ஒரு ஆண் உடலுறவுக்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?
அது அவர்கள் பேசும், பழகும் விதத்திலேயே தெரியும்!
நீங்கள் மனசு விட்டு பேச நினைத்தால் அதற்கெல்லாம் அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள்…
நீங்கள் எந்த டாபிக்ல பேசினாலும் எப்படியாவது சுத்தி வளச்சு அதிலேயே வந்து நிற்பாங்க!
நீங்கள் சோகமா, கோபமா இருக்கும் பொழுது இல்ல புலம்ப நினைக்கும் போது, யாரிடமாவது கொட்டி மனசார வேண்டும் என நினைக்கும் போது, இவர்கள் இருக்க மாட்டார்கள்…
அவர்களுடைய இச்சைக்கு நீங்கள் செவிசாய்க்காமல் கொஞ்சம் பொறுமை காக்க சொன்னாலே பொறுமையாக இருக்க மாட்டார்கள்…! குறிப்பாக காம ஆசையோடு மட்டும் உலா வர்ர ஆண்களிடம் பொறுமை என்பது சுத்தமாக இருக்காது…!
ஒன்னு இல்லைனா இன்னொன்று என தாவ நினைப்பவர்கள் உங்களுடைய மனதை புரிந்து கொள்ளவோ, உங்களுடைய ஆசைகளை புரிந்து கொள்ளவோ, உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பற்றியோ உங்கள் கவலையை பற்றியோ எதுவும் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்… வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வாழ்பவர்கள் பெண்கள்! அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் எல்லாம் உங்களோடு ஈடுபட மாட்டார்கள்.
அதற்கான பொறுமை அவனிடம் இருக்காது, உங்களுடைய மனது சில சமயம் அலைபாயும் அந்த அலைபாயும் மனதை புரிந்து கொண்டு உங்களுக்காக அவனை சற்று மாற்றிக் கொண்டு இருக்க முயற்சிக்க மாட்டான்… ஆசை ஆசையாய் வாழைப்பழம் போல் பல வார்த்தைகள் பேசுவான் ஆனால் உங்களை சற்றும் புரிந்து கொள்ளாமல் இருப்பான். உங்கள் அழகை பற்றியோ உடலைப் பற்றியோ வர்ணனை செய்து கொண்டே இருந்தால் சற்று உஷாராக இருப்பது நல்லது!
அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான பேச்சுக்கள் அவனோடு நீங்கள் பேசவே முடியாது… அந்த கனெக்ட் ஏற்படாது. ஏனென்றால் நம் ஆளு அந்த பக்கம் இருக்கிற மூடே வேற மாதிரி இருக்கும்!
என்னை அவன் காதலிக்கிறான் என நினைக்கும் பல பெண்களிடம் நான் சொல்லுவது ஒன்றே ஒன்றுதான்…
உங்களை உண்மையாக காதலிக்கும் ஆண் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் உங்களுக்காக காம ஆசைகளை அடக்கி காதலோடு காத்திருப்பர்… வெறும் இச்சைக்காக பழகும் ஆட்கள் பழகிய சிறிது நாட்களிலோ அல்லது மாதங்களிலோ… படுக்கைக்கு உங்களை வர வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
என் மீது நம்பிக்கை இல்லையா, நாம காதல் பண்றவங்க தானே, நாம திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் தானே….
என ஏதாவது ஒரு எமோஷனல் மேனிபுலேஷன் செய்து உங்களை படுக்கையில் வர வைக்க முயற்சி மேற்கொண்டே இருப்பார்கள்…
இது காதலிப்பவர்கள் செய்வதென்றால் காதல் ஏதும் இல்லாமல் சகஜமாக பழகும் கொலீக்ஸ் இரவு நேரங்களில் பல மணி நேரம் சேட்டிங் செய்வது இன்டைரக்டாக காமத்தை பற்றியோ அந்தரங்க விஷயங்களை பற்றியோ கேள்வி கேட்பது ஏதாவது சொல்லிவிட்டு சும்மா ஃபண்ணுக்கு என அப்படியே ஸ்டார்ட் ஆகும் அதை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால் இப்படி எல்லாம் பேசணும் அவ ஒன்றுமே சொல்லவில்லையே என நினைத்து அப்படியே படிப்படியாக லீலைகளை ஆரம்பிப்பர்….
இத்தகைய ஆண்களிடம் நீங்கள் பொறுமையை கடைப்பிடித்தாலே அவர்களே விரக்தி ஆகி….இது ஒன்றும் வேலைக்கு ஆகாது என போய்விடுவார்.
கொஞ்சம் அழகு அதிகமாக இருந்தால் அவனும் தியாகி மாதிரி காத்திருப்பான் இவர்களிடம் நீங்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டு விரட்டி அடிக்க வேண்டும். நான் கூறிய பழக்கவழக்கங்களை விட உங்கள் மனதில் இன்டியூஷன் என்று ஒன்று இருக்கும் உங்களுடைய உள்ளுணர்வு அவன் காட்டும் அன்பு உண்மையானதா போலியானதா என உணர்த்தி விடும் அதை நம்புங்கள் ஊரே ஒருவனை நல்லவன் எனக் கூறுமனம் நம்ம மனசு மட்டும் என்னமோ இடிக்குது என சொல்லும் பல வருடங்கள் கழித்து அது உண்மையாக இருக்கும் எனவே உள்ளுணர்வை நம்புங்கள்!
