பெண்கள் ஆண்களின் எந்த உடல் பகுதிகளை மறைமுகமாக ரசிப்பார்கள்? தவறான உள்நோக்கில் கேட்கவில்லை. ஆண்கள், கூந்தல், முன்னழகு மற்றும் பின்னழகு இவற்றை ரசிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அது போல பெண்களும் ரசிப்பார்களா என்ற ஆர்வம்.

பெண்கள் ஆண்களின் எந்த உடல் பகுதிகளை மறைமுகமாக ரசிப்பார்கள்? தவறான உள்நோக்கில் கேட்கவில்லை. ஆண்கள், கூந்தல், முன்னழகு மற்றும் பின்னழகு இவற்றை ரசிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அது போல பெண்களும் ரசிப்பார்களா என்ற ஆர்வம்.


பெண்கள் ஆண்களின் எந்த உடல் பகுதிகளை மறைமுகமாக ரசிப்பார்கள்? தவறான உள்நோக்கில் கேட்கவில்லை. ஆண்கள், கூந்தல், முன்னழகு மற்றும் பின்னழகு இவற்றை ரசிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அது போல பெண்களும் ரசிப்பார்களா என்ற ஆர்வம்.


எழுதுவோமே, நாங்களும் இந்த கேள்விக்கெல்லாம் பதில் எழுதுவோமே.

ஏன் ஆண்களுக்கு மட்டும் தான் பெண்களை ரசிக்க தெரியுமா? எங்களுக்கு எல்லாம் டேஸ்ட் இருக்காதா என்ன?

நான் ஒரு ஆண்மகனை பார்ப்பதாக இருந்தால் முதலில் ஸ்லீவ் ரோல் பண்ணிருக்கும் விதத்தையும் ஷு லேஸ் கட்டியிருக்கும் நேர்த்தியையும் தான் பார்ப்பேன். ஆனால் அதெல்லாம் உடல்பாகங்கள் கணக்கில் வராதுனு சொல்லுவீங்க. எதுக்கு வம்பு? பேசாமல் கேள்விக்கு பதிலை எழுதிட வேண்டியது தான்.

ஆண்களின் கை விரல் நகங்கள் தான் முதல் அழகு. எனக்கு பேய் மாதிரி நகம் வளர்த்து நெயில் பாலிஷ் இட்டிருக்கும் விரல்களை பிடிக்காது. ஆண்களின் கை விரல்கள் கொஞ்சம் சதைப்பற்றுடன் கொஞ்சம் முரடாகவும் இருக்கும் அதில் இருக்கும் நகங்கள், அதை கடிச்சி குதறி வைக்காமல் நீட்டா வெட்டி வைத்திருந்தால் அழகா இருக்கும்.

அதில் என்னமா அழகுனு கேட்டால், பெரும்பாலான ஆண்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். அந்த ரத்த ஓட்டத்தின் செழுமை நகத்திலே தெரியும். சரியா மெயிண்ட்டெயின் செய்தால் பெண்களின் நகத்தை விட ஆண்களின் நகம் ஒரு வித ஷைனிங்கா இருக்கும்.

நெயில் பாலிஷ் இல்லாத அந்த கை விரல் நகங்கள் எத்தனை அழகு!!!

அடுத்ததா அந்த உச்சந்தலை. எனக்கு அப்படியே அந்த உச்சந்தலை முடியை பிடிச்சி ஆட்டு ஆட்டுனு ஆட்டி முகர்ந்து பார்க்க பிடிக்கும். ஷேர் ஆட்டோவில் நமக்கு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நேர்காணலுக்கு செல்லும் ஒரு ஆண்மகனின் க்ளீன் ஷேவை ரசிப்பதா? உச்சந்தலையை பார்ப்பதா என்றால், உச்சந்தலையை தான் பார்ப்பேன். அதிலும் சுருள் முடி இல்லாமல் ஊச்சி ஊச்சா இருக்கும் முள்ளு மண்டை முடி என்றால் ஐயோ!!! கொள்ளை அழகு!!!

எனக்கு அரக்கை டீ சர்ட் அணிந்து கொஞ்சம் ஆர்ம்ஸ் தெரியுமாறு புல்லட்டோ அல்லது கருப்பு நிற பல்சரோ ஓட்டிட்டு சென்றால்...., (ஐயோ கையில ஒரு கேமரா இல்லையேடா போட்டோ எடுக்க என்று தோன்றும்) அதிலும் கருப்பு, சாம்பல், புளூ மற்றும் சிவப்பு நிற டீ சர்ட் மட்டும். மெரூன் கலர், பிங்க் கலர், கிரீன் கலர் டீ சர்ட் எல்லாம் இதில் அடங்காது. மன்னிக்கவும்.

அடுத்ததா முட்டிக்கால் தான். வேட்டியையோ, சாரத்தையோ மடிச்சி கட்டிட்டு பின்னாடி வார் வைத்து மாட்டும் அல்லது ஒரு லெதர் காலணி (வுட் லேண்டாக இருந்தால் இன்னும் சிறப்பு) அணிந்திருந்தால் பார்க்க தான் செய்வோம். ஆன்.

