பூட்டானின் “இரவு வேட்டை” பற்றிய விசித்திரமான தகவல்களைப் பற்றி என்ன சொல்லப்படுகின்றது? யார், எதை வேட்டையாடுகிறார்கள்?

பூட்டானின் “இரவு வேட்டை” பற்றிய விசித்திரமான தகவல்களைப் பற்றி என்ன சொல்லப்படுகின்றது? யார், எதை வேட்டையாடுகிறார்கள்?

பூட்டானின் “இரவு வேட்டை” பற்றிய விசித்திரமான தகவல்களைப் பற்றி என்ன சொல்லப்படுகின்றது? யார், எதை வேட்டையாடுகிறார்கள்?


இமாலய சாம்ராஜயமான பூட்டானில்தான் இந்த இரவு வேட்டை இடம்பெறுகின்றது.

நகரப்புற ஆண்கள் , கிராமப் புறப் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதற்காக , இரவுப் பொழுதுகளில் கிராமங்களை முற்றுகையிடுகிறார்கள்..

பொதுவாக தனியனாக உள்ள பெண்கள், சில சமயங்களில் திருமணமான பெண்கள், ஏழைப் பெண்கள், வயல்வெளிகளில் தனித்து உறங்கும் பெண்கள், உரத்து கேள்வி கேட்கத் தயங்கும் உறவிர்களைப் கொண்ட பெண்கள் போன்றவர்களையே இந்த ஆண்கள் குறிவைக்கிறார்கள்.

Pchiru Shelni, Night Hunting என்றெல்லாம் இதைச் சொல்கிறார்கள்..இங்கு இது பற்றிய சட்டம் வலுவில்தாததால், இப்படியான பாலியல் குற்றங்கள் இங்கு தண்டிக்கப்படுவது குறைவு..

ஏற்கனவே திட்டமிட்டு நடக்கும் சந்திப்புகளை விட, ஏனைய நிகழ்வுகள் எல்லாமே, பாலியல் குற்றங்கள் என்றுதான் எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வும் இடம்பெறுவதால், சட்டத்தில் இதற்கு ஒரு தனிப் பிரிவு வேண்டும் என்கிறார்கள்.. 

ஆனால் படிப்பறிவு குறைந்த அல்லது படிப்பறிவு இல்லாத கிராமப் பெண்களை, படித்த நகரத்து இளைஞர் கூட்டம், கலாச்சாரம் என்ற பெயரில், இழிவுபடுத்துவதாகவே பலரும் கருதுகிறார்கள்..

இங்கே ஒரு சிக்கலும் இருக்கின்றது.. இந்த இரவு அநியாயம் நடந்து கொண்டிருக்கும்போது, வகையாக எவராவது மாட்டிக் கொண்டால் சம்பந்தப்பட்ட பெண்ணை ஆண் திருமணம் செய்தேயாக வேண்டும்..

ஆனால் பிடிபடும் வரை இந்த ஆண்கள் கையைக் கட்டிக் கொண்டா இருக்கப் போகிறார்கள்..

பூட்டானின் “இரவு வேட்டை” பற்றிய விசித்திரமான தகவல்களைப் பற்றி என்ன சொல்லப்படுகின்றது? யார், எதை வேட்டையாடுகிறார்கள்?

கிராமத்து வீடுகள் இப்படிததான் இருக்கும்…

பூட்டானின் கிழக்கு பிராந்தியத்தில்தான், இந்த இரவு வேட்டைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது..

பெண்ணைத் தேடி, ஆண் அவள் வீட்டுக்கு திருட்டுத்தனமாக இரவில் நுழையும் இந்தக் கலாச்சாரத்தை Boemena என்று இங்கு அழைத்தார்கள். நவீன பூட்டானில், இதையே இரவு வேட்டை என்கிறார்கள்.. 

தொடர்பில் உள்ள ஒரு ஆண், பெண்ணின் வீட்டுக்குள் இரவில் நுழைய வழி உண்டாக்கி விட்டு, வீட்டார் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ நுழைவதுதான் இந்த இரவு வேட்டை...ஒரு காலத்தில் தமக்கு விருப்பமான ஒரு இளம் பெண்ணைத் தேடும் கலாச்சாரமாக ஆண்களுக்கு இந்த நடவடிக்கைகள் இருந்துள்ளன...

காலப்போக்கில் இந்தக் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்றே சொல்கிறார்கள்..வேண்டாத ரீன் ஏஜ் கர்ப்பம், பாலியல் நோய் பரவல், பாலியல் வன்முறை, திருமணமின்றி, பெற்ற பிள்ளைகளை அனாதரவாக விட்டுவிடும் ஆண்கள் என்று இந்தக் கலாச்சாரம் பாழ்பட்ட நிலையில் இருக்கின்றது என்பது பலரின் குற்றச்சாட்டு.. வெகு விரைவில் இந்தக் கலாச்சாரம் முற்றாக அழிந்து போனால், ஆச்சரியப்படுவதற்கில்லை.
Previous Post Next Post

نموذج الاتصال