பெண்கள் குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?

பெண்கள் குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


நான் 25 வயது முதல் 35 வயது வரை கொஞ்சம் குண்டாக இருந்தேன். ஆனால் அதனால், சீக்கிரமாக ரத்த அழுத்தம் அதிகமாகி பெரிய அவஸ்தை பட்டேன்.

உள்ளுக்குள் பயங்கர அவஸ்தை!! ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம்,

கண்ணுகுட்டி, என்ன கும்முனு இருக்கே!! உன் மனைவி எங்கே அரிசி வாங்குகிறார்? பிரமாதம்!!! என்று புகழும் போது,

உள்ளே அஜீரணம், ரத்த கொதிப்பு மன அழுத்தம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளில் அவர்கள் புகழ்ச்சி என் காதில் விழாது.

எப்போது என்ன ஆகுமோ? டாக்டர் கண்ணா பின்னா என்று பயமுறுத்துகிறார்! இவர்கள் என்னடா என்றால், நான் ரொம்ப சௌக்கியமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்!!

நான் குண்டாக இருப்பது போல், பெண்கள் குண்டாக இருந்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள் என்று நான் நினைத்தேன்.

ஐஸ்வர்யா ராய் சுஷ்மிதா சென் போன்றவர்கள் ஒல்லியாக இருக்கிறார்கள். அதனால்தான் உலக அழகிகள். அதைவிட ரொம்ப முக்கியம் நான் சிறுவயதில் இருந்து ஆங்கில படங்கள் தான் அதிகம் பார்ப்பேன்.


குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


ஆங்கில படங்களில் கதாநாயகிகள் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள். அங்கே கதாநாயகர்கள் எல்லோரும், உடம்பை மிக அழகாக உடற்பயிற்சி செய்து கச்சிதமாக வைத்துக் கொள்வார்கள். Jim Carrey கேனங்கி தனமாக நகைச்சுவை செய்தாலும், அவர் தன் உடலை அழகாக வைத்திருப்பார்!

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


ஆனால் தமிழ்நாட்டில் அப்போது கூட, குஷ்பூ மல்லிகைப்பூ, குஷ்பூ இட்லி என்று குஷ்பூவை ஒரு அழகின் சின்னமாக அன்று வைத்திருந்தார்கள்.

ஒரு காலத்தில் பத்மினி போல் பெண் இருக்கிறாள் என்று அழகுக்கு நாட்டிய பேரொளி பத்மினியை குறிப்பிடுவார்கள்.

அதற்குப் பிறகு பெண் ஸ்ரீதேவி போல் இருக்கிறாள், என்று அழகுக்கு ஸ்ரீதேவி ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

அதற்குப் பிறகுதான் மோசமான காலகட்டம்.

மோகன்லால் ( வெள்ளையாக குண்டாக இருப்பார் ) போல் இருக்கும் ஆண் அழகான ஆண் மகன். குஷ்பூ போல் ( வெள்ளையாக குண்டாக இருப்பார் ) இருப்பவர் அழகான பெண், என்று அழகுக்கு புது இலக்கணம் வகுத்தார்கள்.

பிரபு மோகன்லால் போன்றவர்களை ஹீரோக்கள், குஷ்பூ, மும்தாஜ் போன்ற நடிகைகளை அழகு என்று தமிழ் சினிமா வித்தியாசமாக சொன்னது.

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


ஒல்லியாக இருந்த கௌசல்யா என்ற நடிகை, சீக்கிரம் ஹீரோவுக்கு அக்கா, அம்மா வேஷம் போடும் நிலைமைக்கு வந்து விட்டார்.

கமலா காமேஷ் என்ற நடிகை, ஒல்லியாக இருந்த காரணத்தினால், விசு அவர்களைத் தவிர யாருமே அவரை ஜோடியாக போட்டுக் கொள்ள விரும்பவில்லை. எல்லாருக்கும் அம்மா. இதில் கொடுமை விஜய்யுடன் ஜோடியாக நடித்த கௌசல்யா, அவருடன் அம்மாவாக பின்னர் நடித்தார்.

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


இந்த கண்றாவிக்கு மகுடம் வைத்தார் போல், அப்போது தொலைக்காட்சி சீரியல்கள் பிரபலமாகின.

சினிமாவில் நடித்து குண்டான நடிகைகள் சீரியலில் மெயின் ரோல்!! அதாவது மாமியார் ரோல்! இளம் வயதில் புஷ்டியாக கொஞ்சம் குண்டாக இருக்கும் வெள்ளை நிற நடிகை சீரியல் நாயகி. பணக்கார வீட்டில் கஷ்டப்படும் மருமகள் ரோல்!

வெள்ளையாக குண்டாக இருந்தால் பணக்காரர்கள், ஒல்லியாக இருந்தால் ஏழைகள் என்று சினிமாவும் சீரியலும் தமிழர்களுக்கு பாடம் எடுத்தது!

தமிழ்நாட்டின் அழகின் Standards மிகவும் தவறாக இருப்பது நான் கண்டுபிடித்தேன்.

நான் இனி குண்டாக இருக்கக் கூடாது என்று நன்றாக உடற்பயிற்சி செய்து நடை பயிற்சி செய்து சரியான BMI Body Mass Index வைத்துக்கொண்டு, மற்றும் எல்லா பிரச்சனைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன்.

நான் அப்போது சுறுசுறுப்பாக ஓடி ஆடி சுற்றியதால் கொஞ்சம் கருத்து விட்டேன். ஆனால் ரொம்பவும் ஆரோக்கியமாக நான் உள்ளுக்குள் உணர்ந்தேன்.

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம்,

" என்ன ராஜேஷ்? என்ன உடம்புக்கு? ஏதாவது வியாதியா? ரொம்ப ஆரோக்கியமாக குண்டாக இருந்த நீ இப்போது இப்படி இளைத்து விட்டாயே!!! என்று துக்கம் விசாரித்தார்கள்.

நான் மறுபடியும் கொஞ்சம் குண்டானால், திரும்பவும் உடல் பிரச்சினைகள் வந்து விடுகிறது. ஆனால் அப்பொழுது தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

இதை என்ன என்று சொல்வது?

தமிழ்நாட்டில் நீங்கள் ஒல்லியாக இருந்தால், உங்களுக்கு ஆரோக்கியத்தை தவிர ஒன்றுமே கிடைக்காது.

தமிழ்நாட்டில் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல், சோம்பேறியாக junk food சாப்பிட்ட பெண்மணி இப்போது தொலைக்காட்சிகளில் Anchor ரோல் செய்கிறார்.

ஜீ டிவி, விஜய் டிவி போன்ற தமிழ் (?) தொலைக்காட்சிகள் அர்ச்சனா போன்ற குண்டு பெண்களை போட்டி போட்டுக் கொண்டு அழகு என்ற பெயரில், முக்கியமான தொகுப்பாளராக காட்டுகிறார்கள்.

பயங்கர குண்டாக இருக்கும் அந்த பெண்கள், கேவலமாக சிரித்து, கண்றாவியாக உடை உடுத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர எந்த இடத்திலும் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் நடப்பதில்லை.

அதில் வரும் ஆண்கள் கூட, கோபிநாத் போல் குண்டாக இருக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சிகளில் குண்டாக இருந்தால் தான் வாய்ப்பு. அறிவு தேவையில்லை, நீங்கள் குண்டாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

இப்படி சினிமா தொலைக்காட்சி பொதுமக்கள் என்று தமிழ்நாட்டில் அனைவரும், குண்டாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

அப்படி குண்டாக இருக்கும் நடிகர் நடிகைகள் ஹார்ட் அட்டாக் என்று செய்தி வந்தால்,

" நன்றாக தானே இருந்தார்!!! அவருக்கு என்ன பிரச்சனை? " என்று வினோதமாக கேட்டார்கள் தமிழர்கள்.

நீங்கள் குண்டாக இருந்தால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் உங்களுக்கு ஆரோக்கியம் இருக்காது. உங்களுக்காக நீங்கள் உங்கள் உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படக் கூடாது.

குண்டாக இருந்து நீங்கள் படும் அவஸ்தை யாருக்கும் தெரியாது. இதில் பயங்கர காமெடி, கவுண்டமணி சொல்வது போல்,

" ஒல்லியாக இருப்பவன் வினை பிடித்தவன். கள்ளம் கபடம் இல்லாத நல்லவன் கொஞ்சம் சதை போட்டு குண்டா இருப்பான் ", என்றெல்லாம் வேறு சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். குண்டாக இருப்பவன் நல்லவன், சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், என்பது போன்ற அறிவியல் உண்மைகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் நிலவுகிறது.

இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த கூடாது. குண்டாக இருப்பது Obesity என்பது ஆரோக்கியம் அல்ல. தொலைக்காட்சிகள் சினிமாக்கள் போன்றவை வைத்திருக்கும் அளவுகோல்களை பற்றி கவலைப்படாதீர்கள். மற்றவர்கள் உங்களை விரும்புவார்களா என்பது இங்கே முக்கியமில்லை. நீங்கள் உங்களை விரும்புவது தான் முக்கியம்.

தமிழ்நாட்டில் குண்டாக இருப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் குண்டாக இருக்காதீர்கள். Shape and Trim ஆக எப்பொழுதும் சரியான அளவில் உடலை வைத்திருங்கள். அதுதான் ஆரோக்கியம். அடுத்தவர்கள் விரும்புவது இங்கே முக்கியமில்லை, ஆரோக்கியம் தான் முக்கியம்.

சுவையான ட்ரிவியா தகவல் வழக்கம்போல் :

தமிழ்நாட்டில் ஏன் குஷ்பூ போன்ற குண்டான பெண்கள் அழகு என்று சொல்கிறார்கள்?

காரணம் Evolutionary Biology.

இப்பொழுது எல்லோரும் நன்றாக சாப்பிட்டாலும், 50 வருடங்களுக்கு முன்பு ஹைதர் அலி காலம் தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரை தமிழ்நாட்டில் எப்பொழுதும் பஞ்சம் பட்டினி தான்.

ஆப்பிரிக்காவில் பஞ்சத்தில் இருக்கும் மக்கள், பெண்கள் தங்கள் பின்பகுதியில் FAT சேர்த்து வைத்துக் கொள்வார்கள். பஞ்சத்தில் பிற்காலத்தில் கைகொடுக்கும் என்று அப்படி சேர்த்த ஒரு பெண், ஆண்கள் கண்களுக்கு அழகாக தெரிவாள். காரணம் அவள், Survival chance அங்கே அதிகம்.

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


இப்படி தமிழர்கள் ஆப்பிரிக்கர்களை போல் பல பரம்பரைகள் ஒல்லியாக இருந்ததால், குண்டாக இருக்கும் பெண் நிறைய சாப்பாடு கிடைத்து, நல்ல குண்டாக குழந்தை பெற்று நிறைய நாள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது, என்று நூறு வருடங்களுக்கு முன்பு நினைத்து இருப்பார்கள்.

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


அந்த காலகட்டம் வேறு. நல்ல அரிசி நல்ல காய்கறிகள் நல்ல பால் நல்ல தண்ணீர் போன்றவற்றால் நல்ல குண்டு அது. இப்பொழுது மோசமான தானியங்கள், processed food, Fast food junk food hormone imbalance போன்ற தவறான உடல் அமைப்புகளால் பெண்கள் குண்டாக மாறுகிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் ஆரோக்கியம் கிடையாது.

பலப்பல பரம்பரை பஞ்சத்திலே இருந்ததால், கொஞ்சம் சதைப்பற்றுள்ள குண்டான உடல்வாகு பஞ்சத்தில் வாழ்ந்த பரம்பரைக்கு Genetic Memory யில் அழகாக காட்சியளிக்கிறது.

குண்டாக இருப்பவர்களை விரும்புகிறார்களா? நீங்கள் முதலில் எப்படி இருக்கிறீர்கள்?


ஒரு காலத்தில் நாம் சிற்பங்களில் உள்ளது போல் சரியாக இருந்தோம்.

பின்னர் அன்னியர் படையெடுப்பால் பஞ்சங்கள் தோன்றி நம் அழகின் பார்வை மாறியது. ஆனால் இப்பொழுது நன்றாக உணவு உட்கொண்டாலும், நாம் உண்பது தவறான உணவு. இப்பொழுது உள்ள உணவுகளால் ஏற்படும் குண்டு அல்லது கொழுப்பு என்பது ஆரோக்கியமானதல்ல! இதைப் புரிந்து கொள்வது தான் கல்வி.

நன்றாக உணவு உட்கொண்டு வாழ்ந்த பஞ்சத்தை பார்க்காத மக்கள், ஒல்லியாக இருக்கும் பெண்ணைத்தான் விரும்புவார்கள். அழகு விஷயத்தில் நாம் கிட்டத்தட்ட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்களைப்போல், Beauty Standards வைத்துக் கொண்டுள்ளோம். படித்து நாகரீகம் முன்னேறினாலும், இன்னும் நாம் நமது பார்வைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதுதான் அறிவியல் உண்மை!
Previous Post Next Post

نموذج الاتصال