ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?

ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?

ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?


அன்னையிடம்:

மனைவியைப் பற்றிப் பாராட்டாக எதுவுமே!

மனைவியின் பிறந்த வீட்டு ரகசியங்கள்/ வம்புகள்

மனைவியின் குற்றம் குறைகள் (தனியாக வேண்டுமானால் கூடிய அளவு குறைத்துச் சொல்லலாம்; மனைவியின் முன்னினலையில் ஒருநாளும் சொல்லாதீர்கள். சொன்னால்......?

மனைவியை மகிழ்விக்க நீங்கள் செய்த பணச்செலவு!

மனைவியிடம்:

நீங்கள் நண்பர்களுக்குக் கொடுத்துள்ள கடன் விவரங்கள்!

உங்கள் முன்னாள் காதல் பற்றிய எதுவும்
உங்கள் அலுவலகத்தில் உள்ள அழகான, புத்திசாலியான எந்தப் பெண்ணைப் பற்றியும் பாராட்டாக எதுவுமே! (இதில் உங்கள் மனைவியின் தோழிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்).

"ஒருநாளும் என் அம்மாவின் கைப்பக்குவம் உனக்கு வராது"

"வெறும் தெண்டச் செலவுதான் நீ செய்தது"

"நான் அன்றே சொன்னேன்; நீ தான் கேட்கவில்லை"

"உன் மூஞ்சிக்கு/ அழகுக்கு/ யோக்கியதைக்கு/... இதுவே அதிகம்"

பொய்! (எப்படியும் மாட்டிக்கொள்வீர்கள்; விதி வலியது!)

மூன்றாம் பெண்களிடம்

அசட்டுத்தனமான பாராட்டு (குறிப்பாக அழகைப்பற்றி)

வீட்டு ரகசியங்கள், பிரச்சனைகள், அலுவலக ரகசியங்கள்

தன்னைப்பற்றித்தான் சொல்கிறாரோ என்கிற ஐயம் வரும் விதத்தில் பொதுவாகப் பெண்களைப்பற்றிக் கடும் விமர்சனங்கள்.

இதுவரை நாம் முதல் டைப் பதிலை பார்த்தோம் இப்பொழுது நாம் பார்க்கப் போவது இரண்டாவது டைப் பதில்...

சரி போங்க இரண்டாவது டைப் என்னன்னு பார்ப்போம்....

ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன? டைப் 2

அந்த பெண் உங்கள் காதலி அல்லது மனைவியாக இருந்தால் இன்னொரு பெண்ணுடைய அழகு, அறிவு மற்றும் திறமை இதெல்லாம் பத்தி பேசாதீங்க! மூச்! அப்புறம் உங்களுக்கு மனைவி கையால் பத்து நாள் சாப்பாடு போச்சு அப்படி செஞ்சாலும் காரமோ உப்போ அள்ளி போட்டு தான் வைப்பாங்க. காதலி ஒரு மாசத்துக்கு டாட்டா சொல்லிடுவாங்க!

மற்றபடி பணத்தின் மதிப்பை தெரியாத பெண்களுக்கு உங்க முழு சம்பளம், அல்லது சேமிப்பை பற்றிய முழு விவரம் சொல்வது புத்திசாலித்தனம் இல்லேங்க :) முதலீடு விஷயங்களும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். முன்பே பெரிய அதிகாரியாகவோ, பணத்தை பற்றிய அறிவு, பொருளாதாரம் பற்றி தெரிந்தவர்களாக இருந்தால் இவை எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்கலாம்.

அவர்கள் செய்யும் சமையல் எவ்ளோ மோசமாக இருந்தாலும் நல்லாவே இருக்குனு அப்பப்போ பொய் சொல்லுங்க. உங்களுக்காவே அவர்கள் செய்ய துவங்குவார்கள் செய்வார்கள் என்கிற உண்மையை நீங்கள் அறிய வேண்டும்.

வேலையே போனாலும் 2-3 மாசம் சொல்லாதீங்க. அதற்குள் எப்படியும் கிடைக்கும் இல்லை என்றால் எல்லாவற்றையும் சமாளிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க. ஏன் என்றால் மன அழுத்தத்தை அவர்களால் உங்கள் அளவிற்கு தாங்க முடியாது என்பதும் உண்மை. அவளுடன் மட்டும் அந்த விஷயம் தங்காது.

