பெண்களின் மனதில் இடம் பிடிக்க ஆண்கள் பெண்களிடம் சொல்லும் பொய்கள் எவை?

பெண்களின் மனதில் இடம் பிடிக்க ஆண்கள் பெண்களிடம் சொல்லும் பொய்கள் எவை?

பெண்களின் மனதில் இடம் பிடிக்க ஆண்கள் பெண்களிடம் சொல்லும் பொய்கள் எவை?


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னா கூட பொய் தானே....🤣🤣🤣

பதில் 1 

இதில் மொத்தம் பல்வேறு விதமான விடைகள் எனக்கு வந்தது அவைகளில் செலெக்ட்டிவ் ஆக ஒரு சில பதில்களை உங்களுக்கு இங்கு நான் பதிவிட்டு இருக்கிறேன் அவைகளை முழுமையாக படித்து என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இதில் ஏதேனும் பொய்யை கூறி இருக்கிறீர்களா என்று மறக்காமல் கமெண்டில் சொல்லவும் வாங்க பதிலை பார்ப்போம்....

இங்க பாரு மிஸ். காவியா உன்னை சமூகத்தில் மூவாயிரம் பேர் follow பண்ணலாம். ஆனால் என்னை follow பண்ணுற ஒரே புள்ள நீ தான். அதனால எனக்கு உன் மேல அது வந்துடுட்டு. அது தான் புள்ள, உன் மேல காதல் வந்துடுச்சுனு சொன்ன கதையை நானும் நம்பி அந்த அப்ராணி பேஜ போய் பார்த்தா 325 பேர் follow பண்ணுறாங்க. கொஞ்சம்னா ஏமாந்துருப்பேன். நல்ல வேளை எனக்கு அந்த நேரம் பார்த்து கொஞ்சம் மூளை வேலை செஞ்சிச்சி, தப்பிச்சிட்டேன்.

இப்படி தாங்க.

இவங்க சொல்ற அம்புட்டும் பொய் தான்.

பொய்யோ பொய்.

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்பதிலிருந்து, உன்னை மாதிரி ஒரு பொண்ண பார்த்ததே இல்லை என்பது வரைக்கும் அத்தனையும் பொய்யோ பொய்.

நம்ம எவ்வளவு அழகா இருக்கோம்னு நமக்கு தெரியாது பாருங்க.

நாற்பது போட்டோ எடுத்தா நாலு கூட தேறாது. அதுக்கு நாலு filter போட்டு, தெரிஞ்ச எடிட்டிங் எல்லாம் மொத்தமா இறக்கி, நாமளே ஏதோ தேத்தி வச்சிருப்போம். நம்ம கிட்ட வந்து, அழகா இருக்கீங்க, அறிவா பேசுறீங்கனு.

போங்க தம்பி, லெப்ட்டுக்கா போனீங்கனா மாரியாத்தா கோவில்ல கூழ் ஊத்துறாங்க. அக்கா பேரை சொல்லி ரெண்டு சொம்பு சேர்த்து வாங்கி குடிச்சிட்டு போப்பா...

போங்க, போங்க இடத்தை காலி பண்ணுனு இவங்கள அனுப்பி வைக்குறதுக்குள்ள ஒரு வழியாகிடுவோம்.

ஒரு அளவு வேண்டாம் பொய் சொல்றதுக்கும்?

ஆக, பசங்களே சுமாரா இருக்கீங்கனு கூட சொல்லுங்க ஏதோ மனசுக்கு ஆறுதலா இருக்கு. சூப்பரா இருக்கீங்கனு நீங்க சொல்ற பொய்யை பார்த்தா தான் அப்படியே குணிய வச்சி குமுறனும்னு தோணுது…


இப்போ பதில் ஒன்னை வெற்றிகரமாக படித்திருப்பீர்கள் பதில் இரண்டையும் பார்த்து விடுவோமா...


பதில் 2

உன்னப் பாத்த முத நாளே நான் முடிவு பண்ணிட்டேன்.. நீ தான் என்னோட பொண்டாட்டின்னு…

பின்னாடி தான் தெரிஞ்சது அந்த ஆம்பளப்பன்னாடை இதே மாதிரி 128 பேரு கிட்ட சொல்லிட்டு திரிஞ்சிருக்கு.

இந்த பொய்ய நம்பி அம்புட்டு பேரும் அந்த ஆம்பளப்பன்னாடைய கல்யாணம் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும் யோசிச்சீங்களா….?

பேப்பர்ல 128 பேரை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் (?) கைதுன்னு நியூஸ் வந்துராதா என்ன?

ஆனா இதுலயும் ஒரு கிக இருக்கத் தானே செய்யுது.. பொய்கள உண்மை மாறி சொல்லலைன்னா இந்த 128 பேர் ஏமாந்திருக்க மாட்டாங்களே….

கேஸ் போட்டுருந்தாக் கூட நான் அவனில்லைன்னு 128 பேரு கிட்டயும் சொல்லியிருக்குமோ என்னவோ….

ஜட்ஜ், வக்கீல்னு ஒரு 150 பேரு கிட்டயாவது கண்டிப்பா இதையே சொல்லியிருக்குமே…

மேல சொன்னது எல்லாம் அப்பப்ப நம்ம காதுக்கு விழற நியூஸ் தானே பாஸ்.

இந்த 420 வகையறாவுல தினமும் 4–5 கேசாவது பேப்பர்ல வராம இருக்கறதுல்லயே..

என்ன காரணம்…….. பதில் தொடக்கத்துல சொன்ன அந்த ஒரே பொய் தான் பாஸ் இதுக்கெல்லாம் காரணம்.

ஆனா இப்படி பொய் சொன்னா பெண்கள் மனசுல இடம் கிடைக்குமோ இல்லியோ ஏரியா தவறாம தர்ம அடி கிடைக்கிறது மட்டும் நிச்சயம்.

அதனால பாத்து பத்திரமா பொய் சொல்லி பொழச்சுக்குங்க… இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் ….பல பெண்களோட வாழ்க்கை இதுல அடங்கியிருக்கு…. அத மட்டும் மறந்துடாதீங்க பாஸ்.

நல்ல பொய்களா சொல்லி எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்...
Previous Post Next Post

نموذج الاتصال