பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part-2

பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part-2

பெண்கள் எப்படி சுலபமாக காம இச்சையை அடக்கி விடுகிறார்கள்? Part-2


பெண் என்றால் காம இச்சையை அடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் நாளடைவில், பெண்களால் காம இச்சையை அடக்குவது எளிது என்ற சிந்தனையாக மாறிவிட்டதாக நான் உணர்கிறேன்.

சரி என் வினாவிற்கு விடை தாருங்கள்.

விபச்சாரி என்ற வார்த்தை எந்த பாலினத்தை குறிக்கிறது?

தேவடியாள் என்றால் என்ன? 

அந்த இழிவான சொல் எந்த பாலினத்தை குறிக்கிறது?

இவ்விரு வினாக்களுக்கும் உங்களுக்கு விடை தெரியுமானால், பெண்கள் காம இச்சையை அடக்கியே ஆக வேண்டும் என்ற அடக்குமுறை பெண்கள் மீது திணிக்க தான் பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்கள்.

விபச்சாரம் என்பது தனி ஒருவரால் செய்ய கூடிய விடயம் அன்று. அப்படியானால் அந்த செயலில் ஈடுபடும் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட இழிவான பெயர் ஏன் அதில் சமபங்கு பெறும் ஆணுக்கு கொடுக்கப்படவில்லை? பாலின தவறு என்று வருகையில் பெறும்பாலும் ஆண்களின் மீது வெளிச்சம் வீசுவதே இல்லை.

இந்த கேள்விக்கான விளக்கத்திற்கு நான் எடுத்துக் கொண்ட இரண்டாவது சொல், தேவடியாள்.

இந்த சொல்லும் ஒரு பெண்ணை குறிக்கும் இழிவான சொல் தான். நீங்கள் நன்றாக ஆராய்ந்தால் இச்சமூகத்தில் பேசப்படும் பெரும்பாலான கெட்ட வார்த்தைகள் பெண்களை குறிப்பதாக தான் இருக்கும். இங்கும் பாருங்கள் ஆண்களின் மீது ஒளி வீசவில்லை மீண்டும் அவர்கள் மறைந்து கொள்கிறார்கள்.

தொன்றுதொட்டு பாலின குற்ற செயலில் ஈடுபடும் இருவரில் எப்பொழுதும் ஒரு பெண் தான் குற்றவாளி என்று ஒட்டுமொத்த சமூகத்தால் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு இருக்கிறாள். அதன் விளைவு தான் நாளடைவில் பெண்கள் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவது கூட குற்றம் என்ற பயத்தை அவர்களுக்குள் ஆழமாக விதைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த பயமே அவளை தன் காம தேவையை வெளிப்படுத்தவும் செய்யாமல் முடமாக்கி வைத்திருக்கிறது என்பது என் பார்வை.

நான் படித்தறிந்த வேதாகமத்தில் ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அந்த ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகையில் இறைவன் ஏவாளைப்பார்த்து சொன்ன கூற்று இது தான்.

"உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்"

இதை அனேகர் சாபம் என தவறாக கருதுகிறார்கள் ஆனால் உண்மையில் இது ஒரு ஆசீர்வாதம். இந்த வேத வசனத்தின்படி நான் அறிந்து கொண்டது இது தான். காம ஆசை என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த பரிசு. ஆனால் அது இன்றைய நாளில் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் செயல்படுவதனால் தான் சமூகத்தில் பாலின குற்றங்கள் அதிகரித்து விட்டன.

உண்மையில் காம ஆசை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருந்திருந்திருந்தால் பாலின குற்றங்கள் இந்த அளவு சமூகத்தில் பெருகியிருக்காது என்ற என் கூற்றை தெளிந்த புத்தியுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மை என உணரட்டும். ஆனால் பெண்ணுக்கு காம ஆசை ஆணை விட அதிகம் இருந்தால் அதை தான் தவறு, அவள் ஒரு தேவடியாள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் கணக்கிட்டு விட்டோமே இனி என்ன செய்வது இந்த சீர்குழைந்த சமூகத்தை?

காமம் என்றாலே இழிவான சொல் அல்லது கொச்சையான சொல் என்ற சிந்தனை சமூக அவலங்களுக்கான காரணங்களுள் ஒன்று தான். காமம் என்ற வார்த்தையின் சரியான பொருள் பேசப்படவில்லை, சரியாக பயன்படுத்தபடவில்லை, அதன் மேன்மையான நோக்கம் தலைமுறைகளுக்கு சரியாக கடத்தப்படவில்லை என்பதனால் தான் இன்று பெண்கள் தங்கள் உடலுக்கு தேவையான அடிப்படை தேவையை தன் துணையிடமும் கேட்க தயங்குகிறார்கள்.

