காலையில் எழுந்தவுடன் வயிறு முட்ட தண்ணீர் குடிப்பது நல்லதா?

காலையில் எழுந்தவுடன் வயிறு முட்ட தண்ணீர் குடிப்பது நல்லதா?


காலையில் எழுந்தவுடன் வயிறு முட்ட தண்ணீர் குடிப்பது நல்லதா?


வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லா மலமிலக்கியாக செயல்படும். அதற்காக வீம்புக்கு வயிறு முட்ட குடிக்க கூடாது.

அப்புறம் சிலர் சொல்லுவார்கள் தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்று. இவர்கள் எங்கிருந்து இதை ஆராய்ச்சி செய்தார்கள் என்று கேட்டால், வாட்சப் மெசேஜ் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்திருப்பார்கள்😂 தண்ணீர் குடிக்காமல் இருந்தால்தான் சிறுநீரகம் பாதிக்கும். உடம்பில் நீர் சத்து குறைந்தால் பல குறிப்பாடுகள் ஏற்படும்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் அதன் வேலையை செய்யாமல் இருந்தால்தான் பிரச்சனை, அதே போல எந்த உறுப்பும் தேவைக்கு அதிகமாக செயல்படவும் செய்யாது. அதுதான் நம் உடலின் மெக்கானிசம். 

நாம் ஒரே நேரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர், அதாவது வயிறு முட்ட தண்ணீர் குடிக்கும் போது இரண்டு மணி நேரத்தில் அது வெளியேறி விடும். சிறுநீரகம் அட போடான்னு கண்டுக்காமல் வெளியேற்றிவிடும்.

ஆனால் நாம் கண்டிப்பாக ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை எப்படி குடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். 

காலை எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு, இரண்டு டம்ளர், குளித்துவிட்டு இரண்டு டம்ளர், சாப்பிடும் முன் இரண்டு டம்ளர், சாப்பிட்டு முடித்துவிட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து இரண்டு டம்ளர், உடற்பயிற்சி செய்வதற்கு 15 நிமிடத்திற்கு முன் நான்கு டம்ளர், வெளியே கிளம்பு முன் இரண்டு டம்ளர், வெளியில் இருந்து வாந்தவுடன் இரண்டு டம்ளர், இரவு தூங்கும் முன் இரண்டு டம்ளர் என்று பிரித்து குடிக்க வேண்டும்.

எந்த அலோபதி மருத்துவரும் ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்லமாட்டார். நிறைய தண்ணீர் குடிங்க என்றுதான் சொல்லுவார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال