பெண்களால் மட்டும் தன்னைச்சுற்றி நடக்கிற விஷயங்களை ஆண்களைவிட அதிகமாக அறியமுடிவது எவ்வாறு?

பெண்களால் மட்டும் தன்னைச்சுற்றி நடக்கிற விஷயங்களை ஆண்களைவிட அதிகமாக அறியமுடிவது எவ்வாறு?


பெண்களால் மட்டும் தன்னைச்சுற்றி நடக்கிற விஷயங்களை ஆண்களைவிட அதிகமாக அறியமுடிவது எவ்வாறு?தன்னை சுற்றி நடப்பவை மட்டும் அல்லது சில விசயங்களில் பெண்கள் ஆண்களை விட வேறுபட்டு உள்ளனர் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

ஆண்களை விட பெண்களால் 20% அதிக நிறங்களை காணமுடியும். ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான நிறங்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் காண்பித்து பார்த்து இருக்கின்றனர். இதில் சுவாரசியமான தகவல் என்ன வென்றால் பெண்களின் மூளை நிறங்களை நன்று புரிந்து கொள்ளும் திறன் படைத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். உதாரணமாக பெண்கள் சிறிய வண்ண வேறுபாடு உடைய ஆடைகளை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கு மதுவின் விளைவு வலுவாக உள்ளது, ஏனெனில் ஆண்களைவிட பெண்களுக்கு உடல் எதிர்ப்பு குறைவாக உள்ளது. அந்தக் காரணத்தால் பெண்களுக்கு சிறிய அளவிலான மதுபானம் குடித்தால் கூட எளிதாக போதை அடைந்து விடுகிறார்கள்.

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை.

குழப்பமான நேரங்களில் சில ஆண்கள் தனக்குளேயே வைத்துக்கொள்வார்கள். ஆனால் சில பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவார்கள்.

ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள், நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடு வார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

வழக்கமாக உதட்டுச்சாயம் பயன்படுத்தும் எந்தவொரு பெண்ணும் சராசரியாக அவர்கள் விடுப்பு அல்லது விடுமுறை நாட்கள் தவிர வருடத்திற்கு 260 நாட்கள் பயன்படுத்தி கொண்டு இருப்பதாக தெரியவருகிறது. அதுமட்டும் இல்லாமல் வழக்கமாக உதட்டுச்சாயம் பயன்படுத்தும் பெண்கள் தன்னை அறியாமல் வருடத்திற்க்கு 0.45KG உதட்டுச்சாயத்தை உண்டு விடுவதாக தெரியவருகிறது.

உளவியல் ரீதியாக பெண்களில் பெரும்பாலோர் கணவன் தங்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தங்கள் கணவன் கூடுதல் எடை பெற கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் ஒரு சுவாரஸ்யமான உளவியல் உண்மை என்னவென்றால், தன் கணவன் எடை அதிகரித்துவிட்டால் மற்ற பெண்கள் அவரை பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறார்கள். பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. அதனால் அவர்கள் கணவருக்கு அதிக உணவிட்டு அவர்களை அதிக எடை உள்ளவர்களாக காட்சி அளிப்பது போல் மாற்றிவிடுகின்றனர்.

பெண்களில் பெரும்பாலோனோர் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் உடை அணிவதில்லை. அதாவது தங்கள் வசதியைப் பற்றி அதிகம் அக்கறையுடன் இருக்க மாட்டார்கள். கவர்ச்சிகரமானவர்களாக அல்லது நல்ல தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அக்கறையையே விரும்புவார்கள். துணி வாங்குவதில் ஆண்கள் எப்போதும் வசதியாக இருக்கும் ஆடைகளைக் விரும்புவார்கள், பெண்கள் மிகவும் பாணியிலான துணியைப் விரும்புவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கு வாசனை உணர்வு மிக உயர்ந்ததாக இருக்கிறது. அவர்கள் வண்ணங்களில் உள்ள வேறுபாட்டை உணர்வது போலவே வாசனையையும் எளிதில் வேறுபடுத்துவார்கள்.

உயரமான குதிகாலுடைய செருப்பு போர்களில் பயன்படுத்துவதற்கு முதலில் ஆண்களுக்கு தான் கண்டுபிடிக்க பட்டது. உயர் குதிகால் கொண்டவர்கள் சுலபமாக அம்புகளை எறிவதற்கு பயன்படுத்தினார்கள், சிறிது காலம் கழித்து பெண்கள் குறைந்த உயரம் காரணமாக அதை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆண்களின் முகபாவனைப் பெண்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். பெண்கள் ஆண்களை விட கூடுதல் உணர்வு உள்ளவர்கள். அவர்கள் கண் மற்றும் முகபாவத்தை வாசிப்பதன் மூலம் ஆண்களை எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். பெண்கள் பின்னால் நிற்கும் ஆண்களையும் கூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Previous Post Next Post

نموذج الاتصال