உலக வரலாற்றில் மிகவும் தீய பெண் யார்?
"இளம் பெண்களை கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்து வந்தால் என்றென்றும் இளமையாகவே இருக்கலாம்."
இதை நம்பி, 650க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த எலிசபெத் பத்தோரி என்பவர், உலகிலேயே அதிக கொலை செய்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்
பத்தோரியை பற்றி..
16 ஆம் நூற்றாண்டுகளில் ஹங்கேரியில், செல்வ வளம் மிகுந்த பணக்கார குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தாள்.
யாரேனும் குற்றம் செய்தால் ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அந்த குற்றவாளியை, அதனுள் வைத்து தைத்து இரண்டும் இறக்கும் வரை பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு தண்டனை அந்த நாட்டில். இது போன்ற பல கொடூரமான சம்பவங்களை கண்டு வளர்க்கிறாள். அப்போதே தன் பணியாளர்களை மிகவும் கொடுமை படுத்துவாள்.
தனது 15 வயதில் பெரேக் நடாஸ்டி என்பருடன் திருமணம் நடக்கிறது. பணியாளர்களை சித்திரவதை செய்யும் பழக்கம் அங்கும் தொடர்கிறது. கணவரும் சில சமயங்களில் இவளுடன் சேர்ந்து சித்திரவதை செய்வாராம்.
கணவர் பெரும்பாலும் எங்காவது போருக்கு சென்று விட்டால், இவள் தனியாகவே இருப்பாளாம்.
ஒரு நாள் ஒரு பணிப்பெண் இவளுடைய தலைமுடியை திருத்திக்கொண்டிருக்கும் போது சற்று வேகமாக இழுத்துவிட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த பத்தோரி அந்த பெண்ணை, ரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கினாள். இதில் சிறிதளவு ரத்தம் பத்தோரியின் கைகளில் பட்டுவிட்டது. பிறகு இரவு நேரத்தில், தன் கையில் அந்த பணிப்பெண்ணின் ரத்தம் பட்ட இடம் அழகாகவும் இளமையாகவும் தெரிவதை கவனித்தாள்.
பிறகு தன் வாழ்நாள் முழுவதும் தன் உடல் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இளம் பெண்களை கடத்தி, கொலை செய்ய தொடங்கினாள்.
இவளே ஊருக்குள் சென்று பெண்களை கடத்திக் கொண்டு வருவாள். இவளால் ஊருக்குள் சென்று பெண்களை கொண்டு வர முடியாத சமயங்களில் தனது காவலர்களை அனுப்பி பெண்களை கொண்டுவரும் படி உத்தரவிடுவாள்.
இதனால் ஊரில் பெண்கள் காணாமல் போக தொடங்கினர். கொலை செய்து ரத்தத்தை எடுப்பது மட்டுமன்றி சில சித்தரவதைக்களும் செய்வாள்.
பெண்களை கூண்டில் அடைத்து வைப்பாள்.
பின் அவர்களை பனிக்கட்டியில் வீசி, அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசிப்பார்.
கைகளில் நெருப்பு வைத்து சுடுதல், நெருப்பு பந்தை பெண்களின் முகத்தில் எறிதல் போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டாள்.
கொதிக்கும் நீரை அவர்கள் மீது ஊற்றி தோலை தனியே பிரித்தெடுப்பாள்.
பெண்களின் உடலில் தேனை ஊற்றி தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை அவர்களின் மீது விட்டு கடிக்க விட்டு சித்திரவதை செய்வாள்.
நரமாமிசம் உண்ணும் படி கட்டாயப்படுத்துவாள்.
பெண்களை இரவு நேரத்தில் கட்டி வைத்து, ஊசியை வைத்து குத்துவது உடலைப் பாகங்களை வெட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளாள். மேலும் பல கொடுமைகள் செய்துள்ளாள்.
இவளின் இந்த கொடூரங்கள் தெரிந்ததால் மக்கள் யாரும் வேலைக்கு செல்லவே பயந்தனர். சிலர் இவளுக்கு அஞ்சி தன் பெண் பிள்ளைகளை மறைத்து வைக்க தொடங்கினர்.
1610 ஆம் அண்டிற்கு பிறகு துர்சோ என்பவர் பத்தோரிக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். கோட்டையை ஆராய்ந்த போது, கண்ணை இழந்த, கை கால்களை இழந்த நிலையில் பல அடையாளம் தெரியாத பெண் சடலங்கள் கண்டறியப்பட்டது.
அதன் பின் விசாரணை நடத்தி பத்தோரி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகமல் தன் பணியாளர்களை தனக்கு பதில் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடையும்படி செய்தாள்.
இருப்பினும் இவள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. ஒரு தனிக் கோட்டையில் சிறை வைக்கும் படி ஹங்கேரி அரசு உத்தரவிட்டது. அவளுக்கு உதிவிய பணியாளர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.
அந்த மூடப்பட்ட கோட்டையில் இருந்த பத்தோரி, தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தாள் என கூறப்படுகிறது.
கூகுளே உங்களிடம் நான் தெளிவாக கூறிக் கொள்கிறேன் இந்த செய்தியானது வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவம் ஆகும் எனவே இதனை ஆபாச பதிவுகள் என்று நினைக்க வேண்டாம்...
கூகுளை தாயோலியை வைத்துக்கொண்டு நல்ல விசயம் ஒன்னும் பண்ண முடியவில்லை ஆனாவூனா ஆபாச பதிவுனு போடறாங்க...
நீங்க சொல்லுங்க நண்பர்களே நான் உங்களுக்கு பயனுள்ள தகவலை தருகிறேனா இல்லை கூகுள் போல நீங்களும் கூறுகிறீர்களா...?
Tags
சுவாரசியமான தகவல்கள்