப்பாத்துறதே பெரும் வேலை. அதனால் சாப்பிடும் போது என் நண்பர்கள் குறு குறுனு பார்த்தால் உடனே அலார்ட் ஆகி லெக் பீசை எடுத்து கடிச்சி வச்சிடுவேன்.

அந்த குறு குறு பார்வை கல்யாண வீட்டில் நம்மள சைட் அடிக்கும் பார்வையாக மட்டும் இருந்துச்சோ...., ரெஸ்ட் ரூம்க்கு போய் ஹேர் ஸ்டைலை சரி பண்ணிட்டு, அந்த பையன் நிஜமாவே நம்மள தான் பார்க்குறானா? நாம வொர்த்தா தான் இருக்கோமோனு செக் பண்ணிட்டு, பர்ஸ்ல லிப்ஸ்டிக் இருந்துச்சுனா ஒரு கோட்டிங் போட்டுட்டு வெளியே வருவேன். லிப்ஸ்டிக் இல்லனா, என்னடா இது நமக்கு வந்த சோதனை? இப்படி நாலு பேர் நம்மளையும் குறு குறுனு பார்ப்பாங்கனு தெரிஞ்சிருந்தா லிப்ஸ்ட்டிக்கை கையோட கையா, மொய்யோட மொய்யா கொண்டு வந்துருப்பேனேனு மனசுக்குள்ள நினச்சிப்பேன்.

அந்த குறு குறு பார்வை மட்டும் நான் ஏடிஎம் வாசலில் இருந்து வெளி வருகையில் என்னை நோக்கி பாய்ந்ததோ அவ்வளவு தான். அலார்ட் ஆகிடுவேன். வண்டி கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வருவேன் அவர் பின் தொடர்கிறாரா என்று. மெயின் ரோட்டிலே ட்ராவல் பண்ணி வீடு வந்து சேர்ந்துடுவேன்.
அவ்வளவு தான். வேற ஒன்னும் தோணாது எனக்கு.

இது போனஸ் டைப்...👇


பெண்களை ஆண்கள் குறு குறுவென பார்க்கும்போது பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? டைப் 3

ஆண்கள் குறுகுறு என்று பார்ப்பதாக ,நான் நினைத்தால் தானே அது அப்படி எனக்கு தோன்றும்.

என்னை ஆண்கள் பார்க்கிறார்கள் என்பது நான் பார்த்தால் தானே தெரியும்.. ம்ம்ம்.

ஆண்கள் மேக் அப்படித்தான். பார்ப்பது என்பது என்ன வயது ஆனாலும் அவர்கள் அப்படித்தான். அதே பெண்கள் என்ன தான் ஆண்கள் பார்த்தாலும் கண்டுக்காத மாதிரி இருப்போம்.‌ இது பெண்கள் மேக். உண்மைதானே!

என்னதான் குறுகுறுப்போட பார்த்தாலும், நான், அதான் எதுவும் தெரியாத மாதிரியே இருப்பேன்...

பெண்ணாக என் மன ஓட்டம் , என்னடா இப்படி பார்த்தும், பார்க்காதது மாதிரி பாவ்லா பண்றார் என்றும் சிலசமயம் தோன்றும். எனக்கு சிரிப்பு வந்துவிடும். பெரிய செவாலியே சிவாஜி, அப்படி நடிப்பு..உலக மகா நடிப்புடா. நாம் அவன் பார்க்கிறானானு பார்த்தால் வேறு எங்கேயோ பார்ப்பது போல டக்னு திரும்பும் தலை.

திரும்ப திரும்ப ஆண் நம்மை பார்ப்பது போல உணர்ந்தால் சட்டென்று அவர் காலைசெருப்போ/ ஷுவையோ பார்த்தாலே, அவர் பார்வை மாறிவிடும். அவரும் வெட்கப்பட்டு அவர் காலை பார்க்க அவருக்கு தோணும், நம் செருப்பு சரியில்லையோ என்று.. நான் எல்லாம் யாரு?

நான் எந்த குறுகுறு பார்வையாலும் ,எனக்கு என் மேக் அப் சரி செய்யவோ தேவை இல்லை. நான் பவுடர் , பொட்டு கண்மை/ ஐ லைனர் அவ்வளவுதான். அதனால் எதையும் சரி செய்யவும் தோணாது.

எங்கேயாவது வசமா மாட்டிட்டால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதிக நேரம் எதிர் எதிரே உட்காரும் சூழலில் எழுந்தும் போகமுடியாது. அப்படியே பார்த்துட்டே இருப்பாங்க . அப்போதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். கொஞ்சம் அந்த பக்கம் இந்த பக்கம் பாருங்க. கழுத்து அப்படியே நின்றுட போகுதுனு நினைப்பேன் நான்.

அதுவும் இரயில் பயணங்களில் ,தான் என்னடா இது மனிதன் அப்படி இப்படி பார்க்க மாட்டாரானு இருக்கும். அதுக்கு தான் ஒரு புத்தகம் , கூடவே பாட்டு கேட்பதற்கு என்று இருக்கே. அது போதுமே.

அதுவே சிலர் பேசிடுவாங்க. எங்கே போறீங்க என்று ஆரம்பித்து என்ன படிக்கிறீர்கள் என்று இன்டர்வியூ வைப்பார்கள் சிலர். அப்பா வயது அல்லது பெரியவரா , நம்பி சொல்லலாம்னு தோணுச்சுனா பேசுவேன். ஆனால் சும்மா கடலை போட்டு, ஜொள்ளு விடுற மாதிரி தெரிந்தால் நான் சிரித்துக்கொண்டே, எதுக்கு கேட்கறீங்க என்று எதிர் கேள்வி கேட்டுட்டு, என் வேலைய மட்டும் பார்ப்பேன்.

குறுகுறுனு பார்ப்பதற்கு பதிலாக எதிர் எதிரே உட்கார்ந்து இருந்தால், ஒரு தடவை பேசி விட்டால், அந்த குறுகுறுப்பு பார்வை /எண்ணம் தோன்றாது. பேசி விட்டால் கூட பரவாயில்லை என்றும் நினைப்பேன்..

என்னதான் குறுகுறுப்புடன், பார்த்தாலும் கண்டுகொண்டும், கண்டு கொள்ளாத மாதிரி இருக்கும் பெண்ணாக தான் அதிகமாக என் மன ஓட்டம் இருப்பதாக உணர்கிறேன்.
Previous Post Next Post

نموذج الاتصال