கலவியில் அதிக இன்பம் காண்பது ஆண்களா அல்லது பெண்களா? இது ஒரு நல்ல சுவராசியமான கேள்வி?

கலவியில் அதிக இன்பம் காண்பது ஆண்களா அல்லது பெண்களா?
இது ஒரு நல்ல சுவராசியமான கேள்வி?

கலவியில் அதிக இன்பம் காண்பது ஆண்களா அல்லது பெண்களா? இது ஒரு நல்ல சுவராசியமான கேள்வி?


இதை நான் பல காலங்களின் கதையோடு சொல்ல முயற்சி பண்ணிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்....

சாலமன் பாப்பையா, லியோனி யை வைத்து பட்டிமன்றம் நடத்தினால் கூட்டம் அள்ளும் ஆனால் அனுமதி கிடைக்குமா? அப்படியே அனுமதி கிடைத்தாலும் நடுவர் தீர்ப்பு சொல்வதற்கு தடுமாறுவார் ஏனேன்றால் இந்த கேள்வி அப்படிப்பட்டது.

சரி நமது சப்ஸ்கிரைபர் நம்மை நம்பி ஒரு கேள்வி கேட்டுவிட்டார் பதில் சொல்வது நமது கடமை அல்லவா? ஏதோ எனது அனுபவம் மற்றும் நான் படித்து தெரிந்து கொண்டதை வைத்து இந்த கேள்விக்கு பதில் சொல்லுகிறேன்.

உடல் உறவில் உடல் ரீதியான நெருக்கம் மிகவும் முக்கியமானது இருப்பினும், ஆண்கள் தங்கள் இணையுடன் நெருங்கி பழகுவதை பற்றி ஒரு நாளைக்கு பல முறை சிந்திக்கிறார்கள் என்று கூறப்படுகிறது (இது எப்போதும் உண்மை இல்லை), பெண்களும் அதை அனுபவிக்கிறார்கள் என்பதும் உண்மை என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை மாகாபாரத கதையில் இருந்து தொடங்குவோம் ஒரு முறை பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே உடலுறவில் யார் அதிகம் இன்பம் அனுபவிக்கிறார்கள் ஆனா? பெண்ணா என்ற சர்ச்சை எழுந்தது. (அப்ப சர்ச்சை புராண காலத்திலேயே தொடங்கிடுச்சு)

பீஷ்மர் ஒரு கதையின் மூலம் அதற்கு பதில் சொல்லுகிறார் பழங்காலத்தில் பங்காஸ்வனன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். அவன் பெரும் அறவோனாகவும், அரசமுனியாகவும் அறியப்பட்டிருந்தான். அவனுக்கு பல மனைவிகள் இருந்தும், அவன் பிள்ளையற்றவனாக இருந்தான். 

பிள்ளை பேற்றிற்காக தேவர்களின் தலைவனான இந்திரனை நோக்கி ஒரு யாகம் செய்தான் அதன் மூலம் அவன் 1௦௦ குழந்தைகளை பெற்றெடுத்தான். அந்த யாகத்தில் சில குறைகள் இருந்தால் இந்திரன் அவன் மீது கோபம் கொண்டு அவனை பெண்ணாக மாற்றினான்.

பெண்ணாக மாறிய அவன் காட்டுக்கு சென்று ஒரு தவசியிடம் உடலுறவு கொண்டு அவர் மூலம் மேலும் 1௦௦ பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வந்தாள் ஒரு கட்டத்தில் பெண்ணாக மாறிய அவளை ஆணாக மாற்றுவதற்கு இந்திரன் சம்மதிக்கிறான். அப்பொழுது அவள் சொன்னாள் "கலவிச் செயல்பாடுகளில் ஆண்களால் அனுபவிக்கப்படுவதை விடப் பெண்களால் அனுபவிக்கப்படும் இன்பமே பெரியது. 

எனவே பெண்ணாக தொடரவே நான் விரும்புகிறேன் அதை ஏற்று கொண்ட இந்திரன் பெண்ணாகவே தொடர அனுமதிதானாம் ஆண்டு அனுபவித்த ஓரு அரசனே அப்படி கேட்டதன் அடிப்படையில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்களே அதிக இன்பத்தைப் பெறுபவர்களாக அறியப்படுகிறார்கள் என்றாராம் பீஷ்மர் முழு கதையை கீழே உள்ள சுட்டியில் சென்று படித்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இன்னொரு கிரேக்க புராண கதையை பார்ப்போம் ஒருமுறை ஒலிம்பியர்களின் ராஜாவும் ராணியுமான ஜீயஸ் மற்றும் ஹேரவுக்கும் இதே சர்ச்சை எழுந்தது (யப்பா அங்கேயும் அதே சர்ச்சையா? அப்பவே ஆரம்பித்துவிட்டது போல) 

இந்த கதையில் ராஜா ஜீயஸ் டைரேசியாஸ் என்ற பெயர் கொண்ட தேவதூதனிடம் சென்று விளக்கம் கேட்கிறான் அதற்கு அவன் அவனின் சொந்த கதையை சொல்கிறான் அதாவது இரு பாம்புகள் இணை சேர்ந்து இருக்கும் பொழுது அதில் பெண் பாம்பை கொன்று விட்டேன் அந்த ஆண் பாம்பின் சாபத்தால் நான் பெண்ணாக மாறி விட்டேன். ஆண்கள் சும்மா விடுவார்களா? பின்ன என்ன வழக்கம் போல் உல்லாசம் தான் பிறகு இன்னொரு சமயத்தில் இரு பாம்புகள் இணை சேர்ந்து இருக்கும் காட்சியை கண்டு நான் மீண்டும் ஆணாக மாறிவிட்டேன்.

ஆனால் பாருங்க ராசா ஆணாக இருந்து நான் உடலுறவில் அனுபவித்த இன்பத்தை விட பெண்ணாக இருந்து அனுபவித்த இன்பம் தான் அதிகம் என்றானாம்.

என்னையா கதையாய் சொல்லிக்கிட்டு இருக்கே அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?இதில் அவர்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள். அதவாது இன்பம் என்பது மனிதர்களை பொருத்து மாறுபடும் என்கிறார்கள். மேலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் இணைகளை பொருத்தும் மாறுபடும் என்கிறார்கள்.

இன்னொரு ஆய்வு என்ன சொல்லுதுனா ஆண்களின் இன்பம் குறுகியதாகவும் இனிமையாகவும் இருக்குமாம். பெண்களுக்கு இது மிகவும் நீடித்து மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்குமாம்.

ஒரு பெண்ணுக்கு கலவியில் சரியான துணை கிடைத்தால் பல முறை (orgasm) உச்சகட்டம் அடையலாம் ஆண்களுக்கு உடல் ரீதியாக அந்த வாய்ப்பு குறைவு.

என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை யார் அதிகம் இன்பம் பெறுகிறார்கள் என்று ஆராயாமல் நிதானமாக, மகிழ்ச்சியாக உங்கள் துணையுடன் இணைந்து உடலுறவை அனுபவியுங்கள்.

இந்த கதையெல்லாம் ஆங்கிலஇனைய தளங்களில் இருந்து கூகுளார் உதவியுடன் மொழிபெயர்த்தது தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி..
Previous Post Next Post

نموذج الاتصال