நாட்டில் எல்லோரும் தினமும் சைக்கிள் ஓட்டினால் இந்திய பொருளாதாரமே பாதிக்கும்!

நாட்டில் எல்லோரும் தினமும் சைக்கிள் ஓட்டினால் இந்திய பொருளாதாரமே பாதிக்கும்!

நாட்டில் எல்லோரும் தினமும் சைக்கிள் ஓட்டினால் இந்திய பொருளாதாரமே பாதிக்கும்!


நாட்டில் எல்லோரும் தினமும் சைக்கிள் ஓட்டினால் இந்திய பொருளாதாரமே பாதிக்கும்! ஆச்சரியமாக இருக்கிறதா? அது எப்படி எனில்...

சைக்கிள் ஓட்டி பழக்கமானவர் கார் வாங்க விரும்ப மாட்டார், கார், பைக், வாங்க லோன் அதாவது கடன் வாங்கவும் மாட்டார்... அதற்கு வட்டி கட்ட அவசியம் இருக்காது, இவரால் பேங்க் & வட்டிக்கார பைனான்ஸ்காரர்களுக்கு எந்த லாபமும் கிடையாது...

லோன் பணம் எங்கே என வீட்டு வாசலில் பேங்க் கடன்காரன் வந்து நின்று கதற வேண்டிய அவசியமும் இருக்காது,
கார், பைக், இன்சூரன்ஸ் கிடையாது, சாலையின் போலீஸ்காரர்களுக்கு மொய் எழுத அவசியம் இல்லை...

இந்த பெட்ரோல் / டீசல் / LPG Gas..... ம்ஹூம்... தேவைக்கு வாய்ப்பே இல்ல...

இவர்களால் பன்னாட்டு தொழில்த்துறை அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் அரபு நாடுகளுக்கும் எந்த பயனும் இல்லை...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் என எதற்கும் இவர் அதிக செலவு செய்வதும் இல்லை, சைக்களுக்கு அதிகப்பட்சமாக சர்வீஸ் செலவு என்றால் 50ரூ கீழே பஞ்சர் போடுவதுதான்...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டார்...வாகன பார்க்கிங் இடங்களில் தனக்கு தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வரவும் மாட்டார்...

இதெல்லாம் ஒருபுறம் இருக்க...
சைக்கிள் ஓட்டுகிறவருக்கு நீரிழிவு நோய் சுகர் வராது...கை, கால், தோள்பட்டை தசை பிடிப்பு ஏற்படாது...பிளட் கேன்சர், பிபி, ஆஸ்துமா வரவே வராது...

இதய நோய்க்கு வாய்ப்பே இல்லை...
அதிக உடல் பருமன், குண்டாகவும் மாட்டார்...
தொப்பை வரவே வராது...
உடல் எடையை குறைக்க அவசியம் இல்லை...

ஜிம், ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை, இதெல்லாம் அவர்களுக்கு தேவையேப்படாது...

அதிக பணம் மிச்சமாகும், அதிக நேரம் மிச்சமாகும், அதிக மன உலைச்சல் இருக்காது, நாட்டில் அவ்வளவுவாக ஊழல் திருட்டு எங்கும் இருக்காது, விபத்து என்பது குறைவு, சாலையில் உயிர் பலி என்பது மிகமிக ஏற்படாது...

ஏன் தற்போது சைக்கிளில் வேகத்தை அதிகப்படுத்தும் கியர் சைக்கிள்கள் கூட வந்துவிட்டதே...

உங்களுக்கு தெரியுமா...???
ஒரு பீட்ஸா/பர்கர் கடை, ஒரு பாஸ்புட் கடை, ஒரு பிரியாணி கடை, ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

நீங்கள் வீதியில் பார்த்திருக்கிறீர்களா,,,???
காது, மூக்கு, தொண்டை, ஆசன வாயு பிரச்சினைக்கு கூட இப்போது கிளினிக்கள் வந்தாச்சு...

ஒரு மாவட்டத்தில்...
எத்தனை கருத்தரிப்பு மையங்கள்,
எத்தனை சுகர் கிளினிக்கள்,
எத்தனை யோகாபதி கிளினிக்கள்,
எத்தனை இதய டாக்டர்கள்,
எத்தனை வயிறு, குடல், கிட்னி, டாக்டர்கள்,
எத்தனை டயட்டீசியன் (அதாவது) உடல் எடையை குறைக்க அறிவுரை சொல்லும் நிபுணர்கள்...

எத்தனை கை, கால், தோள்பட்டை, தசைபிடிப்பு, மசாஜ் செய்யும் மையங்கள்...
போதாதற்கு தெருவுக்கு தெரு ஒரு மருந்து கடை, டோர் டெலிவரி வசதியுடன்...

நாகரீகமும், வளர்ச்சியும், என்ற பெயரில் மனிதனின் ஆயுட்காலமே இங்கே குறைந்து வருகிறது... அதில் எந்த சந்தேகமில்லை...நம் பாட்டன், பூட்டனுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் இப்போது 30வயதிலேயே சுகர் வருகிறது, 20வயதிலேயே இதய நோய் வருகிறது, நாம் யாருக்காக உழைக்கிறோம், எதற்காக ஓடுகிறோம், இதுவரை எவற்றையெல்லாம் தொலைத்திருக்கிறோம்...

சைக்கிள் ஓட்டுவதினால், நம் தகுதியும், தரமும் ஒன்றும் தாழ்ந்து போவதில்லை, 
அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களை விட படித்த முட்டாள்கள் எவருமில்லை...

வெள்ளைக்காரனும் / பணக்காரன்னும் வார விடுமுறையில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு நிகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்வான்,
காரணம் சைக்கிள் ஓட்டுவதன் மகத்துவம், அதன் மருத்துவம் அவனுக்கு தெரிந்திருக்கிறது...

ஆரோக்கியமுடன் வாழ நாமும் தினமும் வேண்டாம், வாரம் ஒரு விடுமுறையேனும் சைக்கிள் ஓட்ட பழகிக்கொள்வோம்.

Previous Post Next Post

نموذج الاتصال