ஆண்களிடம் பெண்கள் என்ன குணங்களை விரும்புகிறார்கள்?

ஆண்களிடம் பெண்கள் என்ன குணங்களை விரும்புகிறார்கள்?

ஆண்களிடம் பெண்கள் என்ன குணங்களை விரும்புகிறார்கள்?


பெண்கள் என்ன விரும்புறாங்கனு எல்லாம் தெரியாது. எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு மட்டும் தான் சொல்ல தெரியும்.

அம்மாவுக்கு எப்பவுமே ஃபேவரைட் பிள்ளையா இருக்கனும்னு நினைக்கிறது. ஆண்களிடம் பிடிச்சதும் இது தான் பிடிக்காததும் இது தான்.

பிடித்த பெண்னை கண் மூடித்தனமா நம்புறது. அந்த விருப்ப பெண்ணாக நாம இருந்தால் அது செம மகிழ்ச்சியா இருக்கும்.

அடுத்ததா மடமுட்டித்தனம். அட இதெல்லாமா பிடிக்கும்னு கேட்டால், ஆமா எனக்கு பிடிக்கும். ரெண்டு பிள்ளைங்க இருக்குற வீட்டுக்கு ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிட்டு வர்ற மடமுட்டித்தனமான ஆண்களை ரொம்ப பிடிக்கும்.

தன்னையே உலகம்னு நினைச்சி சுத்தி சுத்தி வர்ற குடும்பத்தினருக்கு கணக்கு வலக்கு பார்க்காமல் செலவு செய்வது. 1000 ரூபாய்க்கு தனக்கு சட்டை எடுக்கவானு யோசித்த அப்பாக்கள் தான் மகனுக்கு 2000 ரூபாய்க்கு ரிமோட் கார் வாங்கி குடுக்குறாங்க.

மகள் திட்டும்போது அப்படியே நின்னு கேட்குறது. பொதுவாவே ஆண்கள், தான் செய்தது தப்பு தான் அல்லது இந்த முடிவு தப்பு தான், வீட்டம்மா சொன்ன ஐடியா தான் சரி என்று உணர்ந்த பிறகு மனைவி எவ்வளவு திட்டுனாலும் அமைதியா கேட்டுட்டே இருப்பாங்க. தவறை ஏற்றுக்கொள்ளும் அந்த மனசு அழகு.

பாலியகால நண்பன் இன்னைக்கு வந்து கேட்டாலும் கடன் குடுக்குறது.

அடுத்ததா ஆண்களின் அரசியல் பார்வை. டீ கடையில் டீ குடிக்க போறதுனால தான் இவ்வளவு உலக அறிவா இல்ல பேசிக்காவே நீங்க எல்லாம் அறிவாளிகளா?

தண்ணீர் குடத்தை தூக்கிட்டு போறது. இதுக்கும் குணத்துக்கும் என்னம்மா சம்மந்தம்னு கேட்கலாம். அது என்னவோ தெரியல நீங்க ரெண்டு குடத்தையும் ஒரு ஒரு கையில தூக்கிட்டுப்போறத பார்த்துட்டே இருக்கலாம். கொள்ளை அழகு. சிட்டி வாழ் ஆண்களாக இருந்தால் தோள் மீது தண்ணி கேனை தூக்கிட்டுப் போவீங்க. ரெண்டுமே அழகு தான். கேள்விக்கும் இந்த பாயிண்ட்டுக்கும் என்ன சம்மந்தம் இருக்குனு எனக்கும் தெரியல. வாங்க அடுத்த பாயிண்டுக்கு போவோம்.

கொள்கையில் கொக்கா இருக்குறது. நாங்க எல்லாம் கொள்கையை மாத்திப்போம் ஆனால் ஆண்கள் அவ்வளவு ஈஸியா கொள்கையை விட்டுக்குடுக்க மாட்டாங்க. அது பிடிக்கும். (தப்பான கொள்கைக்காக தலை கீழா நிக்கும்போது மட்டும் தான் சரியான மாங்கா மடையன்கள்னு தோனும்)

ஞானம் கொள்ளுதல். எல்லாரும் பெண்கள் தான் ரொம்ப வெட்கப்படுவாங்கனு சொல்லுவாங்க ஆனால் அது சுத்த பொய். எவர் வீட்டுக்காவது சென்றுவிட்டு ரெஸ்ட் ரூம் எங்க இருக்குனு கேட்கவே ஆண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்க. ஆண்கள் பெரும்பாலும் ஷை டைப் தான்.ஒரு மாதிரியா கொஞ்சமா வெட்கப்பட்டுட்டு அந்த வெட்கப்படும் நேரம் அநியாயத்துக்கு அடக்கி வாசிச்சிட்டு அமைதியா இருக்குறது. அமைதி என்றைக்குமே அழகு தானே?

