ஆண்கள் எப்போது அழுகிறார்கள்..?

ஆண்கள் எப்போது அழுகிறார்கள்..?

ஆண்கள் எப்போது அழுகிறார்கள்..?


ஆண்கள் பற்றிய 2 கேள்விகளுக்கு பதிலளிக்க, சமூகம் என்னை ஆண் என்று நினைத்துவிட்டது போலும். ஆண்கள் பற்றிய கேள்விகள் தான் வருது...

ஒரு பெண்ணாக இதற்கு நான் பதிலளிக்கிறேன், நடந்த உண்மை நிகழ்வோடு.

ஆகஸ்ட் 15,2022 ; மாலை 6'00 மணி இருக்கும்..

பூங்காவில் செக்கு மாடு போல்1 மணி நேரமாக சுற்றி சுற்றி ஓடிவிட்டு மூச்சுவாங்க ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். கிளம்பலாம் என்று நினைக்கையில் ஒரு பையன் (என்னை விட 4 வயசு பெரியவங்க) வந்து Excuse me, can I? என்று இருக்கையை பார்த்தார். நானும் ''yeah, sure '' என்றுவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன்.

அவர் வந்து உட்கார்ந்த உடனே எழுந்துபோனால் நல்லாருக்காது என்று ஒரு 5 நிமிடம் கழிச்சு போலாம் னு வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருந்தேன். திடீர் னு பக்கத்தில் ஒரு சத்தம். திரும்பி பாத்தா மனுசன் முழங்கையை காலில் ஊன்றி குனிஞ்சு உட்கார்ந்து அழுதுட்டு இருக்காரு..

எனக்கு என்ன பண்றது னே தெரியல. ஏனா இதுக்கு முன்னாடி நான் அழுகும் யாரையும் சமாதானம் பண்ணதில்ல. பண்ணவும் தெரியாது. அன்னைக்கு தான் நான் முதல்முறை ஒரு பெரிய பையன் அழுது பாத்தேன். பேசாம கண்டுக்காம போலாம் னு நினைச்சேன்,ஆனால் மனசு கேக்கல.

நான்: Excuse me ( திரும்பவே இல்லை , கொஞ்சம் பக்கத்தில் போய் மீண்டும் excuse me)

அவர் : I'm sorry I'm sorry ( அவசர அவசரமாக கண்ணை தொடச்சிட்டே)

நான்: No, no… U okay? Water?( என்னோட தண்ணீர் பாட்டிலை அவர் கிட்ட நகர்த்தினேன்)

அவர்: It's okay, I'm fine ( கண்ணெல்லாம் சிவந்து தண்ணியா இருந்துச்சு)

நான்: u don't seem fine, have it ( தண்ணீர் பாட்டிலை திறந்து கையில் எடுத்து நீட்டினேன்)

அவர் : கொஞ்சம் problem ( அரை பாட்டில் தண்ணீர் குடித்தார், கிள்ளைத்தமிழ் தமிழ்நாடு இல்லை)

நான் : From Andhra or Telangana

அவர்: Andhra , xxxxx district

நான்: If something bothers u , u can share.

அவர்: A lot , I don't want to waste ur time

நான்: Don't think much …make urself comfortable

அவர் பேச ஆரம்பித்தார்… பேசிக்கொண்டே இருந்தார். அவர் பிறந்த மருத்துவமனை முதல் அவர் அப்பா சொத்து வரை எல்லாத்தையும் சொல்லிவிட்டார். அவர் பிரச்சினைகளையும் சேர்த்து. அவர் பெற்றோரை எதிர்த்து தேர்ந்தெடுத்த துறையில் அவரால் வெற்றி பெற முடியவில்லை

அவரின் மனதில்''He felt lost, lone and helpless''.

நானும் என்னால் இயன்ற அளவு,தெரிந்த அளவு சமாதானம் செய்து, motivational talk கொடுத்து விட்டேன். முன்னரை விட தெளிந்து விட்டாலும் , கொஞ்சம் சோகம் இருந்தது. நான் ''இங்கேயே இருங்க; வரேன் ''என்றுவிட்டு ஓடிப்போய் ஒரு அருண் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் பார் அருகில் உள்ள கடையில் போய் வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.

அவர் சிரி சிரி னு சிரித்துவிட்டார். பார்க் ல போனவங்க எல்லாம் எங்களை பார்க்கிறாங்க. எனக்கு எதுக்கு சிரிக்கிறாருனே தெரியல. திருதிருவென முழிக்க

அவர் ''Oh my god, you got chocolate and ice cream to console me, am I a 5 year old or what?'' என்றார்.

நான் '' ஏங்க எனக்கு இப்படி தான் சமாதானம் செய்ய தெரியும் வேணும் னா சாப்பிடுங்க வேண்டாட்டியும் சாப்பிடுங்க '' என்று மனதில் நினைத்து கொண்டு எது வேணும் னு கேட்டேன்.

அவர் சாக்லேட் பார் எடுத்துக்கொண்டார். எனக்கு ஐஸ்கிரீம். அப்புறம் 2 பேரும் பொதுவாக பேசிட் டே சாப்பிட்டோம். அவர் முகம் தெளிவாகி விட்டது.

அவர் அப்புறம் '' Thanks + சிலபல புகழ்ச்சிகளை '' சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. நானும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பிட்டேன்.

ஆண்கள் எப்போது அழுகிறார்கள்?

ஆண்கள் பிரச்சினைகளை நினைத்து அழுவதில்லை; அதனை சரிசெய்ய முடியாத போது / முடியாதோ என்ற பயத்தில் அழுகிறார்கள்.

ஆறு திரைப்படத்தில் ஒரு காட்சியில் காதாநாயகி'' நான் இருக்கேன்; எப்பவும் இருப்பேன்; கௌரவம் பாக்காம என் தோளில சாஞ்சு அழு '' னு சொல்லுவாங்க. ஹீரோ பிரச்சினை ல தலையிட மாட்டாங்க; அவரே எல்லாத்தையும் பாத்துக்குவார். ஆண்களுக்கு பிரச்சினை இருக்கும்போது அந்த கதாநாயகி மாதிரி அம்மா/ அப்பா/ சகோதரர்கள்/ நண்பர்கள்/ தோழி/ காதலி/மனைவி/ மகள் / மகன் யாராவது ஒருவர் இருந்தால் அழமாட்டாங்க

நான் எனக்கு புரிந்தது வைத்து எழுதி இருக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Previous Post Next Post

نموذج الاتصال