ஏன் பொண்ணுங்க மேக் அப் போடுராங்க..? யாருக்காக...?

ஏன் பொண்ணுங்க மேக் அப் போடுராங்க..? யாருக்காக...?


ஆண்களுக்கு மேக்கப் போடாத பெண்களையே அதிகம் பிடிக்கிறது என்றால், ஏன் பெண்கள் மீண்டும் மீண்டும் மேக்கப் போடவே விரும்புகிறார்கள்?

இதுகுறித்து முன்னரே ஒரு பதிவினை வெளியிட்டோம் படிக்காத நண்பர்கள் படித்து பார்க்கவும்...

சரி வாங்க விஷயத்துக்கு போவோம்...

பெண்கள் இந்த கேள்விக்கு உண்மை பேச மாட்டார்கள். நாங்கள் ஆண்களுக்காக ஒன்றும் மேக்கப் போடவில்லை. யார் சொன்னா? எங்களுக்காக, நாங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது கூட மேக்கப் உடன் தூங்குவோம். காலையில் தூங்கி எழுந்து தலை வாராமல் என் கணவன் முன்னே அல்லது காதலன் முன்னே போய் நிற்போம்!

ஏன் பொண்ணுங்க மேக் அப் போடுராங்க..? யாருக்காக...?


எங்கள் மேக்கப் எல்லாம் ஆண்களுக்குகாக அல்ல! எங்களுக்காக!

ஆண்களும் பதிலை படித்து விட்டு, மகிழ்ச்சியில், ஆஹா பிரமாதம் என்று ஆதரவு வாக்கு அள்ளி வீசுவார்கள்!

ஆனால் உண்மை அது இல்லை! நான் உளவியல் ரீதியாக சொல்கிறேன்! பெண்கள் தயவு செய்து இந்த பதில் படித்து சிரியுங்கள், ஆனால் கோபபடாதீர்கள்! ஏன் என்றால் பெண்களுக்கு சிரிப்பு ஒரு இலவச மேக்கப்!

அது என்ன காரணம்?

இதே கேள்வியை reverse இல் ஆண்களிடம் கேட்டு பாருங்கள். உண்மை பேசுவார்கள்!

நீங்கள் ஆபீசுக்கு போகும்போது மேக்கப் போட்டுக்கொண்டு போகிறீர்கள்? அது எதற்கு? கூட வேலை பார்க்கும் பெண்களை மயக்கவா?

என்னது மேக்கபா? எழுந்திருக்கிறது 8 மணி! 9 மணிக்கு ஆபீஸ் போக ரெடியாக கிடைப்பதே பத்து நிமிஷம்! அதுல சிலசமயம் குளிக்கிறது தலை வாருவது கூட இல்லை! அந்தப் பாஸ், கொஞ்சம் லேட்டா போனா, ஏன் லேட்? என்று எரிந்து விழுவான்!

இந்த லட்சணத்தில் நான் எங்கு இது மேக்கப் போடுவது? அதுவும் தவிர, என் ஆபிசில் வேலை பார்க்கும் பெண்கள், ஒன்றும் ரதிகள் கிடையாது! நானும் மன்மதன் கிடையாது! என்னுடைய இந்த முகத்திற்கு, மேக்கப் தேவையில்லை! இதற்கே பெண்கள் க்யூவில் நிற்கிறார்கள்! என்று பதில் சொல்வார்!

உண்மையில் ஆண்களுக்கு நேரம் இல்லாமல் இல்லை! அவர்களுக்கு நேரத்தை ஒதுக்க விருப்பமில்லை! ஆனால் பெண்கள் வெளியே செல்ல தயாராவதற்கு, தன்னை அலங்காரம் செய்து கொள்வதற்கு விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம், ஒதுக்கி அழகுபடுத்திக் கொள்வார்கள்!

ஆங்கிலத்தில் Priorities என்று சொல்வார்கள்!

தான் எங்கு சென்றாலும், தன்னை பளிச்சென்று காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அழகியல் சிந்தனை பெண்களுக்கு இயற்கையிலேயே உண்டு!

நான் கூட நினைப்பேன். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள், எதற்காக நேரம் செலவு பண்ணி இப்படி மேக்கப் போடுகிறார்கள்?

காரணம் உண்டு!

ஒரு ஆண் கண்ணாடி முன்னாடி நின்று பார்த்தால், அவன் கண்களுக்கு தன்னுடைய நிறைகள் மட்டும் தான் தெரியும்! அதனால் மேக்கப் அவசியமில்லை என்று நினைப்பான்!

ஒரு பெண் கண்ணாடி முன்னாடி நின்று பார்த்தால், அவள் ஐஸ்வர்யாராய் ஆக இருந்தால் கூட, அவள் குறைகள் தான் சட்டென்று கண்ணாடியில் தெரியும்! உடனே குறையை நிவர்த்தி செய்கிறேன் பேர்வழி என்று மேக்கப் போட ஆரம்பித்து விடுவாள்! இதுதான் மேக்கப் ரகசியம்!

பின்குறிப்பு : மேலே உள்ள போட்டோ, நெட்டில் இருந்து எடுத்தேன். மேக்கப் போட்ட பெண் ஒருத்தி, சும்மா காட்டத்தான். மற்றபடி அந்த பெண் யார் என்ன ஊர் என்று எனக்கு தெரியாது!

இதைப் பார்த்துவிட்டு ஆண்கள், அல்லது பிள்ளைகளை பெற்றவர்கள் யார் அந்த பெண்? மிகவும் அழகாக இருக்கிறாள், ஜாதகம் இருக்கிறதா? நாங்கள் கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம், என்று கேட்காதீர்கள்! மேக்கப்பை பார்த்து மயங்காதீர்கள்! சினிமா நடிகைகள் போடும் மேக்கப் ஒரு பொய் முகம்! அது உண்மை அழகு கிடையாது. மேலும் இந்த பெண் யார் என்று கூட எனக்கு தெரியாது!
Previous Post Next Post

نموذج الاتصال