நெக்ஸ்ட் பெண்கள் திட்டுறதை ரசிக்கிறது. அதிலும் மாக்கன், தறுதலை தறுதலை அப்படினு திட்டும் போதும் சரியான மாங்கா மடையண்டா நீனு திட்டும்போதும் பதில் பேசாம ரசிச்சிட்டு இருக்குறது. அந்த நேரத்தில் அந்த மெளனம் அழகு. (அப்பாக்கள் திட்டுகையில் தயவு செய்து இந்த வார்த்தையை பயன்படுத்திவிடாமல் இருப்பது நல்லது)

அப்பாவிடம் திட்டு வாங்கிவிட்டால் மட்டும் ரொம்ப வேதனைப்படுறது. (அப்பா மேல இவ்வளவு மரியாதை இருக்குதானு ஆச்சரியமா இருக்கும் எங்களுக்கு)

பெண்களுக்கு இடம் குடுக்குறது. ஆண்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி தான் பெரும்பாலும் பார்த்துருக்கேன் பெண்கள் தொங்கி ரொம்ப குறைவாக தான் பார்த்துருக்கேன். யாருமே படிக்கட்டில் தொங்குவதை நான் விரும்பல அது வேற கதை. ஆனால் அந்த இடத்தை பெண்களுக்கு கொடுக்குற மனசு பிடிக்கும்.

நல்லா ஊர் சுத்தனும்னு நினைக்கிறது.

அடுத்ததா வயித்துக்கு வஞ்சகம் இல்லாம சாப்பிடனும்னு நினைக்குறது. கடைசியா இருக்குற 45 ரூபாயையும் குஸ்கா வாங்கி சாப்பிட்டு தான் காலி பண்ணுவோம்னு நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு பாருங்க, அட! அட! அட!

ரொம்ப நாள் ஆசைப்பட்ட பொருள் கைக்கு வந்த பிறகு அதை கொண்டாடுவது மற்றும் அதை பாதுகாப்பது. அது பைக்கோ இல்ல கேமராவோ. நாங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் பாதுகாப்போம் ஆனால் நீங்க வாங்கிய அன்று எப்படி பார்த்தீங்களோ அதே மாதிரி தான் ரெண்டு வருசம் கழித்தும் பார்க்குறீங்க & பாதுகாக்குறீங்க. இது உண்மையில் பாராட்டத்தக்கது. ஆண்களை நம்பி எந்த பொருள் வேணா வாங்கிக்குடுக்கலாம் போல.

அடுத்ததா எனக்கு ஆண்களிடம் பிடித்த விசயம் அழகான டேஸ்ட். அதிலும் பிடித்த பெண்ணுக்கு உடை தேர்ந்தெடுக்க சொன்னா ரொம்ப அழகா தேர்ந்தெடுக்குறாங்க. பேசாமல் திருமண புடவையை மணப்பெண்ணுக்கு வருங்கால கணவனே தேர்ந்தெடுக்கலாம். நம்பி குடுங்க அவர்களை விட அழகான உடையை உங்களுக்கு யாரும் தேர்ந்தெடுத்துவிட முடியாது. இதில் என்ன ஆண்களின் குணம் வெளிப்படுகிறது என்றால் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை எப்படி அணு அணுவா ரசிக்கிறாங்கனு தெரியுது. சுட்டு போட்டாலும் எங்களுக்கு இது வராது. அன்புக்குரியவர்களை கொண்டாடுவது நல்ல குணம் தானே?

இதை சொல்ல மறந்துட்டேன் பாருங்க. ப்ராக்டிக்கல் எக்ஸாம்ல பேந்த பேந்த முழிச்சா பிட் வேணுமானு கேட்குறது. எக்ஸாம்ல, தான் தப்பு தப்பா எழுதுனா கூட அதையும் நமக்கு சொல்லி தருவாங்க. அந்த விசயத்துல கிரேட். (அப்புறம் நான் அந்த பிட் பேப்பரை நிஜமாவே வாங்கவில்லை மக்களே. மாட்டுனா அசிங்கப்படுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை)

பேருந்தை பிடிக்க ஓடுனா உதவி பண்ணுறது. வாமா டிராப் பண்ணுறேன். இல்லண்ணா வேண்டாம்ண்ணா என்று சொன்னால் விரட்டி போய் பேருந்தை நிப்பாட்டி வைக்குறது. பெண்களுக்கு உதவி பண்ணுறது இயல்பாவே இந்திய ஆண்களுக்கு இருக்கு. (கிராமத்துல பேருந்தை ஓவர் டேக் பண்ணி நிப்பாட்டிக்கலாம். சிட்டில எப்படினு தெரியல)

எமோஷ்னலா இருக்குறது. ஒன்ஸ் ஒட்டிட்டாங்கனா தொரத்துனாலும் போக மாட்டாங்க. ஆண்களுக்கு பிணைப்பே இருக்காதுனு தான் நாம நினைக்கிறோம் ஆனால் அதை காமிச்சிக்கிறது தான் இல்லையே தவிர ரொம்பவே பாசம் இருக்க தான் செய்யுது.

இருபது போதும்ப்பா. மீதியை அடுத்தடுத்து எழுதுவோம்.
Previous Post Next Post

نموذج الاتصال