காம தேவையை கேட்பவள் பேராசைக்காரியாகவும் இழிவான சொற்களுக்கு ஏற்புடையவளாகவும் எள்ளி நகையாடப்படுகையில் இனி எந்த பெண் தன் வாயை திறந்து, ஆம் எனக்கு காம ஆசை இருக்கிறது அதை அடக்க முடியவில்லை என்று தன் சத்தத்தை எழுப்புவாள்?

எனக்கு 50 வயதாகிவிட்டது கணவன் சில மாதங்களுக்கு முன்பு காலமானார், ஆனால் திடீரென்று இப்பொழுது காம ஆசை வருகிறது நான் என்ன செய்ய என்று கேள்வி கேட்ட பெண் ஒருத்திக்கு, ஒரு செ-க்-ஸ் டாய் வாங்கி வைத்து உங்கள் உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்றா நாம் அனைவரும் பதில் கொடுத்தோம்? இல்லையே? ஆளாளுக்கு வந்து பேரக்குழந்தைகள் வாழ்க்கை மீது கவனம் செலுத்துங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், யோகா செல்லுங்கள் என்று தானே ஆலோசனையை அள்ளி வீசினோம்?

அதே கேள்வியை ஒரு ஆண் இதே தமிழில் எழுப்பி இருந்தால் உங்களின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்பது எனக்கு தெரியும்.

அன்புள்ள சகோதரா உன் வேதனை எனக்கு புரிகிறது, நீ கவலைப்படாதே, தன் கையே தனக்குதவி என்று தானே பெரும்பாலும் பதில் கூறி இருப்பீர்கள். அந்த ஆணிடம் சென்று யோகா செய்யுங்கள், பிடித்ததை சமைத்து சாப்பிடுங்கள் என்று ஒரு பெண்ணுக்கு கூறிய அறிவுரையை கூறி இருக்க மாட்டீர்கள்.

அப்படியானால் ஒரு ஆணுக்கு காம ஆசை என்று வருகையில் அவன் தன் கை கொண்டு தனக்கு உதவி செய்வதை தேவையாகவும், ஒரு பெண் என்றால் அவள் அந்த எண்ணத்தைவிட்டு தன் சிந்தனையை திசைதிருப்ப வேண்டுவது கட்டாயமாகவும் தானே நாமே பார்க்கின்றோம். 

படித்தவர்கள், நல்ல நேர்மறை சிந்தனையுடையவர்கள் அதிகம் பேர் உலாவரும் கோரா போன்ற தளத்திலே பெண்ணின் காம ஆசைக்கு கட்டுப்பாடு என்பதே சரியான தீர்வாகவும், ஆணின் காம ஆசைக்கு தன் கையே தனக்குதவி என்பது தீர்வாகவும் இருக்குமானால் இத்தனை தூரம் கல்வி அறிவும், சுய சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும் இல்லாத சமூகம், அலுவலகம், குடும்பத்தில் ஒரு பெண்ணின் காம ஆசைக்கு எது தீர்வாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

கட்டுப்பாடு. காம ஆசை பெண்ணுக்கு வருவதை குற்றச்செயலாகவும், அதை வாய்விட்டு கேட்டவளை நீங்கள் தேவடியாகவும் அழைத்ததல் தான் நாளடைவில் பெண்கள் தங்கள் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட தயக்கம் காட்டினார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கு காம ஆசை அதிகம் இயற்கையில் இருந்திருக்கிறது. அதை குற்றம் என்றும் அந்த ஆசையை அசிங்கம் என்றும் வகையறுத்ததன் விளைவு தான் இன்று பாலியல் பலாத்தாகர கொடுமைகளின் தாக்கம் அதிகரித்ததன் பின்னனி.

ஆண்களைவிட பெண்களுக்கு காம ஆசை அதிகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உண்மையில் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அது தான் சரியான தீர்வு. ஆனால் அந்த ஆசை சிறகுகள் எங்களுக்கு பிடுங்கப்பட்டுவிட்டன. இனி முளைத்தாலும் அவைகள் பறக்க விரும்புவது இல்லை.

எங்கள் ஆசைகளை முடமாக்கிய இச்சமூகம் இனியும் பாலின குற்றங்கள் மிகுந்த பாழடைந்த சமுகமாகவே தான் இருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

கேள்விக்கு பதில் இது தான்.

பெண்கள் காம இச்சையை அடக்கியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள், கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான ரொம்ப அசிங்கமான, படுங்கேவலமான உண்மை.

இந்த பதிலை நமது வாசகர் ஒருவர் அனுப்பினார். அவரது கருத்துக்கு உங்களது பதில் என்ன நண்பர்களே...?
Previous Post Next Post

نموذج الاتصال