என் பார்வையில் ஆண்களின் அழகே ரோமங்கள் தான். எல்லா ஆண்களும் சர்ட் பட்டனை திறந்து விட்டிருந்தால் பிடிக்காது. பெண்ணுக்கு பிடித்த ஆண்மகன் (காதலன் மட்டும்) மட்டும் நெஞ்சு முடி தெரியுமாறு ரெண்டு பட்டனை திறந்துவிட்டால் கண்டிப்பாக அந்த காதலி ரசிக்க தான் செய்வாள்.

எனக்கு வழவழப்பான பெண்கள் கையை விட, ரோமங்கள் இருந்து அதில் ஒரு வெள்ளி காப்பு அணிந்திருக்கும் ஆண்மகனின் கைகள் தான் பிடிக்கும். அந்த நீளமான, நெருக்கமான ரோமங்களும் அந்த காப்பும் அழகோ அழகு!!!

இதை நான் சொல்லியே ஆகனும். உள் பணியன் அணிந்து அந்த அரைக்கால் சட்டையுடனோ அல்லது லுங்கியுடனோ காலமே எழுந்து நின்னு சோம்பல் முறிக்கும் அழகு!!! அந்த ஆர்ம்ஸ், அந்த தோள்பட்டை எல்லாம் அழகா என்னனு தெரியல ஆனால் பணியன் போட்டிருந்தாலே அழகு தான். ஆனால் எனக்கு அந்த சிமெண்ட் கலர், ரெட் கலர் பணியன், கழுத்தை ஒட்டி சின்ன பட்டை கொண்ட பணியன் எல்லாம் பிடிக்காது. நமக்கு எப்பவுமே வெள்ளை நிற பணியன் தான்.

உண்மைய சொன்னால் நீங்கள் வேட்டி சட்டை, கோர்ட் சூட், ஸ்லிம் பிட்டை விட அந்த பணியனில் தான் அழகா இருக்கீங்க. மறந்துடாதீங்க வெள்ளை நிற பணியன் மட்டும்.

தோள்பட்டை தொங்கி கூன் விழாமல், நிமிர்ந்து நின்றாலே அழகு தான். தோள்பட்டை நிமிர்ந்து நின்றாலே கம்பீரமா தெரிவீர்கள்.

பணியன் அணிந்த அந்த தோள்பட்டை அழகு தான்.

8-12 வயதில் அந்த உச்சந்தலையில் இருக்கும் சுழி அழகு தான். அதிலும் ரெட்டை சுழியாக இருந்தால் அழகோ அழகு தான்,

பதினான்கு வயதில் வளரும் அரும்பு மீசையுடன் கலந்த வெட்கம் அழகு தான்,

16-19 வயதில் காலில் அணிந்திருக்கும் பூட்டும் கையில் இருக்கும் கால்பந்தும் அழகு தான்,

20-24 வயதில் எதுவுமே அழகு இல்லை. வேணும்னா அந்த சாரம் மட்டும் ஏதோ பார்க்குற மாதிரி இருக்கும்னு சொல்லலாம். இந்த வயதில் பெண் பிள்ளைகள் தான் அழகு சோ நாம நேரா 27 வயதுக்கு போய்டுவோம்.

27-32 வரை அணியும் ஸ்லிம் பிட்டும் அழகு தான்.

33க்கு பின் அணியும் அந்த பின் புறம் ஒரு டாட் பிடிச்ச சட்டை இருக்குமே அந்த சட்டை அழகு தான்.

33க்கு பின் அணியும் அத்தனை டீ சர்ட்டும் அழகு தான்.

40ல் எட்டு முழ வேட்டி அழகு தான்

50ல் நரைத்திருக்கும் வெள்ளைமுடி அழகு தான்

55ல் நான்கு முழ வேட்டியுடன் பேரனையோ பேத்தியையோ தோளில் தூக்கி செல்லும் கவிதை அழகு தான்

60ல் ஈஸி சேரில் உட்கார்ந்து எதையோ பறிகொடுத்தது போன்று சிந்தித்து கொண்டே இருப்பீர்களே? அதை தவிர்த்து எல்லாமே அழகோ அழகு தான்.

அறுபதிற்கு மேல், தாய் அல்ல தாரகம் தான் முதல் என்ற புரிதல் வரும் பாருங்க, ஒரு புதுவித காதல் மலரும். எனக்கு அறுபதுக்கு மேல் வரும் காதல் தான் பிடிக்கும். அந்த காதல் என்றுமே கொள்ளை அழகு தான்.

என் பார்வையில் ஆணினமே அழகு தான். மேக்கப் இல்லை, பெருசா அணிகலன்கள் இல்லை, சில்க் இல்லை, ஆடம்பரங்கள் இல்லை. சிம்பிளா, இயற்கையா இருப்பதை கொண்டு தன்னை அழகுபடுத்தி, நம்பிக்கையுடன் தன்னை முன் நிறுத்தும் ஆணினம் என்றுமே அழகோ அழகு தான்!!!
Previous Post Next Post

نموذج الاتصال