பிற பெண்கள் அன்னை என்று பலரோடு அவள் விஷயங்களை பகிர்ந்து கொள்வாள். மீண்டும் சொல்கிறேன் மிகவும் மன முதிர்ச்சி, கஷ்டங்களை கண்ட, நல்ல புத்திசாலி பொண்ணு உங்க காதலியோ மனைவியாகவோ அமைந்திருந்தால் அந்த அதிர்ஷ்டசாலி நீங்க முதன் முதலாய் எல்லாத்தையுமே அந்த பெண்ணிடம் சொல்லலாம். இயன்றவரையில் அவள் உதவுவாள்

அவர்கள் வளர்ந்த வீட்டின் பிற உறுப்பினர்கள் , பெற்றோர் பற்றி முடிந்த அளவுக்கு மரியாதையாக கூறுங்கள். தரக்குறைவாகவோ, தப்பான விமர்சனங்களையோ நீங்கள் சொன்னால் அவள் சகிக்க மாட்டாள். உடனுக்குடனோ, அல்லது விவேகமான பெண் என்றால் அதை ஞாபகம் வைத்து கொண்டு வேறு ஒரு சமயத்தில் சொல்லி காமிப்பாங்க

உங்க கடவுச்சொல் (password) கொடுக்கறேன், செல்போன் கொடுக்கறேன், Facebook, ஈமெயில், பேங்க் கடவுச்சொல் இப்படி எல்லாம் பகிர்ந்து மாட்டிக்காதீங்க. அவங்களுக்கும் உங்களுக்கும் என்னிக்குமே இதெல்லாம் தனி உலகமாக இருப்பது தான் ஆரோக்கியமான உறவு.

உன்னைவிட அழகி, உன்னைவிட புத்திசாலி இல்லவே இல்லை என்று அடிக்கடி சொல்லுங்க. நீ தான் கடவுளோட அழகான அன்பான படைப்பு, இப்படியும் அடிக்கடி சொன்னா சந்தோஷ படுவாங்க. நீங்க கேக்கறதெல்லாம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

இறுதியாக அந்த மூன்று நாட்களில் முகம் சுளிக்கிறா மாதிரி பேசாதீங்க. அவளுக்கு மிகவும் வலிக்கும் மனதளவிலும் அப்படி செய்தால். முடிந்தால் உதவுங்கள் இல்லையா சும்மா இருங்க.

இதுவரை நாம் இரண்டாவது டைப் பதிலை பார்த்தோம் இப்பொழுது மூன்றாவது டைம் பதிலை பார்ப்போம்...

சரி வாங்க நண்பர்களே மூன்றாவது டைப்பையும் பாத்துருவோம்...

ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன? டைப் 3

தனக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்குன்னு ஒரு காதலன் காதலியிடம் கூறவே கூடாது.

தனக்கு ஒரு காதலி இருந்தால், நாங்கள் இப்படியெல்லாம் காதலிச்சோம்ன்னு மனைவியிடம் சொல்லவே கூடாது.

நண்பர்களுடன் எங்கலாம் சுத்துவோம், என்னலாம் பண்ணுவோம்னு சொல்ல கூடாது.

டீ.வில ஏதாவது பொண்ணு கட்டியிருக்குற புடவை நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா அவ்வளவு தான். அதே புடவையை உங்க மனைவிக்கு வாங்கி குடுக்க வேண்டிவரும்.

நான் என் அக்கொன்ட்ல உனக்கு தெரியாமல் இவ்வளவு பணம் சேர்த்து வைச்சிருக்கேன்னு சொன்னா கதை முடிஞ்சிதுன்னு அர்த்தம்.

போன் பண்ணி நீங்க எங்க இருக்கீங்கன்னு கேக்கும் போது இங்க தாமா மார்க்கெட் கிட்ட இருக்கேன்னு சொன்னீங்கன்னா லீஸ்ட்ட குடுத்து வாங்கிட்டு வர சொல்லிடுவாங்க.

அம்மாக்கு பணம் குடுத்தேன், அக்காக்கு புடவை வாங்கி குடுத்தேன். மூச்சே விடக்கூடாது.

உங்க போன் பாஸ்வேர்டு.

கோவத்தில் தெரியாமல் சொல்லிவிடும் கடும் வார்த்தைகள். பெண்கள் அதை மறக்கவே மாட்டாங்க.

சமையலை குறை கூறவேக்கூடாது.

தன் மனைவிக்கிட்டயோ/காதலியிடமோ இன்னொரு பெண் அழகா இருக்கான்னு சொல்லக்கூடாது.

எந்த ரகசியத்தையும் ரகசியமா வைச்சிக்கோன்னு சொல்லி சொல்லிடவே கூடாது. பெண்கள் ரகசியத்தை கண்டிப்பா காப்பாத்த மாட்டாங்க.

ஆண்கள் பெண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?


அவ்வளவுதான் நண்பர்களே இந்த மூன்று டைப் பதில்களையும் படித்திருப்பீர்கள் உங்களுக்கு எந்த டைப் பதில் பிடித்திருந்தது எதை நீங்கள் பாலோ செய்யப் போகிறீர்கள் என்று மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்....

நீங்கள் என்னிடம் ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பினால் அந்த கேள்விகளையும் மறக்காமல் கமெண்டில் கேளுங்கள் அந்தக் கேள்விகளும் கூடிய விரைவில் பதில்களோடு வந்து சேரும்....
Previous Post Next Post

نموذج الاتصال