உடனடியாக இன்பம் அளிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?

உடனடியாக இன்பம் அளிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?

உடனடியாக இன்பம் அளிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?நீண்ட நாட்கள் நாம் யாரிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தோமோ.. அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் அந்த நேரம் இன்பம் தான்.

வேலை முடிந்து வீட்டிற்கு சோர்வாக வரும் அந்த நேரம் அம்மா நமக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருக்கும் போது… அந்த நிமிடம் இன்பம் தான்.

வீட்டு பாடம் எழுதாமல் இன்று எப்படியும் ஆசிரியரிடம் அடி விழும் என்று நினைத்திருக்க.. இன்னைக்கு அந்த ஆசிரியர் விடுமுறையாம்… என்று எங்கோ.. குரல் ஒலிக்க அந்த நொடி இன்பம் தான்.

இருமல் காய்ச்சலோடு மருத்துவரிடம் செல்லும் போது.. கொரோனா என்று சொல்லிவிடுவார்களோ… என்ற பயத்தில் இருக்க.. உங்களுக்கு ஒன்றும் இல்லை சாதாரன காய்ச்சல் தான் என்று மருத்துவர் சொன்னதும்… மரண பயத்தில் இருந்து மீண்ட சந்தோசம் இருக்கே அதுவும் இன்பம் தான்.

இது போன்ற விஷயங்களில் எனக்கு பல்வேறு விதமான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது நீங்களும் இதுபோல அனுபவித்ததுண்டா...?

மறக்காமல் உங்கள் கருத்தை கமெண்டில் தெரியப்படுத்துங்கள் உங்களுக்காக நான் பல கட்டுரைகளை எழுதுகிறேன் ஆனால் ஒருவரும் கமெண்ட் செய்வதில்லை, கமெண்ட் செய்தால் இன்னும் உற்சாகத்துடன் நான் வேலையை செய்வேன் அல்லவா அதாவது உங்களுக்கு பல கட்டுரைகளை கொடுப்பேன் அதை சொன்னேன்....
Previous Post Next Post

نموذج الاتصال