பெண்கள் விரும்பும்படி எப்படி அவர்களுடன் பழகுவது...?

பெண்கள் விரும்பும்படி எப்படி அவர்களுடன் பழகுவது...?

பெண்கள் விரும்பும்படி எப்படி அவர்களுடன் பழகுவது...?


இதற்கு இது தான் பதில் என்று ஒன்றும் கிடையாது.

என் நண்பன் என்னிடம் கூறியது, 'எனக்கு அமைதியா உம்முனு இருக்கிற பொண்ணுங்கள பிடிக்காது. கலகலன்னு சிரிச்சி கூத்தடிக்கிற பொண்ணுங்கள தான் பிடிக்கும். அவங்க கூட இருந்தா நேரம் போறதே தெரியாது',

தனிப்பட்ட முறையில் எனக்கு அமைதியா இருக்கிற பொண்ணுங்கள ரொம்ப பிடிக்கும். 

காரணம் என் அனுபவத்தில் அமைதியா இருக்கிற பொண்ணுங்களோட என்னால சுலபமா பழக முடிந்தது. ஒரு சில பொண்ணுங்க என் கிட்ட பேசுறத பாத்து பசங்க அதிர்ச்சியா ஆகிருவங்க. எப்படிடா அவ உன்கிட்ட பேசுற? 

அவ பசங்ககிட்டெல்லாம் பேசுவாளா? ரொம்ப அமைதியான பொண்ணாச்சே அப்படினு சொல்லுவாங்க;.

என் பள்ளிக்கூடத்துல திவ்யானு ஒரு பொண்ணு படிச்சா. அவளை சிரிக்க வைக்குறத விட அழுக வைக்குறது ரொம்ப சுலபம். எப்ப பாத்தாலும் அழுதுருவேன்னு இருக்கிற மூஞ்சி. ஆனா என் கூட மட்டும் நல்லா பேசுவா. இப்ப வரைக்கும் என்னோட தொடர்புல இருக்கா.

எனக்கும் என்னோட நண்பனுக்கும் நடுவுல எவ்வுளவு வித்தியாசம். அவனுக்கு திவ்யா மாதுரி பொண்ணுங்கள கண்டாலே ஆகாது. எனக்கு அவளை மாதுரி பொண்ணுங்க தான் நெருங்கிய தோழியா இருப்பாங்க.

இதே மாதுரி தான் பொண்ணுங்களுக்கும் இருக்கும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாதுரி குணம் உடைய பசங்கள பிடிக்கும். அந்த பொண்ணுக்கு எது பிடிக்கும்னு கண்டுபிடிச்சி நம்ம அந்த மாதுரி நடந்துக்குறது நல்லது.

எனக்கு 'நீங்க நீங்களாவே இருங்க அப்படினு' சொல்றதுல நம்பிக்கை இல்லை. நம்ம நம்மளாவே இருந்தா நிறைய பேரோட உறவுவைத்துக்கொள்ள முடியாது. சில உறவுகளுக்காக சில மாற்றங்கள் செய்வதே புத்திசாலியான விசயம்.

உறவு என்று சொன்னது நட்பாக இருப்பதை பற்றி...

இருப்பினும் உங்களுக்கு நான் பல குறிப்புகளை தருகிறேன்...

சில விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் அது மிகவும் சுலபம்.

மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அவர்களும் நம்மை போல ஒரு சக மனுஷி என்பதை உணர்ந்து அவர்களை மதிக்க வேண்டும்.

உணர்வுகளை புண்படுத்துதல் கூடாது - அவர்களின் கருத்துக்கு உண்டான மரியாதை கொடுக்க பழக வேண்டும்.

அழகினை தேடாதிருத்தல் - அவர்கள் கருப்போ, வெள்ளையோ, உயரமோ, குள்ளமோ அவர்களை அவர்களாக பார்க்க வேண்டும். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதனை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

தக்க நேரத்தில் உறுதுணையாய் இருக்கவேண்டும் - பெண்களுக்கு பொதுவாக பல்வேறு சிக்கல்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போதும், உடல்ரீதியாகவும் அவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்துதல்/கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது - நீ இதைத்தான் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய கூடாது. இவருடன் பேசக்கூடாது அப்படி எல்லாம் உங்கள் எண்ணங்களை அவர்கள் மேல் திணிக்க கூடாது. பிடிக்கவில்லை என்றாலும் பொறுமையாக கூறினால் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

சிரிக்க வையுங்கள் - உங்களுடன் இருக்கின்ற போதெல்லாம் அவர்களை முடிந்தவரை சிரிக்கவைத்து சந்தோஷமாக பார்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த பெண்ணுடன் பழகினாலும் அவர்களை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பழகுங்கள். பெண்ணை மதிப்பவர்களை பெண்கள் ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டார்கள்...

என்னால் முடிந்த வரையில் பல விஷயங்களை கூறியிருக்கிறேன் இதை நீங்கள் முறைப்படி பாலோ பண்ணினால் நிச்சயமாக உங்களாலும் முடியும்...
Previous Post Next Post

نموذج الاتصال