பெண்களை கவர்ச்சிகரமாக பார்ப்பதை நிறுத்துவது எப்படி?

பெண்களை கவர்ச்சிகரமாக பார்ப்பதை நிறுத்துவது எப்படி?


பெண்களை கவர்ச்சிகரமாக பார்ப்பதை நிறுத்துவது எப்படி?


இதுபோன்றகேள்விகள் என்னை நகைப்புக்குள்ளாக்குகின்றன.

முதலில் ஏன் பெண்களை கவர்ச்சிகரமாக பார்க்கக்கூடாது?

பெண்கள் ஏதேனும் அற்புத சக்தி படைத்தவர்களா?

இல்லை கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்களா?

தேவையின்றி பெண்களை மிகைப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து. பல கேள்விகளில் ஏன் ஆண்கள் பெண்களை இப்படிப் பார்க்கிறார்கள், அப்படி பார்க்கிறார்கள், அப்படி செய்கிறார்கள், இப்படி செய்கிறார்கள் என்பது போலவே கேட்கப்படுகின்றன.

இவ்வுலகில் ஜனனித்த உயிர்கள் அனைத்துமே சமம். நாம் ஆண்கள் என்பது போல, அவர்கள் பெண்கள் அவ்வளவுதான். நமக்குண்டான அனைத்து தேவைகளும்/தகுதிகளும் அவர்களுக்கும் உள்ளது. அவர்களுக்குண்டான அனைத்து மனம்சார்ந்த/உடல்சார்ந்த பிரச்சனைகளும் நமக்குள்ளது.

பெண்கள் ஆண்களை கவர்ச்சிகரமாக பார்க்கமாட்டார்கள் என்பதற்கான சான்றுகள் ஏதேனும் உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?

இயற்கையாகவே நாம் அனைவருமே மாற்றுப்பாலீர்ப்பு கொண்டவர்கள். அதனை எந்த திரை வைத்தும் மறைக்க இயலாது. பாலின ஈர்ப்பு என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. அதனை மறைத்து நல்லவன் போன்று சமுதாயத்திற்கு காட்டுக்கொள்வதினால் எந்த ஒரு பயனும் இல்லை.

நமக்கு தெரிந்தும் தெரியாமலும், நாம் காணும் அனைத்து எதிர்பாலினத்தவரையும் எதோ ஒருவகையில் ரசிக்கிறோம். பிறருக்கு அறிந்தும் அறியாமலும் அவர்கள் மீதே காதல் கொள்கிறோம். ஏன் ஒருவரை நாம் பிறர் அறியும்படி ரசித்தால் தான் அது கவர்ச்சிகரமான பார்வையாகுமா? எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதளவில் ரசித்தால் தவறில்லையா?

"பெண் என்பவள் பார்ப்பதற்கு, அழகு என்பது ரசிப்பதற்கு". அது அவளை துன்புறுத்தாத வகையில் இருக்குமாயின் எதுவும் தவறில்லை.

சமூகத்திற்காக இராமன்களாகவும், சீதைகளாகவும், நம்மை பிரதிபலிக்க நினைப்பதை நிறுத்திக்கொள்வோமே😊

உங்கள் எண்ணங்களில் நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய உண்மை முகம்.

நீங்கள் இருட்டில்(தனிமையில்) இருக்கும்போது வெளிப்படும் உங்களுடைய வெளிச்சம்(உண்மைமுகம்)

நாம் பிறரிடத்தில் நம்மை ஆயிரம் விதமாக காட்டிக் கொள்ளலாம். முகப்புத்தகத்தில் ஒரு முகம், இன்ஸ்டாகிராமில் ஒரு முகம், கோராவில் ஒரு முகம், சுய வாழ்க்கையில் ஒரு முகம். ஆனால் உங்களுக்கு தெரியும் நீங்கள் எப்படிப்பட்ட உண்மை முகத்தைக் கொண்டவர்கள் என்று.

உங்களுடைய எண்ணங்களுக்கும், உடல் ரசாயண மாற்றங்களுக்கும் ஏற்றார்போல செயல்படுங்கள். உங்களுடைய கட்டுப்பாடு என்னவென்று உங்களுக்கு மட்டுமே நன்கு தெரிந்த ஒன்று. தேவையில்லாமல் உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.

நன்றி😊
Previous Post Next Post

نموذج الاتصال