ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


அன்பான தங்கைகளுக்கு…

  • நீங்கள் தவறான காதலில் விழ காரணம்…நீங்கள் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பும் பெற்றோரிடம் கிடைக்காதது தான்…அவர்கள் உங்களுடன் நேரம் செலவிடவில்லை என்றாலும் …அவர்களிடம் எதையும் மறைக்காதிர்கள்…
  • எல்லா பெண் தோழிகளும் உங்களின் நலனை எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஆண் நண்பர்களுடன் பழகுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
  • தோழியின் அண்ணா உங்களுக்கும் அண்ணா தான், தவறான கண்ணொட்டத்தில் பழகாதீர்கள்.
  • என் பாய் பெஸ்டி( boy bestie) என்று, சகலத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிறகு வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டி இருக்கும்.
  • ஊர் சுற்றுவதற்காகவும், செலவு செய்வதற்காகவும்,ஆண்களை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள், ஒருவேளை அவர்கள் உங்களை எதிர்கொண்டால், நீங்கள் கொடுக்க வேண்டிய பரிசு விலைமதிப்பற்றதாக இருக்கும் நினைவிருக்கட்டும்…
  • இங்கு எவரும் காரணமில்லாமல் உதவ மாட்டார்கள், பெற்றோர் மற்றும் நல்ல நண்பனைத் தவிர, நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய கவனம் தேவை.
  • பருவத்தில் திருமண ஆசை வரும், ஆசைய மட்டும் வைத்து வாழ்கையை ஒட்ட முடியாது…ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அவ்வளவுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
  • சொந்த காலில் நிர்க பழகி கொள்ளுங்கள்.சுயமாக சம்பாதியுங்கள் , பணத்திற்காக யாரையும் எதிர்பார்த்து இருக்காதீர்கள். சில சமயங்களில் பெற்றோரையும் கூட.
  • சிறு தொழில் ஒன்றை கைவசம் வைத்து கொள்ளுங்கள். துணி தைப்பது, தட்டச்சு செய்வது.
  • இங்கு எவரும் ராமனோ சீதையோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள், கொஞ்சம் விலகியே பழகுங்கள் மற்ற ஆண்களிடம்..
  • உங்களை பற்றிய அனைத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் நீங்கள் சொன்ன அந்த தவறையே திரும்ப சொல்லி குத்தி காட்டுவார்கள்…
  • குடும்பமே அவசியம், ஆண்கள் காட்டும் அன்பான வார்த்தைக்காக மயங்கி குடும்பத்தை இழந்து விடாதீர்கள்…
  • கலப்பு திருமணம் நன்று…வீடு மற்றும் சமூகம் ஒத்துழைக்காத போது , ஆணை கட்டாய படுத்தி திருமணம் செய்துகொள்ளாதீர்கள். அருவால் வெட்டு எபொழுதும் ஆண்களையே பலிவாங்குகிறது , கௌரவ கொலை என்ற பெயரில், உங்கள் வசதிக்காக நீங்கள் காதலித்தவர் சாக காரணமாகதீர்கள்.
  • ஒருவேளை நீங்கள் சரியான வயதில் திருமணம் செய்ய வில்லை என்றால் இந்த ஊர் தூற்றும், அதை ஒரு பொருட்டாக மதிக்காதிர்கள், நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் தூற்றிய வாய் அனைத்தும் வெட்கம் இல்லாமல் போற்றும்.
  • பெண்கள் எந்த விஷயத்திற்காக திருமணத்தை தள்ளிப் போடுகிறோம் என்பது மிகவும் அவசியம். அது லட்சியத்திற்காக இல்லாத சமயத்தில், திருமணத்தைத் தள்ளிப் போடுவது பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
  • பெண்கள் business பெண்களாக மாற வேண்டும்…சுய உதவி குழுக்களை பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
  • ஒரு ஆணை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்றால்..அவனின் லட்சியத்திற்கு உறுதுனையாக நில்லுங்கள் …அவன் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உறுதுணையாக நிற்பான்..கணவனின் அன்னையை நன்கு கவனித்து கொள்ளுங்கள்…கணவர் ராணிபோல் உங்களை கவனித்து கொள்வார்.


நன்றிகள்… 

Previous Post Next Post

نموذج الاتصال