ஆண்களை போல், பெண்களும் ஆண்களை பார்ப்பார்கள், ரசிப்பார்கள், தங்கள் தோழிகளிடம் ஆண்களின் உடலமைப்பை பற்றி பேசவும் செய்வார்கள். எதிர் பாலின ஈர்ப்பு என்பது இயல்பு தானே ஏன் இந்த சமூகம் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்குகிறது?

ஆண்களை போல், பெண்களும் ஆண்களை பார்ப்பார்கள், ரசிப்பார்கள், தங்கள் தோழிகளிடம் ஆண்களின் உடலமைப்பை பற்றி பேசவும் செய்வார்கள். எதிர் பாலின ஈர்ப்பு என்பது இயல்பு தானே ஏன் இந்த சமூகம் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்குகிறது?


ஆண்களை போல், பெண்களும் ஆண்களை பார்ப்பார்கள், ரசிப்பார்கள், தங்கள் தோழிகளிடம் ஆண்களின் உடலமைப்பை பற்றி பேசவும் செய்வார்கள். எதிர் பாலின ஈர்ப்பு என்பது இயல்பு தானே ஏன் இந்த சமூகம் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்குகிறது?


உங்கள் கேள்வியே சற்று பிழையாக இருக்கின்றது. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஆணின் பாலியல் செயற்பாடுகள் ,கண்ணோட்டங்களும் பெண்ணின் பாலியல் செயற்பாடுகள், கண்ணோட்டங்களும் வேறு வேறானவை. அதாவது ஒரு பெண் ஒரு ஆணின் உடலமைப்பை பார்பதுவும், இரசிப்பதுவும் ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலமைப்பை பார்பதுவும் ,இரசிப்பதுவும் பெருமளவு வேறுபாட்டினை கொண்டுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெண் ஒரு ஆணை இரசிக்கும் போது வெறும் இரசித்தலோடயே அவளது எதிர்பாலின ஈர்பினை முடித்து விடுவாள். 

ஆனால் ஆண் அப்படியல்ல ஒரு அழகான பெண்ணை கண்டாலே அவளை உச்சம் தலை முதல் உள்ளம் கால்வரை அணு அணுவாக இரசிப்பது மட்டுமல்லாமல் அவளை அனுபவிக்க வேண்டும் என்றும் எண்ணுகின்றான். அங்கேதான் தொடங்குகின்றது அனைத்து பிரச்சினைகளுமே. எல்லா விதமான பெண் சார்ந்த பிரச்சினைகளுமே அங்கேதான் தொவங்குகின்றது. அதாவது தான் இரசிக்கும் பெண்ணினை அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கையும், தீரா மோகமும் பொதுவாகவே ஆண்களிடம் தான் இருக்கின்றது. 

அதனால் தான் பாலியல் வன்கொடுமையில் இருந்து அனைத்துவிதமான பாலியல் பிரச்சினைகளிலுமே ஒரு ஆண்தான் சிக்கிக்கொள்கின்றான். இதுவரை எந்த பெண்ணுமே ஒரு ஆணை கற்பழித்து கொலை செய்ததாக வரலாற்று சான்றுகள் ஏதுமே இல்லை. இங்கே பிரச்சினை என்றவென்றால் ஆணின் கட்டுபாடற்ற பாலியல் வேட்கைதான். ஆணின் விந்து பையில் விந்து நிறைந்ததுமே அவனுக்கு அந்த மோகமும் ஆசையும் இயல்பாக வந்து விடும். ஆனால் பெண்களுக்கு அந்த பிரச்சினைகள் இல்லை. 

அவள் ஓர் ஆணின் அழகினை இரசிப்பதோடு முடித்து கொண்டு விடுவாள் அது அவளுக்கு இலகுவான செயல் அதில் அவளுக்குக்கு எந்த விதமான கஸ்ரமுமே இல்லை. ஆனால் ஓர் ஆணுக்கு அப்படியல்ல ஒரு அழகான பெண்ணை கண்டால அவனின் ஹோர்மோன்கள் இயல்பாகவே தனது வேலைகளை தொவங்கி விடும். ஆண்களால் அதனை கட்டுபடுத்த முடியாது என்பதல்ல முடியும்.

ஆனால் ஆணின் பாலியல் இயற்கை அது, பெண்ணின் பாலியல் இயற்கை அது. ஆகையால் இந்த விடயத்தில் ஆண்கள் மீதும் தவறு இல்லை, பெண்கள் மீதும் தவறு இல்லை. ஆனால் தனது பாலியல் இயற்கையை விழிப்புணர்வோடு ஓர் கட்டுக்குள் வைத்திருக்காமல் இருக்கும் ஆண்களால் தான் பிரச்சினை. காரணம் அவர்களால் தான் அனைத்து விதமான பாலியல் வன்புணர்வு சார்ந்த பிரச்சினைகளும் நிகழ்கின்றன. 

இவ்வாறான ஆண்களை தான் சமூகம் குற்றவாளியாக பார்குமே ஒழிய தனது பாலியல் உணர்வுகளை புரிதலோடு கட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் ஆணை எந்த சமூகமுமே ஓர் குற்றவாளியாக பார்த்தது இல்லை அது உங்கள் தவறான புரிதலாகும். நான் ஆண், பெண் பாலியல் பற்றி முன்பும் ஓர் பதிவில் தெளிவாக கூறியுள்ளேன். 

அதாவது ஆணுக்குதான் இயல்பாகவே காமம் தழைத்தோங்கும் ஆனால் ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் அவளை தீண்டி, உரசி, கொஞ்சி என பல நிலைகளை கடந்துதான் அவள் காமம் வேலை செய்ய ஆரம்பிக்கும் என. அதுவேதான் இங்கேயும் பிரச்சினை. ஆணின் காமம் பெண்களை பார்கும் போதெல்லாம் இயல்பானதாக இருக்கின்றது. ஆனால் ஓர் பெண்ணிற்கு பல நிலைகளை கடந்தே அவள் உடலில் காமம் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. 

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலும் இதனுள் தான் பொதிந்துள்ளது. ஆகவே ஆண்கள் தங்களுக்கு இயல்பாகவே உள்ள பாலியல் வேட்கைகளை ஒரு கட்டுக்குள் வைத்திருகாதவரை சமூகம் சார்ந்த பெண் பிரச்சினைகளில் அவன் சிக்கி கொண்டேதான் இருபான். ஆணின் பாலியல் இயற்கை தவறல்ல. 

ஆனால் அது பற்றிய புரிதல்களோடு அதனை ஓர் கட்டுக்குள் வைத்திருகாத ஆண்கள் அனைவரையும் இவ் உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுமே தவறாகதான் பார்க்கும். ஆகவே ஆண்களாகிய நாம் எமது பாலியல் இயல்பு, ஈர்புகளை பற்றி புரிந்து கொண்டு அதனை எமது கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தால் எந்த சமூகத்தினாலுமே எம்மை குற்றவாளி ஆக்கமுடியாது.

நன்றி
Previous Post Next Post

نموذج الاتصال