ஆண்கள் ஏன் வலைத்தளத்தில் பெண்களை அதிகம் பின் தொடர்கின்றனர்? அவர்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள் என்பது ஏன் புரிவதில்லை?

ஆண்கள் ஏன் வலைத்தளத்தில் பெண்களை அதிகம் பின் தொடர்கின்றனர்? அவர்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள் என்பது ஏன் புரிவதில்லை?

ஆண்கள் ஏன் வலைத்தளத்தில் பெண்களை அதிகம் பின் தொடர்கின்றனர்? அவர்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள் என்பது ஏன் புரிவதில்லை?


இதற்கு ஒன்றும் பெரிய காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. எல்லோரும் அறிந்த காரணம் தான்.

உளவியல் ரீதியாக பார்த்தால், முக்கியமான ஒரே காரணம், ஒரு ஆண் தனக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவான் என்பதை பார்ப்போம்.

  • தனக்கு கிடைக்காததை தேடிப்போதல்
  • அன்பு பாசம் பரிவு காதல் நேசம்
  • தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும்.
  • தன்னை மதித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • தன் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும்.
  • தன்னை பாராட்ட வேண்டும்.
  • தனக்கு ஆறுதல் தர வேண்டும்.
  • தான் மற்றவரகளை கவரவேண்டும் அல்லது மற்றவர்களின் பார்வை நம் மீது பட வேண்டும்.

இதில் ஏதோ ஒன்றையோ அல்லது அனைத்தையுமே தேடி அலைவான் மனிதன்.

இவைகள் எங்கு கிடைத்தாலும் யாரிடத்தில் கிடைத்தாலும் மனிதன் தேடிப்போவான். அது கிடைக்குமிடம் அவன் குடும்பமாக இருக்கலாம். நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் வலைத்தலங்களாகவும் இருக்கலாம்.

ஆண்கள் தேடிப்போவது பெண்களாகவும் இருக்கலாம். ஆண்களாகவும் இருக்கலாம்.

அதேபோல் பெண்கள் ஆண்களையும் அல்லது பெண்களையே கூடத் தேடிப் போகலாம்.

குறிப்பாக ஆண்கள் வலைத்தளங்களில் பெண்களை தேடிப்போவது இயற்கை. தவறில்லை.

சுருக்கமாக சொன்னால், தனக்கு வேண்டியதை \ கிடைக்காததை பெறுவதற்காக யாரோ ஒருவரை பின் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள், இருபாலருமே.

வலைத்தலங்களில் ஆண்கள் பெண்களை பின் தொடர காரணம் பாலுணர்வு மற்றும் காமம் என்று சொல்லி ஆண்களை கொச்சைப் படுத்த விரும்பவில்லை. இவர்கள் வெகு குறைவே. இவர்களை நான் கணக்கிலேயே எடுக்கவில்லை. இது போன்றவர்கள்தான் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு சமுதாயத்தில் தவறான முன்னுதாரணமாகி விடுகிறார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال