திருமணத்தில் முகம் சுளிக்கும் படியாக செய்யக் கூடிய சில விஷயங்கள் என்னென்ன?
கன்னிகா தானம்…
திருமண சடங்குகளில் இன்னமும் நடந்து வரும் வெற்று சடங்கு என்று என்னை முகம் சுளிக்க வைப்பது. தன அருந்தவப் புதல்வியான கன்னியை மணமகனுக்கு தாரை வார்த்து , தானமாக கொடுப்பதன மூலம் தந்தை தன பெண்ணின் மீதான சகல உரிமைகளையும் மனமகனுக்கே விட்டு கொடுக்கிறார் என்பதாம்.
இன்னும் எந்த காலத்திலே அப்பா இருககிறீங்க?
இத்தனைக்கும், தன குலம் தழைக்க பெண்ணை கொடுக்க வரும் பெண்ணின் தந்தைக்குத தான் மணமகன் பாத பூஜை செய்ய வேண்டும்..!! ஆனால்….
காலம் மாறி விட்டது. ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று பேசிக்கொண்டே, இந்த பக்கம் அந்த பெண்ணை தாரை வார்த்து கொடுக்கும் சடங்கில் ஏதேனும் அர்த்தம் தான் உள்ளதா?
இப்போதிருக்கும் நிலையில் காசிக்கு போகிறேன் என்று மாப்பிள்ளை கிளம்பும் சடங்கு கூட…. சரி தான்ப்பா போய்க்கோன்னு விட்டுறணும்.😀
மதுரை மீனாட்சி கல்யாணத்திலேயே சொக்கநாதர் கரத்தில் மீனாட்சியின் கரத்தை பிடித்து அழகர் கொடுக்கும் முக்கிய சடங்கு உண்டு…..ஆனால் ஒவ்வொரு வருடமும் அழகர் குறித்த வைத்த மாதிரியே தங்கை திருமணம் முடிந்த பிறகு ஊருக்கே வந்து சேருகிறார்!! அப்புறம் என்ன??!!
தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதை தான் நமக்கு தெரியுமே!!
தானத்தில் கிடைத்த பெண் தானே என்று தான் புகுந்த வீட்டில் அவளுக்கு கிடைத்த கொடுமைகளின் பட்டியலின் நீளத்தை சொல்லலாம்…
சங்க காலத்திலும் பெண்ணை தாரை வார்த்து கொடுத்து மணமுடித்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆனாலும், அவளுக்கு என்று சில உரிமைகளும் இருந்திருககிறது. கண்ணகி, கோவலன் உடன் இல்லாததால் விரும்போம்புதல் செய்ய முடியாமல் தவித்தேன் என்று தான் சொல்கிறாளே தவிர, பொருளின்றி வாடவில்லை.
திருமணத்தின் போது, மணமகனையும் மணப்பெண்ணையும் சைவ வழி என்றால், சிவபார்வதியாகவும், வைஷ்ண வழி என்றால், விஷ்ணு, லக்ஷமியாகவும் பார்க்கும் வழக்கம் இருந்தது. அதோடு கூட இந்த மூககனாங்கயிறு போல தாலி .கட்டும் நிகழ்வும் இல்லை….
இப்போது என்னவென்றால், சாற்றை விட்டுவிட்டு சக்கையை மட்டும் வைத்துக கொண்டிருக்கிறார்கள்.!!
இந்த 'தாலி' செண்டிமெண்ட் புளித்துப்போன சினிமா படங்களை பார்த்து பார்த்து பழகிப்போன ஒருவர் , இங்கு கேட்கிறார். "பெண்கள் திருமணத்திற்கு பிறகு தாலியை கழற்றி வைப்பதால் அவள் கணவனின் உயிருக்கு ஆபத்து வருமா?" என்று….தேவுடா….😁
ஏதோ …அந்த தாலியில் தான் அவனின் உயிரே இருப்பது போல….அப்படியானால் திருமணத்திற்கு முன்பு வரை அவன் உயிர் எங்கிருந்திருக்கும்?!!
இப்படி வெற்று கதை கேட்டுக்கொண்டு, அர்த்தமேயில்லாத சடங்குகளை திருமணத்தின் போது ஆடம்பரமாக செய்வதை விட, எளிய வகையில் கோயிலில் முடித்து, அந்த திருமணத்தையும் பதிவு செய்து, வந்தவர்களுக்கு வரவேற்பு பொம்மைகளை வைத்து வரவேற்காமல், விருந்து உபசாரம் செய்து அவர்களின் மனம் குளிர்ந்த ஆசீர்வாதங்களை மணமக்களுக்கு கிடைக்க செய்வதே அனைத்து உறவும் பலம் பெற ஒரே வழி!!
திருத்தம் :
சிலர், மற்ற மதத்தில் இது போல குறை சொல்ல முடியமா என்று கேட்கின்றனர்.. என்னுடைய குடும்பத்தில் உள்ள குறைகளை நான் சுட்டிக் காட்டலாம். ஆனால் அடுத்தவன் வீட்டில் நடப்பதில் எனக்கென்ன அக்கறை இருக்கமுடியும், அது என்னை பாதிக்காத வரையில்?
Tags
சுவாரசியமான தகவல்கள்