பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part 1

பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part 1


இந்தியாவில் காமத்தை பற்றி வெளிப்படையாக பேச ஆண்களே கூச்சப்படுவார்கள். அப்படியிருக்க பெண்களால் எப்படி பேச முடியும்.

இந்த கேள்வியை நானே பலமுறை பார்த்தும் பதிலளிக்காமல் தவிர்த்திருக்கிறேன். அதுவே இந்த கேள்விக்கான பதிலும்ன்னு கூட சொல்லலாம்.

இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உண்மையை பேச வேண்டும். இல்லை எனக்கு அப்படி ஒரு உணர்வே வராது என்று சொன்னேன் என்றால் அது அப்பட்டமான பொய். ஆனால் இந்த சமூகம் பெண்கள் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. எதுவும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறாய். இந்த விஷயத்தில் எல்லாம் ஆர்வம் காட்டுற இது நல்லதில்லை என்றும் சொல்லும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹார்மோனில், உணர்வுகளில் என்ன பெரிய வேறுப்பாடுகள் இருக்க முடியும். எல்லோருக்கும் உணர்ச்சிகள் உண்டு. அவர்கள் எப்படி அடக்குகிறார்கள். அவர்களால் அதை வெளிப்படையாக பேச முடியும். பெண்களால் அது முடியாது. அவ்வளவே.

பெண்கள் சுலபமாக காம உணர்வுகளை அடக்கவில்லை, அவர்கள் நடிக்கிறார்கள். தனக்கு அதை போன்ற எந்த உணர்வுமே இல்லை என்று நிரூபித்தாக வேண்டும். அப்போது தான் அவள் ஒழுக்கமான பெண். இல்லையென்றால் அவள் ஒழுக்கத்தின் மீதே சந்தேகம் வந்துவிடும் என்ற பயம்.

தொலைக்காட்சியில் ஒரு முத்தக்காட்சி வந்தால் கூட உடனேயே சேனலை மாற்றி விடுவார்கள். ஏனெனில் பிள்ளைகள் அதை பார்த்து கெட்டு விடுவார்களாம். எதையுமே மூடி வைக்கும் போது தான் அதில் அப்படி என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்ப்படும். அறியாமை சில இடங்களில் நன்மை பயக்குவதில்லை.

பிள்ளைகளை எதுவுமே தெரியாமல் வெகுளியாக வளர்த்துவிட்டு. திருமணம் ஆன அடுத்த வருடமே குழந்தை வேண்டும் என்று கேட்பார்கள். இதையெல்லாம் இந்திய பெற்றோர்களால் மட்டுமே செய்ய முடியும். அவர்களுக்கு இத்தனை வருடமாக தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்தை தெரிந்து புரிந்து கொள்ளவே நாட்கள் தேவைப்படும்.

காமம் என்றால் என்னவென்று ஒரு குழந்தை சந்தேகம் கேட்டால் என்ன பெரிதாக சொல்லி விட போகிறார்கள். அதுவும் ஒரு பெண் குழந்தை இதை கேட்டு விட்டால் போதும். இதையெல்லாம் பேசக்கூடாது. தப்பு என்று முடித்து விடுவார்கள். அதற்கு பிறகு அந்த குழந்தை அதைப்பற்றி பேசுமா? அந்த உணர்வு வந்தாலும் தான் ஏதோ தப்பு செய்வதாக தானே நினைத்து கொள்ளும்.

இந்த மாதிரி விஷயங்களில் பெண்கள் தீயின் மீது நிற்ப்பது போன்றது. உணர்வுகளைஅடக்கி கொள்வது சுலபம். அதை வெளிக்காட்டி அதனால் வரும் விளைவுகளை தாங்குவது கடினம்.

பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part 1இதற்கு மேல் வரும் சந்ததியினராவது தம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். காமம், மாதவிடாய் போன்றது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுவதே. இதில் அசிங்கப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை. இந்த உணர்வு ஆண், பெண் இருவருக்குமே ஏற்ப்பட கூடியது என்று. ஒருவேளை பெற்றோருக்கும் குழந்தைளுக்குமான புரிதல் இருப்பது சமுதாய மாற்றத்திற்கு பெரிதாக வித்திடுவதாக கூட அமையலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال