மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

What are some of the most amazing psychological facts?


ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசும் பொழுது கண்ணைப் பார்த்துப் பேச வேண்டுமென சொல்வார்கள். அது சரி தான். ஆனால் அது பாதி உண்மை தான்.

இப்படி எடுத்துக்கொள்வோம், நீங்கள் அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் முதலில் பேச வேண்டும். அதற்கு முன் நாம் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பேசுவதற்கு முன் எப்படி பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமென்று நீங்கள் என்னை கேட்கலாம்?நிச்சயம் முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

பெண்கள் பெரும்பாலும் ஆண்களை போல் தர்க்க ரீதியாக(Logical) முடிவெடுக்க மாட்டார்கள். அவர்கள் முடிவு எடுக்கும் தன்மை பெரும்பாலும் உணர்ச்சி ரீதியில்(emotions) தான் இருக்கும். ஏனென்றால் பெண்கள் தங்களது வலது பக்க மூளையினால் ஆதிக்கம் பெற்றவர்கள். அது தான் உணர்ச்சிகளுக்கு காரணம்.

நாம் பரஸ்பர நம்பிக்கையையோ அல்லது ஈர்ப்பையோ ஏற்படுத்த வேண்டுமெனில் அவர்களின் வலது பக்க மூளையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பிணைப்பை ஏற்படுத்தவும் சில வழிகள் இருக்கின்றது. எப்படி? மேலும் கீழே படியுங்கள்.

அந்த பிணைப்பை ஏற்படுத்த பெண்களின் வலது பக்க மூளையின் கதவை நாம் திறக்க வேண்டும். இந்த இடத்தில் தான் வருகிறது கண் தொடர்பு(eye contact). நீங்கள் அவர்களின் கண்ணைப் பார்த்து பேசும் பொழுது பெரும்பாலும் இடது கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். ஏனென்றால் இடது கண்ணால் பார்க்க படும் காட்சி வலது பக்க மூளையில் செயலாக்கப் படும். இது ஏன்? நம் இரு பக்க மூளைகளும் அதற்கு நேர் எதிரான உடல் பாகங்களை கட்டுப்படுத்தும். நம் இடது பக்க மூளை வலது உடல் மீதும், வலது பக்க மூளை இடது உடல் மீதும் ஆதிக்கம் செலுத்தும்.

பெண்களின் இடது கண் தான் அவர்களது வலப்பக்க மூளைக்கான சாவி. நீங்கள் அவர்களின் இடது கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களே சமயத்தில் அந்த தொடர்பை துண்டிப்பார்கள். எக்காரணத்தை கொண்டும் நீங்கள் முதலில் துண்டித்து விடாதீர்கள். அந்த தொடர்பை துண்டிக்கும் பொழுது அவர்கள் தங்களது கண்ணை கீழ்நோக்கிப் பார்த்தால் அது இணக்கத்திற்கான ஒரு குறியீடு.

அந்த துண்டிப்பு நடந்த பிறகு அவர்கள் மீண்டும் கண் தொடர்பை ஏற்படுத்தினால் பரஸ்பர நம்பிக்கை அல்லது ஈர்ப்பு ஒன்று ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் அவர்களை பார்க்க கூடாது. இது உங்களைப் பற்றி அவர்கள் அதிகமாக நினைக்க தூண்டும்.

உள்ளடக்கம் - ஒரு உளவாளிகள் எதிரி நாட்டு ரகசியங்களை திருட Honey Trap எனப்படும் ஒரு விதத்தை கையாள்வார்கள். அதை பற்றி படித்த பொழுது அறிந்து கொண்ட விடயம் இது.
Previous Post Next Post

نموذج الاتصال