வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லதா? அதிலுள்ள மருத்துவ குணங்கள் என்ன?
வாரம் இரண்டு முறை வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
- நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
- சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும்.
- உடல் குளிர்ச்சி பெறும்.
- வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
- கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
- வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.
- வறட்டு இரும்பல் பிரச்சனையில் அவஸ்தைப்படும் நபர்களுக்கு வாழைத்தண்டை ஜூஸ் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
- வாழைத்தண்டை ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
- மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
- கல்லீரல் வலுவடையும்.
- சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் பொரியல் உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போகுதல் அதிகமான ரத்தப் போக்கு ஆகியவற்றை தடுக்க வல்லது.
- பெண்கள் தினந்தோறும் வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம்.
- கொழுப்பை குறைக்க உதவும்
- வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
- சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
- நெஞ்செரிச்சலை போக்கும்.
- உணவுப்பாதை சீராக வைக்க உதவும்.
குறிப்பு : வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரினை அதிகரிக்கும் ஆதலால் முதியவர்கள் வாரத்திற்கு இரண்டு தடவை எடுத்தால் நல்லது.
மேலும் வாழைத்தண்டு ஜூஸ் குளிர்ச்சியான வேலையை உடலுக்கு கொடுக்கும் அதனால் சளி இருக்கும் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
Tags
சுவாரசியமான தகவல்கள்