ஒரு பெண் உன் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு பெண் உன் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


ஒரு பெண் உன் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


அவள் என்ன செய்தாலும் அதை உங்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருப்பாள். நீங்கள் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையென்றாலும் கூட இன்னைக்கு வீட்டுக்கு அவங்க வந்தாங்க, சோ & சோ இது நடந்துச்சு, நான் பணியாரம் ட்ரை பண்ணுனேன் சரியா வரலனு எல்லாத்தையும் அப்டேட் செய்து கொண்டிருப்பாள். இது தான் முதல் அறிகுறி.

நீங்கள் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என்றாலும், அவளின் வெற்றிடத்தை நீங்கள் உணரக் கூடாது என்பதற்காக சுற்றி இருக்கும் சூழ்நிலை எவ்வளவு மோசமாக, பிஸியாக இருந்தாலும் உங்களுக்கு நேரம் ஒதுக்குவாள்.

லீவ் எல்லாம் ஏன் தான் வருதோனு இருக்கு. வீக்கெண்ட்ட எப்படி தான் கழிக்கபோறேனு தெரியல என்று நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காக இரவும் பகலும் நேரம் காலம் பார்க்காமல் எதிர் முனையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பாள்.

நீங்கள் தேட மாட்டீர்கள் என தெரிந்தும், கடைக்கு போறேன் போயிட்டு வர ஒரு மணி நேரம் ஆகும். வந்து பேசுறேனு சொல்லிட்டு போவாள்.

தினம் உங்களுக்கு கால் பண்ணி பேசும் அவளுக்கு ஒரு நாள் கூட நீங்கள் கால் பண்ணி பேசவில்லை என்ற வருத்தம் இருக்கும். நீங்களும் தேடுகிறீர்களா என்று செக் பண்ண ரெண்டு நாள் அமைதி காப்பாள். மூன்றாவது நாளும் நீங்கள் அழைக்கவில்லை என்றால் அவளாகவே வந்து பேசி விடுவாள்.

நீங்கள் என்ன ஸ்டேட்டஸ் வச்சாலும் ரிப்ளை பண்ணுவாள்.

நீங்கள் என்ன உதவி கேட்டாலும் ஏழு மலை தாண்டி போயேனும் செய்து விடுவாள்.

உங்களுக்கு எப்பொழுதும் available ஆக இருப்பாள்.

உங்களின் மகிழ்ச்சியை அதிகம் விரும்புவாள். உங்களை மகிழ்ச்சியாக வைக்க கிறுக்குத்தனமா எதையாவது செய்து கொண்டே இருப்பாள்.

நீங்கள் அவளை நிராகரித்தால் எவ்வளவு ஸ்ட்ராங்கான பெண்ணாக இருந்தாலும் லிட்டர் கணக்கில் அழுது விடுவாள்.

குடும்பத்தினரை பற்றி விசாரிப்பாள்.

உங்கள் வாட்சப் நம்பர் மட்டுமன்றி மற்ற எங்கெல்லாம் நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருப்பாள். ஒரு நாள் வாட்சப் பக்கம் ஆளை காணும் என்றால் உடனே அடுத்த வலைதளங்களுக்கு வந்து என்னாச்சு ஏதாச்சுனு விசாரிப்பாள்.

காத்து கொண்டிருப்பாள். நீங்கள் எவ்வளவு தாமதம் செய்தாலும் காத்துக் கொண்டே…… இருப்பாள்.

நீங்கள் எவ்வளவு தூரம் போனாலும் இழுத்துட்டு வந்துடுவாள்.

சுத்தி சுத்தி வருவாள். தன் இயலாமைகள் அத்தனையையும் ஒழிவு மறைவின்றி இயல்பாகவே வெளிப்படுத்துவாள்.

உங்களுக்கு இது தான் பிடிக்கும் என்று தெரிந்தால் அதை உங்களுக்கு காண்பித்துக் கொண்டே இருப்பாள்.

நீங்கள் கவலையாக இருக்கையில் மட்டும் நீங்களாகவே விரட்டினாலும் உங்களை விட்டு போக மாட்டாள்.

உண்மையில் உயிருக்குயிராக விரும்பும் பெண்ணிடமிருந்து வரும் ஆறுதல் இதமானது. உங்களை நேசிக்கும் அவள் கொடுக்கும் ஆறுதலைவிட சிறந்த ஆறுதலை மனிதர்களில் ஒருவரும் கொடுத்துவிட முடியாது.

உங்களுக்கு நம்பிக்கையை அதிகம் கொடுக்கும் நபர்களில் அவளின் பங்களிப்பும் இருக்கும்.

நீங்கள் விரும்பாதவரை ஓரமாகவே நின்று கொண்டு இருப்பாள். பிஸியா இருக்கீங்களா? என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்பாள்.

அவளின் பாசம் முடிவின்றி நீண்டு கொண்டே செல்லும். பழகும் உங்களுக்கும் தெரிந்துவிடும். திரை போட்டு மூடி வைக்க முடியாது அன்பை மட்டும். அதை உணர்ந்ததால் தான் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.

உங்கள் கணிப்பு சரி தான்.

அவள் நேசிக்கிறாள்…

இதெல்லாம் ரொம்ப இம்மெச்சூர்டா இருக்குல? ஆனால் இது தான் அவள். ஒருவரை உயிருக்குயிராக நேசித்தால் எல்லா பெண்களும் இதை தான் செய்வோம். அந்த கோட்டில் நின்று விட்டால் படித்த பெண் படிக்காத பெண். நைட்டி போடுற பெண் அரைக்கால் டிரவுசர் அணியும் பெண் என்ற அளவுகோல் எல்லாம் இல்லை.

நாங்கள் இப்படி தான்.
Previous Post Next Post

نموذج الاتصال