ஆண்கள் செய்யும் முகம்சுளிக்கும் படியான விஷயங்கள் என்னென்ன?

ஆண்கள் செய்யும் முகம்சுளிக்கும் படியான விஷயங்கள் என்னென்ன?

ஆண்கள் செய்யும் முகம்சுளிக்கும் படியான விஷயங்கள் என்னென்ன?


பதில்: 1
 • மது மாது புகையிலை, இன்னும்
 • தகாத வார்த்தை பேசுதல்
 • மனைவியை பொதுவாக (பொது இடங்களில் கூட) கீழாக நடத்துதல்
 • தான் மட்டுமே பெரிய இவரு என்று நினைப்பில் நடந்து கொள்ளுதல்
 • பிள்ளைகளிடம் தனக்கு தேவையான கெட்ட பழக்க வழக்கங்களுக்கான விஷயங்களை கடைக்குச் சென்று வாங்கி வரச் சொல்லுதல் (சிகரெட், புகையிலை).
 • குடும்பத்தை கவனிக்காமல் ஊர் சுற்றுதல்
 • பொது இடங்களில் அசுத்தம் செய்தல். (உமிழ்தல், சிறுநீர், பாக்குபோடுவது - அதை கண்ட இடங்களில் கொஞ்சமும் அறிவென்பதே இல்லாது உமிழ்தல், புகைத்தல், இன்னும்…..)
 • அநாகரிகமாக ஆடை அணிதல்(இதோ இதோ விழுந்து விடப் போகிறேன் என்று பேண்ட் சொல்லுமாறு பேண்ட் அணிவது)
 • "நாங்க தான் கெத்து" இந்த தோரணையில் பசங்களுடன் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது
 • ரொம்ப முக்கியமான விஷயம், பெத்த தாய் தந்தையை கவனிக்கவில்லை என்றாலும் கூட திரையில் பார்க்கும் முகங்களுக்காக தன் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு பைத்தியம் பிடித்து அலைவது செயல்படுவது
 • தான் விரும்பிய பெண் தன்னை "பிடிக்கவில்லை" என்று சொல்லும் பட்சத்தில் அவளுக்கு ஆசிட் - உயிர் வாங்குதல் போன்ற கொடுமைகளை செய்வது
 • நண்பர்களுடன் சேர்ந்து அறிமுகமான அல்லது அறிமுகம் இல்லாத ன பெண்களை நயவஞ்சகமாக சீரழிப்பது
 • பெற்றோர் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைக்கும் பணத்தை சிறிதும் உறுத்தாமல் இலகுவாக செலவு செய்வது
 • தனக்கு கல்யாணம் ஆகி குழந்தை வந்த பிறகும் கூட தம் பிள்ளையைத் தான் வளர்ப்பதைப் போன்றுதான் தம் பெற்றோர்களும் தம்மை வளர்ததிருப்பர் என்று உணராமல் அவர்களை உதாசீனப்படுத்தி ஒதுக்கி வைப்பது
 • மனைவி அவளின் பெற்றோர்களைக் கவனித்துக் கொள்வது போல் பாசம் காட்டுவது போல், கணவனும் தனது பெற்றோர்களை கவனிக்காமல் விலகுதல் (மனைவிக்கு பயந்து கொண்டு)
 • மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ கண்மூடித்தனமாகத் தாக்குவது
 • திருமணமான பின் மனைவி பக்கம் பச்சோந்தியாக மாறுவது
 • திருமணத்திற்கு முன்னோ திருமணத்திற்கு பின்னும் கூட மனிதன் மனிதனாக வாழாமல் பிறல்வது
 • படிப்பில் கவனம் செலுத்தாமல் கண்ட பசங்களுடன் ஊர் சுற்றுவது, சினிமாக்கு செல்வது, தகாத பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டு இதுதான் சந்தோஷம் என்று மடத்தனமாக வாழ்வது
 • மனைவி எப்படி இருந்தாலும் மிகவும் மோசமான விஷயத்தில் மற்ற பெண்களுடன்…..
இப்படி சொல்லலாம் மக்களே....
Previous Post Next Post

نموذج الاتصال