ஆண்கள் உடலால் உறுதியானவர்கள், மனதால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள், மனதால் உறுதியானவர்கள் என்பது இது எந்த அளவுக்கு உண்மை?
முற்றிலும் உண்மை. உண்மையை தவிர வேறில்லை.
கணவனை இழந்த பெண்கள் பல நூறு சங்கடங்கள் , போராட்டங்களை எதிர் கொண்டு மறுமணம் கூட செய்யாமல் தமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பது கண்கூடாக பார்க்க முடியும்.
அது போல மனைவியை இழந்த ஒரு ஆண் ஒரு பெண்ணை மணமுடிக்காமல் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பிரம்ம பிரயத்தனம்.
வில்லியம் கோல்டிங் —
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் சொல்கிறார்:
" பெண்கள் முட்டாள்தனமாக தாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்; உண்மையில் அவர்கள் ஆண்களை விட பல மடங்கு மேலானவர்கள், எப்போதும்.."
அதேபோல் ஆண்கள் என்ன குறைந்தவர்களா? .. இல்லை…
ஆண்களும் பலமானவர்கள் தான்.. ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வரை…
ஒரு பழம் பாடல் ஆண் பற்றி இப்படி சொல்கிறது:
மணமாகாத ஆண் ஒரு கம்பீரமான சிங்கம்
அதே ஆடவன் ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பிறகு ஒரு ஒயிலான மயில்
திருமணம் முடிந்த பிறகு அவன் ஒரு பொதி சுமக்கும் கழுதை என்றும் வர்ணிக்கின்றது
…
தமிழ் திரைப்படங்களில் ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறோம்:
நேர்மையை கடைப்பிடிக்கும் ஒரு கறாரான போலீஸ் அதிகாரியான கதாநாயகனை வழிக்கு கொண்டு வர வில்லன் கூட்டத்தினர் அவனுடைய காதலி அல்லது மனைவி அல்லது குழந்தைகள் அல்லது ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கடத்தி கொண்டு போய் ஒரு பாழடைந்த பங்களாவில் வைத்துக்கொண்டு மிரட்டும் காட்சிகளை … தமிழ் படத்தில் என்றில்லை உலகெங்கும் எல்லா நாட்டிலும் இதே கதை தான்.
ஏன்?
ஏனென்றால் அது தான் உண்மை.
ஆணுக்கு எவ்வளவு உடல் பலம் உண்டென்றாலும் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றால் மனவலிமை பெரும்பாலும் குன்றி விடுகிறது.
அதேசமயம்,
வழிப்பறி திருடர்கள் ஒரு பெண்ணின் கழுத்து தங்க சங்கிலியை அறுத்து கொண்டு ஓடும் போது , ஆண்கள் கூட காட்டாத அசாத்திய துணிச்சலை காட்டி திருடர்களை மற்றவர்கள் துணையோடு மடக்கி பிடித்த வீர பெண்கள் இங்கு உண்டு.
ஆண்களுக்கு பெண்களை விட மனவலிமை குறைவாக இருப்பதே நல்லது.
ஆண்களின் மனவலிமையின் உச்சம் வைராக்கியம். எந்தவித சுகபோக வாழ்க்கையும் வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்து விட்டு செல்லுதல்.
அதாவது குடும்பம் பெண்டு பிள்ளைகள் உட்பட முழுமையாக உலகை துறந்து ஞானம் தேடி செல்லும் முயற்சி.
இந்த வாய்ப்பு மற்றும் மன வலிமை பெரும்பாலானவர்களுக்கு வருவதில்லை. அதுவே நல்லது.
ஏனென்றால் தவம் செய்யும் துறவிகள் மற்றும் முனிவர்கள் எல்லோரையும் தாங்கி நிற்பவன் இல்வாழ்க்கை நடத்தும் குடும்பஸ்தன் தான்
பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உடல்வலிமையை இறைவன் தந்தான். ஆனால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை, வாழ்க்கை போராட்டங்களை தாங்கும் அபாரமான மன வலிமையை அருளி இருக்கின்றான்.
ஆனால் ஒரு பெண் நினைத்தால் தான் ஒரு குடும்பம், ஒரு மனிதன் விளங்க முடியும்; உயர முடியும். இதை புரிந்து கொண்ட ஆண்கள் குடும்பம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
தமிழ் வாழ்க
நன்றி
Tags
சுவாரசியமான தகவல்கள்