ஆண்கள் பெண்களை வெளிப்படையாக கவர முற்படுவது போல், பெண்கள் ஏன் செய்வது கிடையாது?
பெண்கள் செய்றாங்க அதற்க்கான மரியாதைய உடனே ஆண்கள் தருவதில்லை. ஆண்கள் மாதிரி கலரு வேணும் செக்ஸியா இருக்கணும் என்று பெண்கள் மயங்கிட மாட்டாங்க, மாதக் கணக்கில் பேசுவாங்க ...
பேசுவது, மரியாதை தருவதில், அன்பாக பேசுகிறாரா, ?அக்கறையான வரா? பண்புள்ளவரா? என அனைத்தையும் கவனிப்பாக, அதில் சிறு குறை காணப்பட்டால் விலகிடு வாங்க, இல்லன்னா எதுவும் சொல்லாமல் மேலோட்டமான நட்பா தொடருவாங்க ....
எனக்கு ஆறு மாதமாக ஒரு நண்பன் என் 23 வயதில் பிடித்த நண்பன் படிப்பு கம்மி ஆனால் என்னிடம் அதிகம் படித்ததாக காட்டிக் கொண்டான், அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக காட்டிக் கொண்டான்.
அவன் வேறு மாநிலத்தை சேர்ந்தவன் பிறந்தது தமிழ் நாட்டில் தான். அதையும் மறைத்து விட்டான் அவன் காதலித்த விடயத்தையும் மறைத்து விட்டான். ஒரு முறை அவனின் நண்பன் மூலமாக இதை எல்லாம் தெரிந்துக் கொண்டேன்....
இதெல்லாம் தெரியாமல் அவனுக்கு ஒரு புத்தகத்தில் என்னை கவரும்படி கவிதை எழுதி அந்த புத்தகத்தில் வைத்துக் கொடுத்தேன்.... பின்பு, அவனின் பல தகவல்கள் கிடைத்தவுடன் மெளனமாக கண்களில் கண்ணீர் வந்தது ஏன் இவ்ளோ நாளாக தனியாக கெத்தா தான வாழ்கிறோம்...
இடையில் ஏன் எனக்கு இந்த அல்ப புத்தி என்று மனம் வெறுத்து அழுகையில் ஒரு தெளிவு பிறக்கும், அவனிடம் அந்த புத்தகத்தை கேட்டேன்.
அப்படியே கொண்டு வந்து கொடுத்தான். ஸாரிங்க, படிக்க நேரம் இல்லை. நீங்க கொடுத்தப் போ கொண்டு போய் என் அறையில் வைத்தது தான்.. இப்ப தான் எடுத்துட்டு வந்தேன் என்று கொடுத்து விட்டு சென்று விட்டான்....
இப்படி பேசியது என் பெண்மையை இழிவு படுத்தின மாதிரி. இது ஒரு அவமானம் மாதிரி, இதற்கப்புறம் எந்த ஆணிடமும் கவரும் படியா நடத்துக் கொள்ள முடிவதில்லை.
பெண்களின் அணுகுமுறை முதலில் மெதுவாக தான் ஆரம்பிக்கும், ஆனால் அதில் மனதளவில் எக்கச்சக்க ஆசைகள் அது போதாதுனு பயம் ஒரு புறம், மேலும் சூழ்நிலை ஒரு புறம், என்ன தான் சம உரிமை என்று இருந்தாலும் ஏனோ ஆண்களை கவர பெண்களுக்கு இன்னும் தயக்கமே .....🙄😴😔
Tags
சுவாரசியமான தகவல்கள்