முதலில் கெஞ்சிப் பார்ப்பார்கள், பிறகு கொஞ்சிப் பார்ப்பார்கள்… எதற்கும் நீங்கள் அசையவில்லை என்றால் மிரட்டி பார்ப்பார்கள்…. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவனுக்கு உங்கள் மீது அன்பு, அக்கறை, காதல் இல்லை.வெறும் அரிப்புக்காக மட்டுமே பழகி இருக்கிறான் என்று.
காதலிக்கும் பல பெண்கள் விடாப்படியாக எதுவாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தான் எனக் கூறிப் பாருங்கள்…. பொறுமை காக்காமல் செல்லும் ஆண்கள் உங்களுடைய காதலர்கள் அல்ல… அவர்களை நினைத்து நீங்கள் கவலைப்படவும் வேண்டாம்… தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுங்கள்.
காதல் எல்லாம் இல்லை… கூட வேலை பார்க்கிறவன், பக்கத்து வீட்டுக்காரன், கூட படிக்கிறவனே இப்படி பேசுகிறான் என்றால் அவர்களிடம் சற்று காராக பேசி விடவும், ஒதுங்கி விடுவார்கள்.
பதில் 2
ஆண் என்பவன் பெண்ணை உடலுறவுக்காக நாடிச் செல்லுமாறு தான் நம்முடைய மனித இனம் ஆதி காலம் தொட்டே பரிணாம பட்டு வந்திருக்கிறது…
எந்த பெண்ணும் தான் உடலுறவு கொள்ள விரும்பும் எண்ணத்துடன், ஒரு ஆணை அனுகும் சுதந்திரத்தினை இந்த சமூகமும், பரிணாம வளர்ச்சியும் வழங்கவில்லை…
காம எண்ணமும்,உடலுறவும்தான் இந்த உலகத்தின் ஆதாரப்புள்ளி..உயிர்கள் பன்னெடுங்காலமாக பல்கி பெருகுவதற்கு உடலுறவு தான் காரணமாக இருந்து வந்திருக்கிறது..
அவ்வாறிருக்கும போது உடலுறவு என்ற விசயத்தினை பெண்களும் அணுகும் சுதந்திரத்தினை வழங்க இந்த சமுதாயம் முன்வரவேண்டும்.
என்னடா கேள்விக்கு சம்பந்தமே இல்லாம பதில் சொல்லிட்ருக்கானேன்னு நீங்க நினைக்கிறது புரியுது..
ஆண் பெண் ஈர்ப்பு இயற்கைலயே இருக்கும் போது, பெண்களுக்கு அதற்கான சுதந்திரம் வழங்காத போது, எல்லா ஆணும் ஒரு பெண்ணை அனுகும் போது, இறுதியில் பெரும்பாலும் உடலுறவு என்னும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதில் இயற்கையின் வழியில் தவறேதும் இல்லை…
சமுதாயம் ஒழுக்கம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தெல்லாம் இருக்கட்டும் அத பத்தி இப்ப பேசல.. ஆனா ஒரு ஆண் பெண் உடலுறவு என்பது அவ்வளவு சாதாரணமாக நடந்து விடாது…எவ்வளவு மோசமான ஆணா இருந்தாலும் பிடிக்காத ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ள முடியாது… அதனால உடலுறவுக்காக மட்டும் ஆண்கள் பழகுறதுன்னு கேள்வியே தவறு.. உடலுறவு நோக்கமாக இருந்தாலும் அந்த பொண்ண பிடிச்சு, பிடிக்க வச்சு ஒரு ஆண் அவளோட மனசயும் உடலையும் திருப்தி படுத்தி அவனும் திருப்தி அடையுறது என்பது இயற்கையின் நியதி படி மிக சரியே…
மத்த படி உடலுறவுக்கு ஒரு பெண்ணை தயார் படுத்துற அளவுக்கு பக்குவமோ, அவளை கையாளும் விதம் தெரியாத ஆண்கள் இங்க அதிமாக இருக்கதால, எடுத்த எடுப்பிலயே ஆண் செய்யும் தவறு அவள உடலுறவுக்காக நெருங்குறத அப்டியே அப்பட்டமா அந்த பெண்ணுக்கு தெரிவிச்சுடுறான்…
பெண்களும் இந்த மாதிரியான தொல்லைகளை தரும் ஆண்களையே அதிகம் சந்திக்கிறதால, ஆண்கள்னாலே உடலுறவுக்காக மட்டும்தான் பெண்கள தேடி அலையுறாங்க போலன்னு ஆண்மேல ஒரு பிம்பத்தை உருவாக்கிடுறாங்க..அதுக்கு காரணமும் ஆண்கள்தானே…
முடிவா என்ன்சொல்றதுன்னா, காமம் தவறான விசயம்னு ஆண் பெண்ணோட உள் மனசுக்கு தோனுறது இல்லவே இல்ல…ஆனா இந்த சமுதாயமும் காமத்துக்காக ஆண்கள் மேற்கொள்ளுற தவறான அணுகுமுறையும்,வழிமுறைகளும் தான் காமத்த பத்தின தப்பான பிம்பத்தை பொண்ணுங்களுக்கு குடுத்துருது..அதோட விளைவுதான் சுமுதாயத்துல இந்த மாதிரி கேள்விகள் எழ காரணம்..
Tags
சுவாரசியமான தகவல்கள்