பெண்களுக்கு எது போன்ற உடலமைப்பு கொண்ட ஆண்களை மிகவும் பிடிக்கும்?

பெண்களுக்கு எது போன்ற உடலமைப்பு கொண்ட ஆண்களை மிகவும் பிடிக்கும்?


பெண்களுக்கு எது போன்ற உடலமைப்பு கொண்ட ஆண்களை மிகவும் பிடிக்கும்?


அதிரசத்தை விட அதிரச மாவு தான் செம டேஸ்ட்டா இருக்கும்னு உண்மையை சொன்னா இந்த உலகம் நம்பவா போகுது?

அப்படித்தான் பெரும்பாலான பெண்கள் ஆணின் உடலமைப்பை கருத்தில் கொள்வது இல்லை என்ற உண்மையையும் உலகம் நம்பாது. உடனே அப்படினா மாற்றுத்திறனாளிகளை பெண்கள் கணவனாக ஏற்றுக் கொள்வார்களா என்று குதர்க்கமாக கமெண்ட் எழுத வேண்டாம். 

நாம இப்ப அந்த 16 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுதவில்லை. அந்த கேள்விக்கு விடை எழுதும்போது சப் டைட்டில் போட்டு, அடிக்கோடிட்டு, கருப்பு பேனா எல்லாம் யூஸ் பண்ணி கலர் கலரா பதில் எழுதுறேன். இப்போதைக்கு எந்த உடலமைப்பை பெண்கள் விரும்புகிறார்கள் அல்லது ரசிக்கிறார்கள் என்ற ஒரு மதிப்பெண் கேள்விக்கே விடை எழுதுவோம்.

என்ன நினைக்கிறீங்க? சட்டையை கழற்றினால் ஹிருத்திக் ரோஷன் மாதிரி ஆறு பேக் இருக்கணும்னு பெண்கள் எதிர் பார்க்கிறார்கள்ன்னா?

ஒரு ஆணை திரையில் ரசிப்பதற்கும் நேரில் ரசிப்பதற்கும் ஆயிரத்தெட்டு வித்தியாசம் இருக்கு. திரையில் கடைசி ஒரு பட்டன் மட்டும் மாட்டிவிட்டு, சொட்ட சொட்ட நனைந்து விட்டு கடலுக்குள் இருந்து 6 பேக்கையும் காண்பித்துக் கொண்டே ஒரு ஹீரோ வந்தால் ரசிக்கிறோமோ இல்லையோ எங்கள் எதிர் வீட்டு பையன் ராம்ராஜ் பனியன் (வெள்ளை கலர் பனியன் மட்டும்) அணிந்து கொண்டு காலங்காத்தாலே சோம்பல் முறிக்கும் அழகை ரசிக்க தான் செய்கிறோம்.

ஒரு ஒரு பெண்களுக்கும் ஒரு ஒரு ரசனை, ஒரு ஒரு ஒரு எதிர்பார்ப்புகள் இருக்கும் அதனால் இக்கேள்விக்கான பெரும்பான்மை மனநிலை என்ன என்பதை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், ஆண்களின் உடலமைப்பு பெண்களின் பார்வையில் ஒரு விசயமே இல்லை என்பது தான்.

ஆனாலும் மெலிந்த தேகம் கொண்ட ஆண்மகனை பெண்கள் பெரிதளவில் ரசிப்பது இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அதாவது நோஞ்சாசன் மாதிரி இருக்கும் ஒரு ஆண்மகனை பெண்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள சற்று தயக்கம் காட்டுவார்கள் என்பதையும் மறுக்க முடியாதே. 28 வயது ஆண் மகன் வெறும் 45 கிலோ எடையுடன் இருந்தால் பெரும்பாலான பெண்கள் ரசிப்பது இல்லை என்பது உண்மை தான்.

காரணம் இது தான்.

ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் முதல் ஒன்று பாதுகாப்பு. அப்படியெல்லாம் இல்லை ஆண்களை சார்ந்து ஒன்றும் எங்களின் பாதுகாப்பு இல்லை என்று மேடை ஏறி பேச சொன்னால் நானும் நானூறு பக்கத்துக்கு பேசி கோப்பையை வாங்கிட்டு வந்துடுவேன். ஆனாலும் சில நிதர்சனமான உண்மைகளை மறுக்க முடியாது. ஒரு ஆண் தன் சந்ததிக்காக ஒரு பெண்ணை எதிர்பார்த்து நிற்கிறான் என்றால் பெண்களும் பாதுகாப்பு மற்றும் எண்ணற்ற காரணங்களுக்காக ஒரு ஆணை சார்ந்து தான் வாழ வேண்டியது இருக்கிறது. அது அழகு தான்.

நல்லது, சமூகத்தில் அனைவரும் யாரோ ஒருவரை சார்ந்து வாழ்வது. நிச்சயமாக அது அழகும் ஆரோக்கியமும் கூட.

இப்படி தனக்கான அரவணைப்பு, பாதுகாப்பு, தோழமை மற்றும் பல உயிருள்ள காரங்களுக்காக தான் ஒரு பெண் ஆணை தேடுகிறாள் என்பதால் அப்படி தேடும் அந்த நபர் 6 பேக் வைத்திருப்பவராக இருக்கணும்னு அவள் எதிர்பார்ப்பது இல்லை. இந்த உடலமைப்பு எல்லாம் ஒரு ஆணை ரசிக்க தேவையான கடைசி காரணம் தானே தவிர அதுவே முதன்மை காரணம் அன்று.

இல்லை, இவன் 43 கிலோவாவே இருந்தாலும் என்னை வச்சி காப்பாத்திடுவான் என்று ஒரு பெண் நினைத்து விட்டால் அந்த ஆணை தன் துணையாக ஏற்க தயங்கவே மாட்டாள். பெண்களுக்கு நம்பிக்கை தான் முக்கியம்.

அதர்வாவை விட யோகிபாபுவையும், விஜய் சேதுபதியையும் தான் நிறைய பெண்களுக்கு பிடிக்கும். அப்புறம் ஏன் யோகிபாபு போன்ற ஆண்களை பெண்கள் மணப்பது இல்லையென்று எல்லாம் கேள்வி கேட்காதீர்கள் யோகிபாபுவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு.

இருந்தாலும் குறைந்த பட்சம் 5'7 அடி உயரமும், ஒரு 68–70 கிலோ எடையும் இருந்து அந்த ஆண் மகனை பார்க்கையில் அவனை நமக்கு பிடித்தும் இருந்தால், சரி யார் பெத்த மஹாராசனோ நம்மள வச்சி எப்படியும் காப்பாத்திபுடுவான், தினம் கஞ்சி ஊத்துறானோ இல்லையோ S.S ஹைதிரபாத் பிரியாணியாவது வாங்கி குடுத்துபுடுவான்னு நம்பிக்கை வர தான் செய்கிறது என்பதிலும் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.
Previous Post Next Post

نموذج الاتصال