ஆண்மை இல்லாத ஆண்களை பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஆண்மை இல்லாத ஆண்களை பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஆண்மை இல்லாத ஆண்களை பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா?


நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...

ஏன்..?

இதில் ஒரு சில நிகழ்வுகளை நீங்கள் எடுத்துக் காட்டாக கூறி, அவர்கள் ஏற்றுக் கொண்டார்களே, அதுதான் உண்மையான காதல். இப்படியும் பெண்களால் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று மேற்கோள் காட்டினால், என்னாலும் பல பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மேற்கோள் காட்ட முடியும்.

ஒரு ஆணாக உங்களுக்கு திருமண வரன் பார்க்கும் நேரத்தில், நீங்கள் ஆண்மையற்றவர் என்று அப்பெண்ணிடம் கூறிப் பாருங்கள். அங்கு காதல் அன்பு பாசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். நிச்சயமாக மூஞ்சில் அடித்தது போன்று வேண்டாம் என்றே கூறுவார். இதுதான் மனிதனின் மனநிலை.

இங்கு எத்தனையோ திருமணங்கள், கணவனுக்கு ஆண்மை இல்லை என்று தெரிந்தவுடன் விவாகரத்தில் முடிந்துள்ளது. அவர்களுக்குள் உண்மையான அன்பு பாசம் எங்கு போனது?

ஒரு ஆணாக நீங்கள் யாரையேனும் தற்போது காதலித்துக் கொண்டிருந்தால், உங்களுடைய காதலியிடம் விளையாட்டாக, உங்களுக்கு ஆண்மை இல்லை என்று கூறிப் பாருங்கள். அவர்களுடைய முக பாவனையில் மாற்றம் ஏற்படுவதை கண்கூடாக காணமுடியும்.

பெண்களை மிகைப்படுத்தி, அவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். ஆண்களின் உடல் ஆண்மையை விட, மன ஆண்மை ஒரு பெண்ணை வசீகரிக்கச் செய்யும் என்று கூறினால், கோடியில் ஒரு பெண் ஒப்புக்கொள்வது ஏற்புடையதா? இல்லை நூற்றில் 90 பெண்கள் நிராகரிப்பது ஏற்புடையதா? என்று சிந்தியுங்கள்.

இதில் பெண்களை இழிவுபடுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் இது பொருந்தும். இதுதான் நிதர்சனம். இதுதான் நியதி. மனிதர்கள் இப்படித்தான். சித்தரிப்புகளை கலைந்து நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வோமாக.

இவை அனைத்துக்கும் மேல், இந்தப் பதிவை படித்துக் கொண்டிருப்பது ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள் அதற்கான உண்மையான பதிலை அது சொல்லும்.
Previous Post Next Post

نموذج الاتصال