நெஞ்சு எரிச்சலுடன் கூடிய ஏப்பம் அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு என்ன தான் தீர்வு...?

நெஞ்சு எரிச்சலுடன் கூடிய ஏப்பம் அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு என்ன தான் தீர்வு...?


நெஞ்சு எரிச்சலுடன் கூடிய ஏப்பம் அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு என்ன தான் தீர்வு...?


நெஞ்சில் எரிச்சல், ஏப்பம், அடிக்கடி ஏற்படுகிறது. மருத்துவம் பார்த்தால் அல்சர் என்று கூறுகிறார். இப்பிரச்சனை 15 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது, தீர்வு என்ன?

இரைப்பை உணவுக்குழாய்க்குரிய பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும் இது 0.5 செ.மீ.க்கும் அதிகமாகவோ சமமாகவோ இருக்கும் மியூகோசல் அரிப்பு என்று விவரிக்கப்படுவது.

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமானப் பகுதி உட்புறத்தின், மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் எனப்படுகிறது. பொதுவாக வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும் இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்க வல்லது.

இது பொதுவாக அமிலத்தன்மை உடையது. அதனால் மிக அதிக எரிச்சல் மற்றும் வலியுடையதாக இருக்கிறது.

80% சீழ்ப்புண் ஹெலிகோபேக்டர் பைலோரியுடன் தொடர்புள்ளது. இது வயிற்றில் உள்ள அமிலத்தை சுற்றி வாழும் ஒரு சுருள் போன்ற நுண்கிருமியாகும்.

ஹெலிகோபேக்டர் பைலோரி தான் சீழ்ப்புண்களுக்கான ஒரு காரண காரியாக இருப்பதை, 1982 ஆம் ஆண்டில் இரு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளான ராபின் வாரென் மற்றும் பார்ரி ஜெ. மார்ஷல் ஆகியோரால் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தப் புண் எளிதில் ஆறுவது இல்லை. என தாயார் இதனால் மிகவும் அவதிப்பட்டார்.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவு பழக்கங்களை மாற்றி சற்று நிவாரணம் பெறலாம்.

அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தியெடுத்து விடும்.

அவர்கள் மது, சிகப்பு இறைச்சி, காபி, காரமான உணவு, சோடா, குளிர்பானங்கள், புகை பிடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

குடல் புண்ணில் ஓட்டை ஏற்பட்டு இருந்தாலோ அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டாலோ உடனடிச் சிகிச்சை அவசியமாகும்.

பொதுவாக இதற்கான சிகிச்சை முறைகள் புண் ஆறுவதற்கான முறைகளாகவும், அது மீண்டும் ஏற்படாத வகையிலும் அமைக்கப்படுகிறது.

வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல், புகை பிடித்தலைத் தவிர்த்தல், மது அருந்தாதிருத்தல், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்தல் போன்றவற்றின் மூலமும் குடல் புண்ணைத் தவிர்க்க இயலும்.
Previous Post Next Post

نموذج الاتصال